Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் தீர்ப்பால் காங்கிரஸ் நிம்மதி பெருமூச்சு

ஸ்பெக்ட்ரம் வழக்கில், சிதம்பரத்தை சேர்க்க கோ ரிய மனு, டிஸ் மிஸ் செய்ய ப்பட்டதால், ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு, சற்று நிம்மதி அடைந்துள் ளது. கோர்ட் தீர்ப்புகளால், தொடர்ந்து குட்டுக் கள் வாங்கிக் கொண்டிருந்த காங்கிரசுக்கு, இந்தத் தீர் ப்பு, தெம்பை அளித்து ள்ள து.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்திற்கு தொடர்பு உண்டு, அவ ரையும் வழக்கில் சேர்க்க வேண்டுமென்றுகோரி, சுப்ரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஷைனி நேற்று டிஸ்மிஸ் செய்தார். மத்திய அரசில், உள்துறை அமைச்சர் என்ற மிக முக்கிய பதவியில், சிதம்பரம் இருப்பதாலும், அவரது அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக தீர்ப்பு இருக்கும் என்ப தாலும், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் இருந்தது.

குறிவைத்து தாக்குதல்: அத்துடன் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசும், இந்தத் தீர்ப்பை, மிகுந்த கவனத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண் டிருந்தது. உள்துறை அமைச்சருக்கு எதிராக தீர்ப்பு அளிக்கப்பட் டால், அது நிச்சயம் அரசியல் அரங்கில் மட்டுமல்லாது, அரசுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்கும் என்பதே அதற்கு காரணம். ஏற்கன வே பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பார்லிமென்டிற்கு உள்ளேயும், வெளியேயும் சிதம்பரத்தை, தீவிரமாக குறிவைத்து தாக்கியபடி இரு ந்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டு மென, பல எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தபடி இருந்தன. காரணம், சிதம்பரத்தை முதலில் வழக்கிற்குள் கொண்டு வந்து விட்டால், அடு த்தடுத்து, பிரதமர் உள்பட பெரிய தலைகளையும் வளைக்கலாம், என்பதே இதன் நோக்கம்.

ஷைனி கையில் முடிவு: இந்த சூழ்நிலையில்தான், சுப்ரமணிய சாமி தொடர்ந்த மற்றொரு வழக்கு, சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தது. அதிலும், “2ஜி’ வழக்கில், சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சி.பி.ஐ., கோர்ட்டே இதை முடிவு செய்யும் என, நீதிபதிகள் தீர்ப்பளித்ததால், இந்த விவகாரம், சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஷைனியின் கைகளுக்கு வந்தது. ஷைனி அளிக்கும் தீர்ப்பு, அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வ லைகளை ஏற்படுத்தலாம் என்று, எல்லா தரப்பிலுமே எதிர்பார்ப்பும், பரபரப்பும் இருந்தது.

சிதம்பரத்திற்கு நிம்மதி: இந்த நிலையில், சாமியின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது, சிதம்பரத்திற்கு நிம்மதியை அளித்துள்ளது. அதைவிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தலைமை தாங் கும் காங்கிரசுக்கு, மிகப்பெரிய நிம்மதியை தந்துள்ளது. கடந்தவார ம் சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்ட, மிக முக்கிய மூன்று தீர்ப்பு களில் ஒன்று, 122 லைசென்ஸ்களை ரத்து செய்தது. இது மத்திய அரசாங்கத்தை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரசாங்கத் தின் கொள்கை முடிவையும், அதை அமல்படுத்திய நடைமுறையை யும், தவறு என்று கோர்ட் அளித்த இந்த தீர்ப்பால், எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியது. அரசாங்கத்திற்கு எதிரான இவ்வளவு பெரிய தீர்ப்பு வந்துள்ளதை, ஜீரணிக்க முடியாமலும், தங்கள் மீதான விமர்சனங் களுக்கு பதிலடி கொடுக்க முடியாமலும், திணறும் நிலை ஏற்பட் டது. குறிப்பாக உ.பி., சட்டசபைத் தேர்தல் நேரத்தில், இப்படி ஒரு தீர்ப் பை கோர்ட் அளித்ததால், காங்கிரஸ் கவலை அடைந்தது. ஆனால், சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின ரை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

காங்கிரஸ் தெம்பு: தங்களை, விமர்சன கணைகளால் துளைத்தெடு க்கும் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தர, கையில் ஒன்றுமே இல்லை என்ற நிலைமாறி, நேற்றைய தீர்ப்பு ஒரு ஊன்று கோலை தந்துள் ளதாகவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கருதுகிறது. ஸ்பெக் ட்ரம் ஊழலில் திமுக வை மட்டும் பொறுப்பாளியாக்கி வைக்கப் பட்டிருந்த நிலையில், சிதம்பரம் சேர்க்கப்படும் சூழ்நிலை உருவா னால், அந்த ஊழலில் காங்கிரசுக்கும், பங்கிருப்பது என்பது போலா கிவிடும். அந்த அச்சத்தையும், இந்த தீர்ப்பு போக்கியுள்ளதால், காங்., சற்று தெம்படைந்துள்ளது.

மன்னிப்பு கேளுங்கள்: கபில்சிபல் காட்டம்: சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், காங்கிரஸ் முக்கிய தலை வர்கள் பேட்டி கொடுப்பதில், ஆர்வம் காட்டத் துவங்கினர். அமைச் சர் அம்பிகா சோனி கூறுகையில், “சிதம்பரத்திற்கோ, காங்கிரசுக் கோ ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இல்லை என, ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். அதுதான் இப்போது நடந்துள்ளது. வேண்டுமெ ன்றே விளம்பரம் தேடும் நோக்கத்தில், சுப்ரமணியசாமி இந்த வழ க்கை தொடர்ந்தார். செய்தி சேனல்களும் அவரை பயன்படுத்திக் கொண்டு இவ்விஷயத்தை பெரிதாக்கின’ என்றார். தொலைத் தொட ர்பு துறை அமைச்சர் கபில்சிபல் கூறும்போது,”பிரதமரையும், உள் துறை அமைச்சரையும் களங்கப்படுத்தும் வகையில், சேனல்கள் நடந்து கொண்டன. இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். தாங்கள் செய்த தவறை இப்போதாவது, மனச்சாட்சியுடன் எண்ணிப்பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மிகவும் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதை, இனிமேலாவது தவிர்க்க வேண்டும்’ என்றார்.

“வேகத்தை குறைக்க மாட்டோம்’: சி.பி.ஐ., கோர்ட் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தாலும், முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., வோ தங்களது வேகத்தை குறைக்கப்போவதில்லை என, அறிவித்துள் ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், ” கீழ் கோர்ட்டில் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால், அரசாங்கம் வழங் கிய 122 லைசென்ஸ்களை சுப்ரீம்கோர்ட் ரத்து செய்துள்ளது. ஊழல் நடக்காமல், அந்த தீர்ப்பு வந்திருக்க முடியாது. சில ஆவணங்களை சாமியால் தரமுடியாமல் போய் இருக்கலாம். அதனால், இன்றைய தீர்ப்பு வந்திருக்கக் கூடும். அரசியல் ரீதியாக பிரதமரும், உள்துறை அமைச்சரும், பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ஊழல் எப் படி நடந்தது என்ப தற்கும், லைசென்ஸ்களை கோ ர்ட் ரத்து செய்தத ற்கும், மக்க ளிடம் இவர்கள் விளக்க வே ண்டும். இப்பிரச்னையை இனி மக்களிடம் கொண்டு செல்வோம்’ என்றார்.

– news in dinamalar

Leave a Reply