
அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், திருமணம் பாதியில் நின்றது. இது குறித்து பெண் வீட்டார், வாணியம்பாடி போலீசில் அன்று இரவு புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த சிலரை அழைத்து விசாரித்த போது, சதீஷ் பெங்களூரில் இரு ப்பது தெரிந்தது. போலீசார், பெங்களூருசென்று சதீஷை வாணியம் பாடிக்கு கொண்டு வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் நேற்று இரு வீட்டாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ், “நாட்டறாம்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண், 100 சவரன் நகை யை வரதட்சணையாக கொடுத்து தன் னை திருமணம் செய்ய தயாராக இருப்ப தாகவும், ஆனால், பிரீத்தி வீட்டார், 25 சவரன் நகை மட்டும் வரதட் சணையாக கொடுத்ததாகவும், இதனால் பெங்களூருக்கு ஓடிவிட்ட தாகவும் 100 சவரன் நகை போட்டால் பிரீத்தியை திரு மணம் செய்து
கொள்வதாக’ கூறினார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், இப்போ தைக்கு, 25 சவரன் நகைகள் தான் போட முடியும் என்றும், பாக்கி நகைகளுக்கு இரு ஆண்டில் போடுவதாக பத்திரம் எழுதிக் கொடு ப்பதாக கூறினர்.
“இப்போதே. 100 சவரன் நகைகள் போட்டால் தான் பிரீத்தியை திரு மணம் செய்து கொள்வோம்’ என கூறி விட்டு, சதீஷ் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதைக் கேட்ட பிரீத்தி ஆத்திரமடைந்தார். “நகைக்காக திருமணத்தை நிறுத்தி விட்டு ஓடிய வரை திருமணம் செய்ய மாட்டேன்’ என, உறுதியாகக் கூறி, தர்ம அடி கொடுத்து சதீஷையும், அவரது குடும்பத்தினரையும் ஓட ஓட விரட் டினார்.