எங்கே போகிறது தமிழர் கலாச்சாரம், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஓயிலாட்டம், கரகாட்டம், புலியாட் டம், மானாட்டம், கரகாட்டம், கும்மி மற்றும் சாஸ்திரீய நடனமான பரதநாட்டியம் போன்ற அற்புதக் கலை களை நமது தமிழ் சமூகம் மறந்து போனது. நமக்கும் இது மரத்துப் போய் விட்டது.
கீழே உள்ள வீடியோவை பாருங்கள் பெண்களை குத்தாட்டம் போட வைத் தும், அவர்களும் தங்களுடைய அங்க அசைவுகளை காட்டி கூட்டத் தினரை மகிழ்விக்க நடனம் ஆடுகிறார்கள். இது என்ன கலாச் சாரமா?
இதுபோன்ற ஆபாச நடனம் வன்மையாக கண்டிக்கத்தக்கதே! தொன்றுதொட்டு வரும் நமது தமிழர்களின் கலாச்சாரத்தை கண்டு வெளிமாநிலத்தவர் ஏன் வெளிநாட்டினர்கூட போற்றிவரும் போது, நம் தமிழ்ச்சமூகம் மட்டுமே, “சகோதரிகளாக பாவிக்க வேண்டிய இளம் பெண்களை” ஆடவைத்து அவர்களின் அங்க அசை வுகளை ரசிக்கும் ஒரு கீழ்த்தரமான செயல்கள் நமது தமிழர் களை உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்துவதாக இருக்கி றது. எங்கே போகிறது என்றே தெரியவில்லை நம்முடைய தமிழர் கலாச்சாரம்.
மேலும் இதுபோன்ற ஆபாச நடனத்தை அரசு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.
– வேதனையுடன் விதை2விருட்சம் (video- thanks to youtube)