Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வடித்தெடுத்த அழகு ஓவியம் வர்ஷா பாலபாரதியின் மனநிறைவு தந்த நல்ல நடனம்

சென்னையில், மார்கழி இசை விழா முடிந்து, நடனம் மற்றும் நாக ஸ்வர இன்னிசை விழா முக்கியத்துவம் பெற் றது. முன்னணி நடன க்கலைஞர்களின் மாணவியர் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டு இந் திய கலைஞர்கள் நிறைய பங்கேற்கின் றனர். தனிநபர் நடனம் மற்றும் குழு என ப்படும் குரூப்பிரசன்டேஷன் இவை இர ண்டிலும், பரவலாக இன்று முன்னணி யில் இருப்பவர்கள், குருஷீலா உன்னி கிருஷ்ணன், அனிதாகுஹா ஆகியோர். இந்த இரண்டு கலைஞர்கள், ஒவ்வொரு மாணாக்கியர்களையும், ஒரு சிற்பி ஒரு சிலையை உருவாக்குவது போல் பார்த் து பார்த்து தான் உருவாக்குகின்றனர்.

அதில், வடித்தெடுத்த ஒரு அழகு ஓவியம் தான் வர்ஷா பாலபாரதி. குருஷீலாவின் மாணவி, படிப்பது பதினொன்றாம் வகுப்பு. நடனத் தில், இப்போது யுனிவர்சிடி ரேங்க் பெற்று விட்டார். அத்தனை அழ கான, கருத்தொருமித்து ஆழ்ந்து ஆட, இத்தனை சிறுவயதில் எத்த னை பக்குவம் என்று, அவர் நடனத்தை பார்த்த யாரும் வியந்தனர் பலர். த்யாகப்ரும்ம கான சபாவின், 23வது ஆண்டு நடன விழாவிற் காக, தன் அற்புதமான நடனத்தை ரசிகர்களுக்கு அளித்தார்.

புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, ராமாயணக் காவியத்தை மஹாரா ஜா சுவாதிதிருநாள், தன் இசைப் புலமையை முழுவதும் கொடுத்து வரிகளுக்கு வரிகள் ராமாயணக் காவியத்தை படைத்ததை, நம் கண்முன் தன் நடனத்தால் காட்சி பொருளாக நிறுத்தினார். ராமாய ணம் என்பது, பலரால் பாடி ஆடப்பட்டு, ரசிகர்களை பொறுத்த வரை அலுப்பு தட்டிய விஷயம்.

ஆனால், சிலர் பாடி, ஆடும் போது அதன் சுவை இன்னும் கூடுகிறது, என்பது தான் உண்மை. அப்படி, வர்ஷாபாலபாரதி பாவயாமி ரகு நாமம் ஸ்ரீகாந்த், தன் சொக்கத்தங்கக்குரலில் பாட, மிருதங்கத்தில் நாகை நாராயணன், பவானி பிரசாத் வீணை குழலில் – தேவராஜ். இந்த பக்கவாத்ய கூட்டணியால், ஒவ்வொருவரும் போட்டி போட்டு க் கொண்டு, வர்ஷாவின் நடனத்திற்கு வாசித்தது மற்றொரு சிறப்பு.

சாந்தாகாரம் சுலோகத்தில் தொடங்கி, திருமாலின் அழகையும், பெருமையும் விவரித்து தொடக்கமே மெய்சிலிர்த்து போனது.

மாருதி இலங்கையில் அடைந்து சூடாமணி கொடுத்து சீதை அழுது புலம்பிய காட்சிகள், வானரங்கள் சேது பந்தனம் அமைத்தது ராமனு ம், ராவணனும் போர் புரிந்த காட்சிகளின் இடத்திற்கு, ஷீலா விறுவி றுப்பாக ஜதிகளை மட்டும் கொடுத்ததால், போரின் தீவிரத்தை கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்த, நல்ல யுக்தி. இறுதியாக, அயோத் தியில் ராமன், சீதா பட்டாபிஷேக கோலாகல காட்சி.

அடுத்து, இப்போது மிக பிரபலமாக உள்ள கண்ணன் பாடல், விஷம க்கார கண்ணன்.செஞ்சுருப்பு ராகத்தில், குட்டிகண்ணனின் விஷமங் கள் குறி பார்த்து, ஆயர் பாடி பெண்களை கல்லால் அடித்தல், தயிர் பானை உடைத்தல், வெண்ணெய் திருடுதல், திருடன் என்று சொல் பவர்களின் மொத்த குடும்பத்தையே திருடன் என்று சொல்லுதல் நடனத்தில் அட்டகாசம் செய்கிறார் வர்ஷா. மனநிறைவு தந்த, நல்ல நடனம் வர்ஷா பாலபாரதியின் நடனம்.

– ரசிகப்பிரியா

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply