Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபேஸ்புக் போலவே புதியதோர் சமூக‌ வலைதளம் – இந்திய மாணவர் சாதனை!

புதிய தொழில்நுட்பங்களை கையாள் வதில் மாணவர்கள் அதிக மதி நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இத ற்கு புனேவை சேர்ந்த விக்னேஷ் சுந்த ர்ராஜன் என்ற 14 வயது நிரம்பிய மாண வன் ஓர் சிற ந்த உதாரணம்.

இவர் Zettaconnect.co.in என்ற புதிய சோஷியல் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இது ஃபேஸ்புக் போன்ற வசதிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள் ளது. கம்ப்யூட்டர் லேன்குவேஜ்ஜில் ஸீட்டா என்றால் பிட் ஆஃப் மெமரி என்று அர்த்தம்.

நான்கு மாதங்கள் கடுமையான முயற்சி மற்றும் உழைப்பிற்கு பிறகு இந்த புதிய சோஷியல் நெட் வொர்கிங் வலைதளத்தை அவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த ஸீட்டா சைட் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது அல்ல என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஜுக்கர்பெர்க் சோஷியல் மீடியாவான ஃபேஸ்புக்கை உருவாக்கும் போது, லாபம் ஈட்டும் நோக்கத்துடன் உருவாக்கவில்லை. அவர் எதேட்சையாக ஆரம்பித்த ஒன்று தான் ஃபேஸ்புக். ஆனால் அது மக்களை இந் த அளவு சென்றடைந்ததற் கு பிறகு தான் அதில் உள்ள கடும் உழைப்பு அனைவரு க்கும் தெரிய வந்தது.

இன்று ஃபேஸ்புக் நாளுக்கு நாள் இமாலய வெற்றியை தொட்டு கொ ண்டு இருக்கிறது. 14 வயது நிரம்பிய விக்னேஷின் முயற்சியும், பெரிய வெற்றியை தேடி தரும் என்று நம்பலாம்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: