Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கேட்கும் போது ரொம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு” – ஹன்சிகா மோத்வானி

நயன்தாரா-பிரபுதேவா பிரச்னையில் என் னை ஏன்..? தேவையில்லாமல் இழுக்கு றாங்கன்னு எனக்கு தெரியல, இதுபோ ன்ற விஷ யங்களை கேட்கும் போது ரொ ம்ப அசிங்கமா, அருவெறுப்பா இருக்கு என்று கொதித்துள்ளார் ஹன்சிகா மோத் வானி.

பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தொ டர்ந்து தனுஷ், விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு தமிழ் சினி மாவின் கனவு கன்னியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். தற்போது தெலுங்கு படத்தில் பிஸியாக இருக்கும் ஹன்சிகாவை ஒரு செய்தி அதிர்ச்சி க்கு உள்ளாக்கியுள்ளது. பிரபு தேவா-நயன்தாரா பிரிவுக்கு காரணம் ஹன்சிகா தான் என்று ஒரு பரபரப்பான குற்றச் சாட்டு எழுந்தது.

இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, நீண்ட நேரத்திற்கு பின் சூடாக பேசத் தொடங்கினார். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும், நான் ரொம்ப ஸ்டைர ட் பார்வர்ட். எதையும் தைரிய மாக பேசிடுவேன். ஆனா, என்ன பத்தி பிரபுதேவா கூட பேசுறது ரொம்ப தப்பா படுது. அவர் எங்க வீட்டு பெரிய அண்ணன் மாதிரி. அவரை அண்ணா என்று தான் எப்போதும், எங்கிருந்தாலும் கூப்பிடுவேன். ஆனால் இப்போ இந்த மாதிரி செய்தியை கேட்கும் போது ரொம்பவே அசிங் கமா இரு க்கு. எங்கேயும் காதல் படத்தின் சூட்டிங் பாரிஸ் நடந்த போது பிரபு தேவா கூட நயன்தாராவும் வந்திருந்தாங்க. அப்போது தான் அவரை பார்த்து சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். அதன் பிறகு பிரபு தேவா, நயன்தாரா யார்கிட்டேயு ம் நான் பேசல, அவங்கள பார் க்கல. அடுத் தடுத்த படங்களில் கமிட் ஆகிவிட்டதால, சூட்டிங் கில் பிஸியாகி விட்டேன்.

நயன்தாரா-பிரபுதேவா இவர்க ளுக்குள் நடக்கிற கேட் வால் பிரச்னையில் என்னை ஏன் இழு க்குறாங்க…? என்று தெரியல. இப்படி செய்தியை கேட்கும்போதெ ல்லாம் ரொம்ப அசிங்கமா, கேவலமா, அருவெறுப்பா இருக்கு. என் இமேஜை கெடுக்க பாக்குறாங்க. இந்த மாதிரி வதந்தியை பரப்புறவுங்க வீட்டி லேயும் பெண்கள் இருப்பாங்க. கண்ணா பின்னான்னு எழுதி, யாருக்கோ நல்லது பண்றோம் என் கிற பேர்வழியில், எங்க வீட்டில் உள்ள ஒட்டு மொத்த நிம்மதியை யும் கெடுத்துட்டாங்க. இதைப்பற்றி என் அம்மா, என் அண்ணன் என எல்லோரும் ரொம்ப பீல் பண்ணுனாங்க.

நான் லண்டனுல படிச்சவ என்றாலும், நம்ம நாட்டு கலாச்சாரத்தை நிறையவே பின்பற்றுபவள். எனக்குனு ஒரு லிமிட் இருக்கு. என் வேலை எனக்கு முக்கியம். நான் இன்னும் சினிமாவுல நிறைய சாதி க்க வேண்டியிருக்கு. இப் போ மும்பையில இருக்கேன். ஒரு கல் ஒரு கண்ணாடி படம் முடி ஞ்சு, சிம்புவோட வேட்டை மன்னன் படத்தில் நடிக்கிறேன். இதுபோ ன்ற செய்திகள் என்னை மட்டும் அல்லாம ல் என் னோட வேலை யையும் பாதிக்குது.

சரி இதுபற்றி பிரபுதேவாவுடன் பேசினீங் களா என்று கேட்டதும், இது வரைக்கும் இல்ல, பொறுமையா இருக்கேன். இது எல்லாதுக்கும் கடவுளும், காலமும் பதில் சொல்லும். என்ன பத்தி அவதூறான செய் திக்கும், விமர்சனங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லி கிட்டு இருக்க முடி யாது என்று கொதித்து போய் பேசி முடித் தார் ஹன்சிகா.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply