Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் ஃபைன் இன்று முதல் உயர்வு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்க‍ப்படும் ஸ்பாட் ஃபைன் தொகை இன்று முதல் உயர்த்த‍ப்படுகிறது.

அதன் விவரம்

குற்ற‍ங்கள் – புதிய அபராத தொகை

ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது – ரூ.100 முதல் ரூ.300

அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது  – ரூ.100

இன்சூரன்ஸ் இல்லாத வணிக ஆகனங்கள் – ரூ.1,000 (முதல் தடவை) – ரூ.1,000 (2ஆவது தடவை)

இன்சூரன்ஸ் இல்லாத கார் – ரூ.700 முதல் ரூ.1,000 வரை

இன்சூரன்ஸ் இல்லாத இரு சக்க‍ர வாகனம்  – ரூ.500 முதல் முறை – ரூ.1,000 2ஆவது முறை)

கூடுதல் பாரத்தை குறைக்க‍ மறுத்த‍ல் – ரூ.3,000

அதிகம் பாரம் ஏற்றுதல் – ரூ.2,000

பெர்மிட் விதிகளை மீறுதல் – ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை

பதிவுக்கு முன்பு வாகனத்தை ஓட்டுதல் – ரூ.2,500 முதல் ரூ5,000

வாகனத்தை மாற்றியமைத்த‍ல் – ரூ.500

அனுமதியின்றி ரேஸ் – ரூ.1000 முதல் ரூ.2000 வரை

உடல், மனதளவில் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டுவது – ரூ.200 முதல் ரூ.500 வரை

அதிவேகமாக வாகனம் ஓட்ட‍க் காரணமாக இருப்ப‍து – ரூ.300 முதல் ரூ.500 வரை

அதிவேகமாக ஓட்டுவது – ரூ.400 முதல் முறை – ரூ.1000 2ஆவது முறை

ந‌டத்துனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் – ரூ.100

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் – ரூ.500

சட்ட‍த்திற்கு முரணாக வாகனம் ஓட்டுதல் – ரூ.500

வாகனம் ஓட்ட‍த் தெரியாமல் ஓட்ட‍ அனுமதி – ரூ.500

த‌வறான தகவல் காவல்துறையிடம் கூறுதல் – ரூ.500

கால்துறையிடம் தகவல் தர மறுத்த‍ல் – ரூ.500

ஆளில்லா ரயில்வே பாதையில் செல்லுதல் – ரூ.100 முதல் ரூ.300

லைசென்ஸ், இன்சூரன்ஸ், எஃப்.சி இல்லாமல் ஓட்டுவது – ரூ.100 முதல் ரூ.300

பைக்கில் 3 பேர் செல்லுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை

லைசென்ஸ் பெறாமல் ஓட்டுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை

ஓட்டுநர் அருகில் அமர வைத்த‍ல் – ரூ.100

வாகனத்தின் மேற்கூரையில் பயணம் – ரூ.100 முதல் ரூ.300 வரை

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றுதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை

பொதுமக்க‍ளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை

கட்டாய விதிகளை மீறுதல் – ரூ.100

போக்குவரத்து குறியீடுகளை சேதப்படுத்துதல் – ரூ.100 முதல் ரூ.300 வரை

வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றாமல் இருத்த‍ல் ரூ.100 முதல் ரூ.300 வரை

வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறு பதிவு செயயாமல் இருத்த‍ல் – ரூ.100 முதல் முறை) ரூ.300 (2ஆவது முறை)

வாகனப் பதிவு புதுப்பிக்காமல் இருத்த‍ல் – ரூ.100 (முதல முறை) ரூ.300 (2ஆவது முறை)

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply