இந்த படிப்பில் மூன்று நிலை உள்ளன. ஃபவுண்டேஷன், இன்டெர்மீடி யேட், ஃபைனல் ஸ்டேஜ் என இந்த மூன்று நிலைகளை ஒவ்வொன்றாக முடிக்க வேண்டும். சி.ஏ. படிப்பில் வர க்கூடிய காஸ்டிங், அக்கவுன்ட்ஸ், வரி மற்றும் சட்டப் படிப்புகள் இந்தப் படிப்பி லும் இருக்கிறது. பி.எஸ்.சி., இன்ஜினீ யரிங் என எந்த இளநிலை பட்டம் முடி த்தவர்களும் இந்த காஸ்ட் அக்கவுன் டிங் படிப்பை படிக்கலாம். இளநிலை பட்டம் பெற்றவர்கள் நேரடியாக இன் டெர்மீடியேட் நிலைக்குப் போகலாம். அவர்கள் ஃபவுண்டேஷன் நிலை படிக்க வேண்டிய தில்லை.
இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் மாணவர்கள் இந்த படிப்பை படிக் கிறார்கள். ஆனால், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே தேர்ச்சி அடைகிறார்கள். காரணம், இந்த படிப் பின் கடினமான தன்மையே. இன்டெர்மீடியே ட் நிலையில், இரண்டு குரூப் இருக்கிறது. இந்த குரூப்பில் மூன்று பேப்பர்கள் இருக்கும். இந்த மூன்று பேப்பர் களிலும் தலா 40 மதிப் பெண் குறைந்தபட்சமாகவும், மூன்று பேப்பரி ன் மதிப்பெண்னை கூட்டினால் 150 மதிப்பெ ண்களும் வர வேண் டும்.
இந்த இரண்டு கண்டிஷனில் ஒன்று தவறினாலும் அந்த குரூப் பேப்ப ர்கள் அனைத்தையும் எழுத வேண்டும். இப்படிதான் ஃபைனல் நிலை யும் இருக்கும். இந் த தேர்வை ஏன் இப் படி கடினமாக வை த்திருக்கிறார்கள்? ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்யக் கூடிய திறன் படைத்தவர் களால்தான் திறமையான காஸ்ட் அக்கவுன்ட்ட ன்ட்-ஆக பணிபுரிய முடியும். அதற்கு தகுந்த வகையில் மாணவர்களை தயார்படுத்து கின்றனர். இந்த தேர்வுக்கு ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்ஸ் டிடியூட்
மூலமா கவும், தனியார் பயிற்சி மையங்கள் மூலமாகவு ம் பயிற்சி எடுத்துக் கொ ள்ளலாம். இறுதித் தேர்வு முடிந்து தேர்ச் சியடைந்த பின்பு ஐ.சி.ட பிள்யூ.ஏ. உறுப்பினராக பதிவு செய் துகொள்ள வேண் டும்.
வேலைவாய்ப்பு!
இந்தியாவில் சுமார் எட்டு லட்சம் நிறுவனங்கள் இருக்கிறது. ஆனா ல், குறைந்தளவிலேயே காஸ்ட் அக்கவுன்ட்டன்டுகள் இருக்கிறார்கள். இந்த படிப்பை முடித்தவர்கள் வேலை க்கும் போகலாம் அல்லது சொந்தமாக காஸ்ட் அக்க வுன்டிங் பிராக்டீஸ் செய்யலாம். வேலைக்குப் போக நினைக்கிறவர்கள் இந்தியாவில் இருக்கும் நிறுவனங் களில் ஃபைனான்ஸ், டிரஷரி, பட்ஜெட்டிங், காஸ்டிங், ஃபாரக்ஸ் மேனேஜ்மென்ட், இன்டெர்னல் ஆடிட்டிங் போன்ற வேலைகளுக் குச் செல்லலாம்.
இந்த படிப்பில் நல்ல ரேங்க் ஹோல்டர், கிரேடு வாங்கியவர்கள் எனில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறார்கள். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க மாதம் நான்கு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்!” அம்மா டியோவ்!