Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பறவைகள், விலங்குகள் நிலநடுக்கத்தினை அறியுமா? – வீடியோ

சுனாமி, பூகம்பம் போன்றவற்றை பறவைகளும், விலங்குகளும் உணர்ந்துகொள்கின்றன என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் உள்ளது.

உண்மையில் விலங்குகள் பூக ம்பத்தை உணர்கி ன்றனவா என் பதற்கு விஞ்ஞானப் பூர்வமான ஆதாரம் இல்லை. அறிவியல் அதை ஏற்றுக்கொள்வதும் இல் லை. ஆனால் சீனா, ஜப்பான், இந்தோ னேஷியா போன்ற நில நடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய நாடுகள், பூகம்பம் வருவதை முன் கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் விலங் குகளுக்கு உண்டு என்று வாதாடுகின்றன. மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந் திருந்தால் அவனும் பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறி ய முடியும் என்றும் கூறுகிறா ர்கள்.

விலங்குகள் உண்பது, உறங்கு வது எல்லாம் தரை மீதுதான். அவை தரை மீதுதான் காதை வைத்தும் உறங்கும். அதனால் பூமியில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக் கூட அவற்றால் உணர் ந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள். ரயில் தண்டவாளத்தில் கா தை வைத்துக் கேட்கிறபோது, தூரத்தில் வரும் ரயிலின் ஓசையை க்கேட்க முடிவதுபோல, தொ லை வில் ஏற்படும் நிலநடுக்க ஓசையை விலங்குகளால் அறிய முடிகிறது என்று கூறுகிறார்கள்.

இந்த விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும், இயற்கைப் பேரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொண்டான், அதற்கே ற்ப இடமாற்றம் செய்தான்.

ஆனால் நவீன மனிதனோ வாக னங்களில் பயணம் செய்து பழகிய தால் அதிர்வுகளைத் தாங்கிப் பழகிவிட்டான். எனவே நிலநடுக்க அதிர்வுகளை அவனால் உணர முடியவில்லை என்கிர்கள் சிலர். விஞ்ஞானிகள்தான் உண்மை யை விளக்க வேண்டும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply