Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாம் உண்ணும் உணவு நமது உடலில் எப்ப‍டி செல்கிறது – வீடியோ

நான் உண்ணும் உணவு எனக்குள் எப்படிப் பயணிக்கிறது, எத்தகை ய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந் துகொள்ள வேண்டும். என்னுடைய அமைப்பு, வாயில் இருந்து ஆசன வாய் வரை ‘ஒரு வழிப் பாதை ’தா ன். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது. அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கி றது. (சாப்பிட்ட உணவை நினைத் தபோது எல்லாம் வாய்க்குக் கொ ண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா? அந்த மாதிரி மனிதர் கள் சாப்பிட்ட உணவை மறுபடியு ம் வாய்க்குக் கொண்டுவர முடியா து. மனிதனுக்கு ஒரே இரைப்பை தான்.

ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப் பைகள்). என்னதான் நீங்கள் தலை கீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள் ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இரு ந்து மேலாக வருவதற்கு வாய்ப் பே இல்லை.

இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். உங்களுடைய வாழ்க்கை சுழற்சிமயமானது என் பது இயற்கைக்கு நன்றாகத் தெரி ந்து இருக்கிறது. தலைகீழாகத் தொங்கியபடி வித்தை காட்டும் ஏழை களையும், உடலை வளை த்து வேலை பார்ப்பவர்களை யும் ஒருகணம் நினைத்துப் பாரு ங்கள். என்னுடைய பாதை ஒரு குழாய் வடிவில் இருந்தாலும், தலை கீழாகத் தொங்கும்போ தோ, உருண்டு புரளும்போதோ, உண்ட உணவு வெளியே வரு வது இல்லை. கார ணம், எனது பாதையில் ஐந்து இடங்களில் வளையம்போல உள் ள சுருக்குத் தசைகள்தான்!

இந்த சுருக்குத் தசைகளின் அமைப்புகளையும், அதன் செயல்பாடு களையும் கேட்டால், என்னை வடிவ மைத்த இயற்கை இன்ஜினீயரை நீங் கள் வியப்பீர்கள். உண்ட உணவு எனது பாதையின் வழியே வருகையில், ஐந் து இடங்களில் இருக்கும் சுருக்குத் தசைகளும் வேலை செய்யத் தொடங் கிவிடும். இந்தப் பணியை நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல், மூளையில் இருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞை கள் (Signals) மூலமாகவே சுருக்குத் தசைகள் செய்யத் தொடங்கிவிடும்.

அதாவது, உணவு எந்த இடத்தில் பய ணிக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள சுருக்குத் தசை விரிந்து, அந்த இடத்தில் உள்ள உணவுப்பாதையை த் திறந்து உணவை உள்ளே அனுப்பும். அடுத்த வினாடியே மூளை யின் கட்டளைக்கு ஏற்ப சுருங்கி அந்த இடத்தை மூடி விடும். சாப்பி ட்ட மறு கணமே நீங்கள் தலை கீழாக நின்றாலும் உணவில் இருந்து துளி அளவுகூட வெளியே வராததற்கு இந்த ஆச்சரிய வடிவமைப் புதான் காரணம்.

சுருக்குத் தசைகள் இல்லாவிட்டால் என்னாகும் என்பதை நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. என்ன சாப்பிட்டாலும், அடு த்த கணமே வாந்தி, குமட்டலாக  வெளியே வந்துவிடும். பிறந்த குழந்தைகள் தாயிடம் பால் குடி த்த சில நிமிடங்களிலேயே வா ந்தி எடுப்பது இதனால்தான். சுரு க்குத் தசைகள் வலிமையோடு இல்லாத நிலையில்தான் தாயி டம் பால் குடித்ததும் குழந்தை உடனே அதனைக் கக்கிவிடுகிற து. இதைத் தடுக்க தாய்மார்கள் குழந்தை க்குப் பால் கொடுத்த பிறகு தங்களின் தோளில் போ ட்டு முதுகைத் தட்டிவிடுவார் கள்.

சுருக்குத் தசைகளால் உருவான இந்த ஐந்து அடைப்பான்களும் எந்த இடங்களில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொ ண்டால்தான் பலருக்கும் ஏற்படும் ஜி.இ.ஆர்.டி. (GERD) என்கிற பிரச்னையைப் பற்றி சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும். சாப் பிட்ட உடன் அமிலம் மேலே எழும்பி வருவதைத்தான்  ஜி.இ.ஆர். டி.  என டாக்டர்கள் சொல் கிறார்கள்.

உணவுக் குழாயில், வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைக் கொண்டு செல்லும் பாதையின் மேல் பகு தியிலும் முடிவுப் பகுதியிலும் இரண்டு அடைப்பான் கள் இருக்கின்றன. மேல் பகுதி அடை ப்பானுக்கு கிரைக்கோ பெரி ஞ்சியஸ் (Crico Pharyngeus) என்று பெயர். வாயில் இருந்து உணவு செல்லும் பொதுப் பாதை, மூச்சுக் குழாயும் உணவுக் குழாயுமாகப் பிரியும் இடத்தில் இந்த முதல் அடை ப்பான் இருக்கிறது. இது மூச் சுக்குழாய்க்குள் நாம் உண்ணும் உணவை செல்லாமல் தடுக்கும் வேலையைச் செய்கிறது.

உணவுக் குழாயின் முடிவுப் பகுதியில்… அதாவது இரைப்பையின் ஆரம்பத்தில் இரண்டாம் அடைப்பான் (Cardiac Sphincter) இருக்கி றது. இது இரைப்பையில் உள்ள அமிலம் மேலே சென்று உணவுக் குழாய்க்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது (நமது உடலில் அமில ம் உற்பத்தி ஆகும் ஒரே இடம் இரைப்பைதான்). அதேபோல இரை ப்பையின் அமிலம் மென்மையான சிறு குடலைப் பாதிக்காமல் இருக்க, இரைப் பையின் முடிவில்… அதாவது சிறுகுடல் ஆரம்ப த்தில் பைலோரிக் அடைப்பான் (Pyloric Sphincter) என்கிற மூன் றாம் அடைப்பான் இருக்கிறது.

சிறுகுடலின் முடிவில், பெருங்குடலின் ஆரம்பத்தில்… அதாவது சிறு குடல் – பெருங்குடல் சந்திப்பில் (Ileocaecal Junction) நான்காம் அடைப்பான்  உள்ள து. இது, சிறிது சிறிதாக சிறுகுடலில் கூழ் போன்ற திரவ நிலையில் உள்ள செரி மானம் ஆன உணவு மீதத்தை, பெருங் குடலுக்கு அனுப்புகிறது. இதனால், பெருங் குடல் அந்த உணவுப் பொருளில் உள்ள நீரை முழுவதும் உறிந்துகொள்ளவும், மலத்தைத் திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றவும் செய் கிறது. இதை இலியோகோலிக் ஸ்பிங் க்டர் (Ileocolioc Sph incter) என்பார்கள்.

ஐந்தாம் அடைப்பான் (Anal Sph incter) மிக மிக முக்கியமா னது. உணவின் எச்சமாய் வெளி யேறும் மலத்தை விரு ம்பிய நேரத்தில் வெளியேற்ற உதவியாய் ஆசன வாயில் அமை ந்திருக்கும் அடை ப்பான் இது.

வயிறு என்கிற எனக்குள் இத்தனை அமைப்புகளா என நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. நீங்கள் உண்ணும் உணவு இத்தகை ய கட்டங்களை எல்லாம் கடந்துதான் சக்தியா கவும் கழிவாகவும் மாறுகிறது. இதற்கே ஆச்சரி யப்பட்டால் எப்படி? உணவுப் பாதையின் சுருங்கி விரியும் செயல்பாடுகள்பற்றியும் அதனை இயக்கு ம் நரம்பு மண்டலம்பற்றியும் நான் சொல்லச் சொ ல்ல, நீங்கள் இன் னும் இன்னும் வியப்பீர்கள் பாருங்கள்!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: