Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்வெளி ஆச்சர்யங்கள்

நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண் வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற் கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடை த்துக் கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண் கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற்றைப் பற்றிய சில தகவல்கள் இங்கே..
1. சூரியனில் ஆண்டுக்கு ஏழு முறை கிரகணம் தோன்றுகிறது.
2. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ.
3. அண்டார்டிகாவில் செப்டம்பர் 21-ஆம் தேதி மட்டும் சூரியன் உதய மாகும்.
4. விண்வெளியில் பயணம் செய்த முதல் மிருகம் லைக்கா (Laika) என்ற நாய்.
5. விண்வெளி வீர்ர்களுக்கு உணவாகப் பயன்படுவது பாசி குளோரெல்லா.
6. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும்.
7. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள 23 மணி நேரமும் 56 நிமிடங்களும் ஆகின்றன.
8. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா.
9. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண் களாலேயே நம்மால் பார்க்க முடியும்.
10. பூமி விண்வெளியில் சுமார் 1,07,343 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
11. சூரிய கிரகணம் சுமார் 8 நிமிடங்கள் மட்டுமே நிகழும். ஆனால் சந்திர கிரகணம் 10 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம்.
12. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும்.
13. சூரிய வெளிச்சத்தில் பூமியின் நிழல் சுமார் 8,59,000 மைல்கள் தூரம் விழும்.
14. ஒரு விண்மீன் வெடித்துச் சிதறும் ஒளி, நம் கண்ணுக்குத் தெரிய ஆகும் காலம் 1,70,000 ஆண்டுகள்.
15. 1866-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியே தோன்றவில்லை. அதே ஆண்டு ஜனவரி மற்றும் மர்ர்ச் மாதங்களில் இரண்டு பவுர்ணமி கள் தோன்றின. இது போன்று அதிசயம் 25 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் தோன்றுமாம்.
16. ஒவ்வொரு வருடமும் பூமியிலிருந்து 3.82 செ.மீ தூரம் நிலா விலகிச் செல்கிறது.
17. சூரிய மண்டலத்தைப் பற்றிய படிப்பு ஆஸ்டீரியோலஜி எனப்படும்.
18. உலக அளவில் ஆண்டுதோறும் 800 கோடி டன் கார்பன்-டை- ஆக்ஸைடு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களால் நாம் இயற் கையை மாசுபடுத்துவதால் வளி மண்டலத்திற்குள் திணிக்கப் படுகிறது.
19. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 3,64,000 கி.மீ
20. உலகிலேயே முதல் வான்வெளிப் புகைப்படம், அமெரிக்க உள் நாட்டுச் சண்டையின்போது பாராசூட்டிலிருந்து எடுக்கப்பட்டது.
21. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர் காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன.
22. மனிதனை விண்வெளிக்கு அனுப்பிய 14வது நாடு இந்தியா.
23. 1970ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி பூமியிலிருந்து இயக்கப் பட்ட லூனா கோடி என்ற ஆளற்ற ஓடமே சந்திரனில் இறங்கிய முதல் ஓடமாகும்.
24. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின்சக்தி கொண்டது.
25. நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.
26. நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாகப் பார்த்தவர் கலிலி யோ.
27. பூமி சந்திரனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில். பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.
பூமியிலிருந்து சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நிலைநிறுத்தப்பட்ட செயற்கை கோள் மூலம் பூமியின் நடவடிக்கை களை கண்காணிக்கலாம். அதாவது பூமியின் ஏதாவதொரு இடத் தில் நடக்கும் சம்பவங்களை, சிக்னல்கள் அனுப்பியும் பெற்றும் கண் காணிக்க முடியும். சாதாரணமாக ஒரு தெருவில் கீழே கிடக்கும் ஒரு தபால் தலையின் அச்சிடப்பட்ட முகத்தைக் கூட பார்க்க முடி யும் என்பதே இதன் சிறப்பு. இந்த தொழில்நுட்ப உதவியைக் கொண் டு சீற்றங்களை முன் கூட்டியே அறியலாம். இந்தப் புவி ஆய்வு முறை யை ஆங்கிலத்தில் Global Positioning System (GPS) என்று அழைக் கிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுவது நமக்குத் தெரியும். அதேபோல் விண் வெளியின் மையத்தைச் சூரியன் சுற்றும். வட்டப் பதையில் இது நொ டிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும். ஒரு முறை மையத் தைச் சுற்றி முடிக்க 250 மில்லியன் வருடங்களாகும். இது ஒரு காஸ் மிக் வருடம் (Cosmic year) எனப்படுகிறது.

இன்னும் நம் கண்களுக்குப் புலப்படாத பல அதிசயங்கள் வான் வெளியில் உள்ளன. எத்தனை எத்தனையோ புதுமைகள் கிடைக் கப்பெறலாம். வளர்ந்து வரும் விஞ்ஞானமே இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

thanks to indra

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: