Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ்.

வரிச் சலுகை தரும் திட்டங் களில் முதலீடு செய்தால் தாராளமாக வரிச் சலுகையு ம் நல்ல வருமானத்தையும் பெறலாம்.  

அந்த வகையில் நீண்ட கால த்தில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுக் கத் தயாராக இருப்பவர்கள், பங்குச் சந்தை சார்ந்த வரிச் சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்யலா ம். கடந்த மூன்றாண்டு காலத்தில் டாப் 10 வரிச் சேமிப்பு ஃபண்டு கள் ஆண்டு க்கு 25 முதல் 30% வரை வருமானம் தந்திருக்கின்றன. 2008-லும் 2011-லும் நெகட்டிவ் ரிட்டர்னை தந்தன இ.எல்.எஸ். எஸ். திட்டங் கள்.

புதிய வருமான வரிச் சட்டத்தில் இந்த ஃபண்டுக்கு வரிச் சலுகை தொடருமா என்பது பெரிய கேள் விக்குறிதான். என்றாலும், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் நீண்ட காலத்தில் சிறப்பாகவே இருக்கிறது. அந்த வகையில் இந் த ஃபண்டில் முதலீடு செய்து அத ன் மூலம் கிடைக்கும் வருமானத் தை முதலீடு செய்து வரிச்சலு கை பெற வாய்ப்பு இருக்கிறது.

இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுகள் ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகை யைச் சேர்ந்தது. இதில் செய்யப்படும் முதலீடு மூன்றாண்டு காலத் திற்குப் பிறகே எடுக்க முடியும் என்பதால் இதற்கு வருமான வரி இல்லை.

ரிஸ்க் இல்லாத மற்ற முத லீட்டுத் திட்டங்களுடன் ஒப் பிட்டால் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டுக்கான ‘லாக் இன் பிரீயட்’ மிக குறைவாக உள் ளது. தற்போது சந்தை சரிவில் இருப்பதால் முன் னணி ஃபண்டுகளின் யூனிட் கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி வரிச் சலுகை பெறுவதோடு, உங்களின் ஃபண்ட் போர்ட் ஃபோலியோவை வலிமையானதாக மாற்றலாம்.

மேலும், இ.எல்.எஸ்.எஸ். ஃபண் டில், லாக் இன் பிரீயட் முடிந்த பிறகு அது ஓப்பன் எண்டட் ஃப ண்டாக மாறிவிடும் என்பதால், முதலீட்டை உடனே வெளியே எடுக்க வேண்டும் என்கிற அவசி யமில்லை. சந்தை நிலவரத்தை ப் பொறுத்து சில காலம் கழித்து யூனிட்களை விற்றால் லாபத் தை முழுமையாக அறுவடை செய் யலாம்.

நீண்ட காலத்தில் பணம் எதுவும் தேவைப்படாதவர்கள் இ.எல். எஸ்.எஸ். ஃபண்டில் குரோத் ஆஃப்ஷனை தேர்வு செய்யலாம். இடையே பணத் தேவை உள்ளவ ர்களுக்கு டிவிடெண்ட் ஆஃப்ஷன் நல்லது. இந்த டிவிடெண்ட் தொ கைக்கு வரி இல்லை என்பது கூடு தல் லாபம். (புதிய வருமான வரி ச் சட்டத்தில் டிவிடெண்டுக்கு 5% வரி விதிக்க பரிந்துரை செய்யப் பட்டிருக்கிறது.)

டிவிடெண்ட் மறுமுதலீட்டு ஆஃப் ஷனை தவிர்ப்பது நல்லது. கார ணம், இப்படி மறுமுதலீடு செய்யு ம் டிவிடெண்ட் தொகைக்கான யூனிட்களை மறுமுதலீடு தேதியி லிருந்து மூன்றாண்டுகள் கழித்தே விற்க முடியும்.  வரிச் சேமிப்புக் கான இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டி ல் முதலீடு செய்யும்போது, அந் த ஃபண்ட் லார்ஜ்கேப் ஃபண்டா? மிட்கேப் ஃபண்டா? மல்டிகேப் ஃபண்டா? என்பதைக் கவனி யுங்கள்.

உங்களின் ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் வருமான எதிர் பார்ப்புக்கு ஏற்ற ஃபண்டை தேர் வு செய்யுங்கள்..! லார்ஜ்கேப் ஃபண்டைவிட லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்ட், மல்டிகேப் ஃபண்ட் சற்று ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்டுகளோடு ஒப்பிடும் போது மிட் அண்ட் ஸ்மால் கேப் ஃபண்டில் சற்று ரிஸ்க் அதிகமாக இருக்கும்.

இந்த இ.எல்.எஸ்.எஸ். ஃபண் டுகளில் மாதம் 500 ரூபாய்  முதலீடு செய்ய முடியும். பான் கார்டு எண் மட்டும் இரு ந்தால் போதும். இது வரைக் கும் வரிச் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்காக இ.எல்.எஸ். எஸ். ஃபண்டுகளை நாடாதவர்கள் இனியாவது முயற்சி செய்து பார்க்கலாமே!

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply