Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

குடியரசு என்பதன் நேரடிப் பொருள், “மக்களாட்சி’. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப் படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கி ன்றனர். குடிய ரசு நாட்டின் தலைவர், குடிய ரசு தலைவர் அல்லது ஜனாதி பதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். சில நாடு களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி யாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படு கிறார். இம் முறைதான் இந்தி யாவில் பின்பற்றப்படுகிறது .

எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர் களும் ஆங்கிலேயரிடம் இரு ந்து “டொமி னியன்’ அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன் படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள் கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகி ப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள் ளிட்டோ ர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுய ராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர் களிடம் மாற்றம் வந் தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம்பெற்றபோது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினி யன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவ ர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களா ல் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக்கூடாது என்பதற் காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியல மைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள் ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடை முறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி

 உருவா க்கப்பட்டது.

அடிப்படை கடமை கள்: இந்திய அரசிய லமைப்பு சட்டம், பகுதி 5ல் மக்களின் அடிப்படைக் கடமை கள் பற்றி குறி ப்பி

டப்பட்டு உள்ளது.

* தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதி த்து நடக்க வேண்டும்
* அனைவரும் நாட்டுக் காக சேவை செய்ய தயா ராக இருக்க வேண்டும்.
* ஜாதி, மதம், இன பாகு பாடின்றி சகோதர மனப்பான்மையோடு ஒன்றாக பழக வேண்டும்.
* பாரம்பரியம், கலாசாரத்தை பின் பற்ற வேண்டும்.
* இயற்கை வளங்களை பாது காக்க வேண்டும்.
* வளர்ச்சிக்கு வித்திடும் வகை யில், அறிவியல் மற்றும் மனிதா பிமான உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
* அரசு சொத்துக்களை பாதுகா க்க வேண்டும்.
*6-14வயது குழந்தைகள் கல்வி பெறுவது அவசியம்.

எதிரிகள் ஜாக்கிரதை: இந்திய பாதுகாப்பு படைகளில், தரைப்ப டையே (ராணுவம்) பெரியது. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள், அமைதியை நிலை நாட்டல், பயங்கரவாத எதி ர்ப்பு ஆகியவை இவற்றின் பணி.

மத்திய படைப் பிரிவு: இது, உ.பி., யில் உள்ள லக்னோவை தலை மையகமாக கொண்டது. இதன் தலைவர் (கமாண்டர் ஆப் சீப் – ஜி.ஓ.சி.,) ஓம் பிரகாஷ்.

கிழக்கு படைப்பிரிவு: கோல் கட்டாவை தலைமையகமாக கொண் டது. இதன் தலைவர் குல்திப் சிங் ஜம்வால்.

வடக்கு படைப் பிரிவு: காஷ்மீ ரில் உள்ள உதம்பூரை தலை மையகமாக கொண்டு செயல் படும் இதன் தலைவர் ஹர் சரண் ஜித் சிங் பனாக்.

தெற்கு படைப்பிரிவு: 1895ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவானது, சுதந்திரத் தின் போதும், இந்திய மாகாண ங்கள் பிரிக்கும் போது முக்கிய பங்கு வகித்தது. தவிர, 1961ல் கோ வாவை இணைக்கும் போதும், 1965 மற்றும் 1971ல் நடை பெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் சிறப்பாக செயல்பட் டது. மகாராஷ்டிராவில் உள்ள புனேயை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதன் தலை வர் நோபல் தம்பு ராஜ்.

தென் மேற்கு படைப்பிரிவு: ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப் பூரை தலைமையகமாக கொ ண்டு துவங்கப்பட்டது. இதன் தலைவர் பர்மேந்திர குமார் சிங்.

மேற்கு படைப்பிரிவு:1947ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த படைப்பிரிவு, அரியானா மாநிலத்தில் உள்ள ஜந்தர்மந்தரை தலைமையிடமாக கொண்டது. இதன் தலைவர் தல்ஜித் சிங்.

வேண்டும் விமானம் தாங்கி கப்பல்: ராணுவப் பாதுகாப்பு படைப் பிரிவில், விமானம் தாங்கி கப்பல்களுக்கு தனி இடம் உண்டு. அண்டை நாடுக ளுடன் போரிடும் போது,போர் விமானங்களை தாங்கிச் சென் று எளிதில் தாக்கும் வகையி ல் இவை வடிவமைக்கப்பட்டு ள்ளன. இந்தியாவில், 28,700 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ்.விராத் என்ற விமானம் தாங்கி கப்பல் 1987ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர, ஐ.என்.எஸ்., விக்ர மாதித்யா (2012), ஐ.என் .எஸ்., விக் ராந்த்(2014), ஐ. என்.எஸ்., விஷால்(2017) ஆகிய கப்பல் கள் கட்டுமானப் பணியில் உள்ளன.

பாசறை திரும்புதல்: குடிய ரசு தின விழா முடிந்து, மூன் று நாட்கள் கழித்து படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 29ம் தேதி மாலை மூன்று படைகளும் இவ்விழாவில் பங்கேற்கும். ராஷ்டிரபதி பவ னில் விஜய் சவுக் என்ற பகு தியில் இந்த நிகழ்ச்சி நடக்கி றது. தரைப் படை, கடற் படை, விமானப்படையின் “பேண்டு’ வாத்திய இசையுட ன் விழா துவங்குகிறது. ஜனா திபதி தனது பரிவாரங்களு டன் இந்த விழாவுக்கு தலை மை ஏற்கிறார். ஜனாதிபதி க்கு “சல்யூட்’ அளிக்கப்பட்டு, “பேண்டு’ வாத்தியம், “டிரம்பட்’டில் தேசிய கீதமும் இசைக்கப்படு கிறது. ஜனாதிபதி வணக்கம் செலுத்துவதுடன் படை திரும்புதல் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

கொள்ளை கொள்ளும் குடி யரசு அணிவகுப்பு: 1950ம் ஆண்டு ஜன.26ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந் த நாளை ஆண்டுதோ றும் குடியரசு தினமாக கொண் டாடுகிறோம். 1930ம் ஆண் டு ஜனவரி 26 அன்று, இந்திய விடு தலை இயக்கத்தினர் “பூரண சுதந்திரம்’ அடைய தீர்மானம் நிறை வேற்றினர். அந்த தினத்தை நினைவு கூரும் வகையில் ஜன .26, குடியரசு தினமாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. குடியரசு தின விழாவில் ராணு வ அணிவகுப்பு முக்கிய இடம் பெறுகிறது. தலைநகர் டில்லி யில் உள்ள இந்தியா “கேட்டில்’ பிரதமர் வீர வணக்கம் செலுத்தி விழாவை துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி மூவர்ணக் கொடி யை ஏற்றி வைக்கிறார்.

ராணுவ அணிவகுப்பின் சிறப்பம்சங்கள்:

* காலை 9.30க்கு துவங்கும் அணிவகுப்பு மூன்று மணி நேரம் நடக்கிறது.
* ஐந்து கி.மீ., தூரமுள்ள “ராஜ் பாத்’ சாலையில் அணி வகுப்பு நடக்கும். இது ராஷ்டிரபதி பவ னில் ஆரம்பித்து செங் கோட் டை, இந்தியா “கேட்’ வழியாக செல்கிறது.
*அணிவகுப்பு துவக்கத்தின் போது பிரதமர், இந்தியா “கேட் டில்’ உள்ள அமர் ஜவான் ஜோதி யில், போரின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்.
* ஜனாதிபதி 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
*தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற வரிசை யில் அணிவகுப்பு நடைபெறு ம்.
* இந்திய கலாசாரம், பண்பா ட்டை பிரதிபலிக்கும் வண்ண ம் அணிவகுப்பு நிகழ்ச்சி இரு க்கும்.
* இறுதியில் விமான சாகசம் நடக்கும்.
* இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,200 பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெறும். மாநிலங்களின் கிராமியக் கலை நிகழ்ச்சியும், பழங் குடி இனத்தவரின் நடனமும் இதில் இருக்கும்.
* முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கண் டு களிக்க முடியும்.
* அணிவகுப்புக்கு மொபைல், கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல் ல அனுமதியில்லை.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவ பலம் என்ன? (click to know)

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: