Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருணாநிதிக்குப் பின் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? – “குமுதம் ரிபோர்ட்டர்” சர்வே முடிவு

ருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்… இந்தக் கேள்வி திமுகவினர் மத்தியில் மட்டுமல்ல… கட்சி சாராத தமிழ் உணர்வாளர்கள் பலருக்கும் உள் ளது.
காரணம், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தமிழக அரசியலில் திமுகவின் ஆளுமை அப்படி!
கருணாநிதிக்குப் பின் திமுகவுக்கு அடுத்த தலைமை யார்? என்ற கேள்வியை முன் வைத்து ‘குமுதம் ரிபோர்ட்டர்’ வாரமிருமுறை இதழ் நடத்திய இந்தக் கருத்துக் கணிப் பில், மு.க. ஸ்டாலினே தலைமை க்குத் தகுதியானவர் என்று 58 சத வீதம் பேர் கருத்து தெரிவித்துள் ளனர்.
ஸ்டாலினுக்கு இன்று வரை தலை மைப் பதவி கிடைக்காமலிருக்க முக்கிய காரணம் என்று சித்தரிக்கப் படும் அழகிரிக்கு 12 சதவீத ஆதரவு மட்டுமே இருப்பதாக அந்தப் பத்திரிகை கருத்து தெரிவித் துள்ளது.
திமுகவிலிருந்து பிரிந்து போய், தனிக்கட்சி நடத்தி வரும் வைகோ வை 8 சதவீதம் பேர் திமுக தலைமைக்கு தகுதியானவர் என்று கரு த்து கூறியுள்ளார்களாம்!
இந்த சர்வேயில் இன்னும் இருவர் உண்டு. தயாநிதி மாறன் மற்றும் கனி மொழி!
தயாநிதிக்கு 5 சதவீத ஆதரவும், கனி மொழிக்கு 3 சதவீத ஆதரவும் உள்ள தாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது கனிமொழி ஆதர வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. காரணம், கனி மொழியின் ‘திகார் தியாகத்துக்கு’ கட்சியில் பெரிய பதவியை பரி சாகத் தர வேண்டும் என்று அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் வெளிப்படையாகக் கூறி வந்தார். கருணாநிதியும் அது குறித்து யோசிப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த சர்வேயை வெளியிட் டுள்ளனர்.
இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் திமுகவின் அடுத்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிற து என இந்த சர்வே முடிவு கூறுகிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: