Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலிப்பது எப்படி? – காதலர்கள் ஸ்பெஷல்!

காதலிக்கச்சொல்லி வற்புறுத்தாதீர்கள்!

உங்களை காதலிக்க மறுக்கிறார்களா? விட் டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக் கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம் மை அவர்கள் காதல னாகவோ காதலியாக வோ நினைக்கவி ல்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவது தான் அசிங்கம் . உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!

“அந்த” விஷயங்களுக்கு அவசரப்படாதீர்கள்!

எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரியவங்க சும்மாவா சொ ன்னாங்க? அடல்ட்ஸ் ஒன் லி விஷயங்களில் ஈடுபடு வதற்கு ஆர்வம் ஏற்படத் தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தி ல் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல் ல ஐடியா.

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்ளுங்கள்!

காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத் தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனா ல் சிக்கலை உண்டாக்காத பெற்றோர் களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாரு ங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போ டாதீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதீர்கள்!
 
காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத் தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தா ல் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தா ல் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக் கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக்கொடுங் கள். உங்கள் பிறந்த நாளுக்குக்கூட உங் கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!

காதலனாக இருந்தால் டை, சட்டை, புத் தகம், பேனா, டயரி, ஷேவி ங் செட், அவ ருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக் கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதா வது வாங்கித் தரலாம்.
 
காதலி என்றால் மலிவு விலை யில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தக ம், பேனா, கையடக்கக் கண்ணா டி, மேக் கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதீர்கள்!

காதலனுக்கு / காதலிக்கு உங்களிட ம் இருக்கும் சில குணங்கள் பிடிக்க வில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச்சின்ன விஷ யங்களில் உங்கள் சௌகரியங்க ளைத் தியாகம் செய்யலாம். ஆனா ல் வேலையை விடுவது, நண்பர்க ளைப் பகைத்துக் கொள்வது- இதெ ல்லாம் உங்களுக்கும் உங்கள் காத லுக்கும் நல்லதில்லை.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர்    என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: