Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(2/2)- கணவன்களுக்கு எதிராக எரிமலையாய் பொங்க வேண்டும் மனைவிகள்

மதிப்பிற்குரிய அம்மாவுக்கு —

நான், 38 வயது பெண். அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரி கிறேன். என் குடும்பம் நடுத்தர வர்க்கம். எனக்கு இரு சகோதரர்கள். என் திருமணத்தி ற்குரிய ஏற்பாடு களைச் செய்த போது, என் அப்பா தேர்ந்தெடுத் தவரையே மணந்துகொண்டே ன். அவர், பணி நிலையில் என க்கு குறைந்தவர். இருப்பினும், அதை யாரும் கருத்தில் எடுத் துக் கொள்ளவில்லை; நானும், இதை குறைவாக நினைக்கவி ல்லை.

திருமணத்துக்கு பின், துறைத் தேர்வுகள் எழுதி, என் தகுதியை உயர் த்திக்கொள்ள அவர் தடையேதும் கூறாமல் ஒத்துழைத்தார். என் பெரியம்மா மகளும், என் அப்பா வீட்டில்தான் என்னோடு ஒன்றாக வளர்ந்தாள். ஓரிரு வயது என்னை விடக் குறைந்தவள். என் திரு மணத்துக்கு பின்னும், என் அப்பா வீட்டில்தான் என் வாழ்வு பணி நிமி த்தமாகத் தொடர்ந்தது. தன் குடும்பத்தாருடன் மனஸ்தாபப் பட்டுக் கொண்ட என் கணவர், வாரம் ஒருமுறை வந்து சென்ற நிலை மாறி, என் தகப்பனார் வீட்டிலேயே வசிக்க ஆரம்பித்தார்.

எனக்கு ஆண் குழந்தை பிறந்து, அதன்பின் எனக்கு எற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக, தனிக்குடித்தனம் செல்வதற்கு, என் கண வர் மறுத்து விட்டார்.

இதற்கிடையே என் பெரியம்மா மகளுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, உடலுறவு வரை சென்று விட்டது. எனக்குச் சந்தேகம் ஏற் பட்டு, நான் விசாரிக்கும் போது, அவளை மகளாக எண்ணுவதாகக் கூறி, என்னை மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். உடலுறவால் ஏற்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க, அவர் மேற்கொண்ட முயற்சி பலிக்காத போது தான், எனக்கு இவ்விவரம் உறுதியானது. நான், மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்று கர்ப்பத்தைக் கலைத்தேன். அதன்பின், அவள், தன் தவறை உணர்ந்து, என் கணவ ரை தவிர்க்க ஆரம்பித்தாள்.

குடும்ப மானத்தைக் காப்பாற்றவே மேற்படி செயலை மேற்கொண் டேன். இந்த விவரம் தெரியாத என் குடும்பத்தினர், அவளுக்கு மாப் பிள்ளை பார்க்க, அவள் திருமணம் நடந்தது. இந்நிலையில், தனி யார் நிறுவனப் பணியில் இருந்த என் கணவருக்கு, வேலை போய் விட் டது. இடையில் என் குடும்பத்தாரோடு ஏற்பட்ட மனக்கசப்பில், நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி, தனிக்குடித்தனம் ஆரம்பித் தோம்.

சொந்தமாக நிலம் வாங்கி, வீடு கட்டிக் கொண்டோம். மகன் வாழ் வை எண்ணியே அனைத்தையும் பொறுத்தேன். தனிக்குடித்தனம் வந்ததும், அவர் காட்டிய ஆவேசமும், ஆத்திரமும் அப்பப்பா… அதோ டு என்னை நாள்தோறும் வார்த்தைகளால் சித்திரவதைப்படுத்து வதை என்னவென்று சொல்வது?

எப்படி@யா, பத்து ஆண்டுகளைக் கடத்தி விட்டேன். தற்போது, இவ ருடைய வன் கொடுமைக்கு நான் மட்டுமே ஆளாகிறேன். பிரிந்து விட்டால் என் அப்பா குடும்பம், என் பெரியம்மா மகள் குடும்பம், அலுவலகத்தில் என் மதிப்பு, மரியாதை என எல்லாவற் றையும் நாசப்படுத்த சிறிதும் தயங்காத மோசமான புத்தியு டையவர் என்ப தாலேயே, நான் ஒருத்தி துன்பப் பட்டாலும், மற்றவர்கள் பாதிக்கப் படாதிருக்கப் பொறுமையாக வாழ்கிறேன்.

அவரைப் பிரிவது குறித்து என் மகனிடம் பேசிய போது, அவன் வருந்துகிறான். கல்லூரியில் பயிலும் அவன் மனம், பாதிப் படையக் கூடாதென, என் மனதை அடக்கிக் கொள்கிறேன். பணம் கேட்டு இல்லை என்று சொல்லி விட்டால், பூகம்பம் வெடிக்கும். நான் வாங் கும் வசவைக் கேட்டு, அக்கம்பக்கத்தார் கூட வருந்துவர். மிக உரத்த குரலில் திட்டுவது அவர் வாடிக்கை. ஆனால், தற்போது என் வாழ்வி லும் வசந்தம். என்னைத் திட்டுவதை அவர் பெரும்பாலும் குறைத் துக் கொண்டார். என்ன வேண்டும்… வாங்கி வருகிறேன் என்கிறார். அன்பாக கூட பேசுகிறார். மகனிடமும் அவ்வாறே நடந்து கொள்கி றார்.

காரணம் என்ன தெரியுமா? அவரது பழைய காதலியுடனான உறவு புதுப்பிக்கப்பட்டு விட்டது. நானும் வேலைக்குப் போய் விடுகிறேன். அவளது கணவர் வேலைக்குச் சென்றுவிட, குழந்தைகள் பள்ளி செல்ல, நாள் முழுவதும் நேரம் கிடைக்கும். இருவரும், போனில் பேசி த் தீர்க்கின்றனர்.

என் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக. மொபைல் போனை பொத்திப் பாதுகாக்கிறார் என் கணவர். அவர்களும் குடு ம்பத் தோடு சிலமுறை என் வீட்டுக்கு வந்து போய் விட்டனர்; நானு ம், ஓரிருமுறை குடும்பத்தோடு அங்கு சென்று வந்தேன்.

இப்போது என் பிரச்னை என்னவென்றால், சம்பாதித்துப் போட்டு மாமனார், மாமியாரிடம் நல்ல மருமகள், அவரது தங்கையிடம் நல்ல நாத்தனார் எனப் பெயர் வாங்கியுள்ளதோடு, ஏதோ மூன்று மாதம், ஆறு மாதத்துக்கொருமுறை உடல் தேவையைப் பூர்த்தி செய்து, வெளி உலகின் பார்வைக்கு நல்லவிதமாகப் குடும்பத்தை நடத்திச் செல்லும் நான், அவரது காதலி விவகாரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்ன?

இந்த உறவுக்கு, நான் எப்படி முற்றுப்புள்ளி வைப்பது. ஒவ்வொரு நாளும், இவர்கள் அடிக்கும் கூத்தால், எனக்கு ஏற்படும் மன உளை ச்சலுக்கு மருந்தென்ன? அவள் வீட்டுக்கு வரக்கூடாது என்றால், என்னை, வீட்டை விட்டு வெளியேறு என்பார் என் கணவர். அவள் இங்கே வந்து, என் கணவரிடம் சற்றே உரசி விட்டு, சந்தடி கிடைக் கும் போது, என் கணவரிடம் வழிவதைப் பார்க்க, எனக்கு சகிக்க வில்லை.

நான் செய்ய வேண்டியதென்ன? விரைவில் தங்கள் ஆலோசனை யை எதிர்பார்க்கிறேன்.

— அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு –
உங்களது சம்பளத்தை குறி வைத்து தான், பணி நிலையில் குறைந்த உங்கள் கணவர், உயர் பதவியில் இருக்கும் உங்களை மணந்து கொண்டார். அதே காரணத்திற்காகத்தான் உங்களை துறைத் தேர்வு கள் எழுதி, தகுதியை உயர்த்திக் கொள்ள அனுமதித்தார். பணத்தை சிக்கனப்படுத்தத்தான், அவர் வீட்டோடு மாப்பிள்ளையாகவும் இருந் திருக்கிறார். சொந்தமாக நிலம் வாங்கி, வீடு கட்டிக் கொண்டதில் கூட, உங்களது பொருளாதார பங்களிப்புதான் அதிகமாக இருந்தி ருக்கும். மொத்தத்தில், உங்களது கணவர் பண விஷயத்தில் படு கெட்டி.

பணத்தாசை பிடித்த உங்களது கணவரை, உங்களின் பெரியம்மா மகளின் தொடர்பு, பெண்ணாசையும் கொண்டவராய் மாற்றி விட் டது.

பெரியம்மா மகளை கூட்டிச் சென்று, நீங்கள் கருச்சிதைவு செய்த தை உங்களின் பலவீனப் புள்ளியாய் எடுத்துக் கொள்கிறார் உங்கள் கணவர். மனைவிக்கு தெரிந்த ஆட்டத்தைத் தானே தொடர்கிறோம் என்ற மனநிலை அவருக்கு.

பெரியம்மா மகளை மணந்து கொண்டவரின், குணநலனை ஆராய்ந் தால், அவர் வெகுளியாக அல்லது தப்பு செய்யும் மனைவிக்கு, வே றொரு தப்பு செய்யும் கணவனாக அல்லது தவறான உறவுகள், வாழ்க்கையில் சகஜம்ப்பா என்ற உள்ளம் உள்ளவராக தெரிகிறார்.

உங்கள் கணவர், அவள் கணவருக்கு பண உதவி செய்கிறாரோ, இரண்டு ஆண்களும் சேர்ந்து குடிக்கின்றனரோ? குடிநோயாளிக ளுக்கு எல்லா ரிஸ்க்குகளும், ரஸ்க் சாப்பிடுற மாதிரி.

அடுத்து என்ன செய்யலாம் தெரியுமா சகோதரி?

உங்களது அடையாளம் காட்டியோ, காட் டாமலோ, பெரியம்மா மகள் கணவருக்கு, இவர்களின் கள்ள உறவை தெரியப்படுத்துங் கள். மகளின் எதிர்காலத்துக்காக, அவர் தன் மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்கட்டும். மாமனார், மாமியார், நாத்தனார், சொந்த பந்தம் ஊர் உலகத்திடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பத ற்காக, உங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். சொந்த வீடு, யார் பெயரில் உள்ளது? உங்கள் பெயரில் இருந்தால் பாதுகாப்பு; இல்லையென்றால் மகன் பெயருக்கு மாற்ற பாருங்கள்.

இரு சகோதரிகளிடமும் கூறி, உங்கள் கணவரை கண்டித்து வையு ங்கள். கணவரின் போலி, “இமேஜை’ இடித்து தவிடுபொடி ஆக்கு ங்கள். “எந்த கள்ள உறவும் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் வரா தே…’ என தைரியமாய் கூறுங்கள். “கெட்ட வார்த்தைகள் பேசினால், தூங்கும் போது, இரு உதட்டிலும் சூடு போட்டு விடுவேன்…’ என மிரட் டுங்கள். “வீட்டில் அறுசுவை உணவு இருக்கும் போது, வெளியில் எச்சில் இலை பொறுக்குவேன் என நினைத்தால், விவாகரத்து பெற் றுக்கொண்டு அதை செய்…’ என ஆணித்தரமாய் கூறுங்கள்.

தாக்குதலுக்கு எதிர் தாக்குதல், அடிக்கு அடி, உதைக்கு உதை, கணவரின் மொபைல் போனில் சேமிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழித்து விடுங்கள். உங்களது கணவரை தேடி, பெரிய ம்மா மகள் உங்களது வீட்டுக்கு வந்தால், வசவு வார்த்தைகளால் அவருக்கு, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடுங்கள்.

தவறுகள் செய்யும் கணவன்களுக்கு எதிராக எரிமலையாய் பொங்க வேண்டும் மனைவிமார்கள். தவறு செய்யும் ஆண்கள், பயந்தால் துரத்துவர்; துரத்தினால் பயந்து நின்று வாலாட்டுவர். சராசரி நான் கடி ஆழமுள்ள ஆற்றை கடப்பது ஆபத்தானது என்கிறது ஒரு நாட் டுப்புற சொலவடை. கணவனின் தவறை எதிர்க்கத் துணியாத உங் களைப் போன்ற மனைவிமார்கள் சராசரி நான்கடி ஆழமுள்ள ஆறுகள்தான். ஆனால், நான்கடி ஆழம்தானே என அலட்சியமாக இறங்கினால், காலடிமண் இழுத்து காணாமல் போவர், கள்ள உறவு கணவர்கள்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: