Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“வந்து நில்லுன்னு சொன்னாலும் நான் நிற்பேன்” – நடிகை அஞ்சலி

வசந்தபாலன் என்னை ஒரு கூட்டத்தில் ஓரமா வந்து நில்லுன்னு சொன்னாலும் நிற்பேன், அதுதான் அவருக்கு நான் செலு த்தும் நன்றிக்கடன், என்று நடிகை அஞ் சலி கூறியுள்ளார். வரலாற்றுக் கதையம் சத்துடன் டைரக்டர் வசந்தபாலன் இயக் கியிருக்கும் படம் அரவான். இம்மாதம் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தில் நடிகர் பரத்தும், நடிகை அஞ்சலியும் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். வசந்த பாலனின் அங்காடித்தெரு படம் மூலம் பேசப்பட்டவர் அஞ்சலி . மிகப்பெரிய பிரே க் கொடுத்த வசந்தபாலுக்காக என்ன வே ண்டுமானாலும் செய்யத்தயார் என்று ஏற்கனவே பல பேட்டிகளில் கூறியிருக்கும் அஞ்சலி, அரவானில் கெஸ்ட்ரோல் கொடுத்ததற்காக தனது மகிழ்ச்சியை தெரிவித்துள் ளார்.

இதுபற்றி அஞ்சலி அளித் துள்ள பேட்டியில், “அரவான்” படத்துல நான் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கேன். ஹீரோ யினா நல்ல மார்க்கெட் இரு க்கிறப்ப ஏன் கெஸ்ட் ரோல்ல எல்லாம் நடிக்கிறன்னு நி றைய பேர் கேட்டாங்க. அது கெஸ்ட் ரோலா இருந்தாலும் எல்லா ராலயும் பேசப்படுற முக்கியமான ரோல்னு சொல்லிதான் வசந்த பாலன் சார் என்ன நடிக்கவே கூப்பிட்டார். பரத்தும் கூட அரவான்ல என்னை மாதிரியே ஒரு கெஸ்ட் ரோல்லதான் நடிச் சிருக்கார். அது முக்கியமான ரோலா இல்லையாங்கிறது ரெண்டாவது விஷயம். பரத்துக் கு வெயில்லயும் எனக்கு அங் காடிதெருவுலயும் அவர் கொடு த்த பிரேக்குக்கு ரெண்டு பேரும் கூட்டத்துல ஒரு ஓரமா வந்து நி ல் லுங்கன்னு சொன்னாக்கூட நிக்கனும். எனக்கு இப்படியொ ரு இடத்தை கொடுத்த அவரு க்கு, நன்றிக்கடனை இப்படி செலுத்துறதா நினைச்சுக்கிட்டேன், என்று கூறியிருக்கிறார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply