Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘உடலுறவு’ – மனிதனும் மிருகமும்..!!

‘செக்ஸ்’ என்ற இந்த செயல்பாடு எல்லா உயிரினத்துக்கும் பொது வானது. ஆனால் மனிதனை மட்டும் இது எத்தனை பாடுப டுத்து கிறது என்பது தினசரி செய்தித்தாள்களைப் பார்த்தா ல் தெரியும். ஆசைக்கு இன ங்காத காதலியைக் கொன்ற காதலன். கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனை வி, சிறுமி கற்பழிப்பு என்று ‘க ருவறை’ வரையில் ‘செக்ஸ்’ பரவி எல்லோரையும் ஆட்டி ப்படைக்கிறது. மனிதனை அது மிருகமாக்குகிறது.

மிருகங்களும் செக்ஸில் இத்தனை சுகங்களை அனுபவிக்கின் றனவா என்றால்… இல்லை என்பதுதான் பதில். மிருகங்களைப் பொறுத்தவரை செக்ஸ் என்பது வேட்டையாடுதல், உண வருந்துதல், தன் வசிப்பிடத்தைப் பாது காத்தல், தன் குட்டிகளைப் பேணுதல் போன்ற ஒரு உந்துதல்தான்.

வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் ஏற்படும் உடல் மாற்றங்க ளால் உந்தப்பட்டு எதிர்பாலின விலங் கோடு உறவில் ஈடுபடுவது ஒரு சடங்கு போல் நடை பெறும் விஷயம். மற்றபடி உறவின்போதோ, உறவுமுறிந்து பிரியு ம்போதோ, விலங்குகள் ஒன்றும் பெரி தாக பரவசப்பட்டுக் கொள்வதில்லை.

பரிணாம வளர்ச்சியில் மனிதனின் முன்னோர்கள் எனப்படும் கொரில்லா, சிம்பன்சி, உராங் உயின் போன்ற குரங்கினங்கள் கூட இனச்சேர்க்கையின்போது சாதாரணமாகத்தான் ஈடுபடுகி ன்றன. ஆக அனைத்து உயிரின ங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் கூட செக்ஸில் அதி க இன்பம் காணும் ஒரே மிரு கம் மனிதன் மட்டுமே! மிருகங் களின் மூளை மிகச்சிறியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சி களோடு சம்பந்தப்பட்டது. அதை அடக்கியாளும் ஆற்றல் அவற் றுக்கு இல்லை. எது? எப்போது? எப்படி? தோன்றுகிறதோ அதை! அப்போதே! அப்படியே! செய்துவிடுதல்தான் அதன் சுபாவம். உண ர்ச்சிவசப்படும் தன்மை அதிகம்.

மனிதனின் மூளை இதி லிருந்து மிக வித்தியாச மானது. மனித மூளை மிகப் பெரியது. அதில் பெரும்பகுதி உணர்ச்சி களை அடக்கி , கட்டுப் படுத்தி, சுய கட்டுப்பாடுட ன் சிந்தித்து, சூழ்நிலை களுக்கு ஏற்ப புத்திசாலித் தனமான முடிவுகளை எடுக்கக்கூடியது. இந்த முடிவுகளெல்லாம் மனி தனின் முன் மூளையி லேயே தோன்று கின்றன. வேறு எந்த விலங்குகளு க்கும் இத்தனை நுணுக் கமான முன் மூளை கிடையாது. அதனால் அவை உணவு, உஷ் ணம், உடலுறவு, பாதுகாப்பு என்ற நான்கு தேவைகளைத் தீர்த்துக் கொள்ளவே உயிர்வாழ்கின்றன.

மனிதனின் தேவையோ மிக அதிகம். அவனுக்கும் இந்த அடிப் படைத்தேவைகள் அவசி யம். என்றாலும்கூட பல உயரிய தேவைகள் அவனை வழி நடத்துகின்றன. நான் யார்? என் இலக்கு என்ன? என் சாதனை என்ன என்று தன் னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்வதில் சுவார சியம் அதிகம். ஆராய்ச்சி, பரந்தமனது, கலையார்வம், ரசனை, ஞானம் அறிவுப்பசி, ஆத்ம திருப்தி, படைப்பு த்திறன் என்று மனிதனின் முன் மூளையை பேரி ன்ப விஷயங்களே ஆக்ரமித்திரு க்கின்றன. அதனால் சிற்றின்ப சங் கதிகளை மூடி மறைத்து கட்டுப் படுத்திக் கொள்கிறான்.

மனைவியாக இருந்தாலும், காத லியாக இருந்தாலும் நினைத்த நேரத்தில் மனிதனால் விலங்குக ளைப்போல உடனடியாக உடலுறவு கொள்ள முடியாது. தனது ஏக்கங்களைத் தீர்த்துக் கொள்ள மனிதனுக்கு தகுந்த சூழல் வாய்க்க வேண்டும். அப்போது தான் எல்லாம் முடியும்.

funny tree

நினைத்தபோது ஆசையை தீர்த்துக் கொள்ள முடியாததாலும், மூடி மறை ப்பதாலும், காத்திருப்பதாலும், ஏங்கு வதாலும் ‘செக்ஸ்’ என்பதற்கு இயற் கையாகவே அதிக கவர்ச்சியும், அதிக சுகமும் சேர்ந்து கொண்டது. ஒரு வே ளை விலங்கு களைப்போல மனிதனு க்கும் எல்லாம் உடனே கிடைத்து விட்டால் அவனுக்கு செக்ஸில் இத்தனை சுவாரசியம் ஏற்பட்டிருக்காது.

நன்றி: தினத்தந்தி.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply