திருப்பதி சென்ற பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (73) குளியலறையில் வழுக்கி விழுந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார்.
திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவ மனையில் மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா செய்தாளர்களிடம் கூறுகை யில், “மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாச ராவ் தலைமை
யில் மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தலையில் காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது. கீழே விழுந்ததால் மூளையில் சேதம் ஏற் பட்டதா எனக்கண்டறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்தனர். கீழே விழுந்ததால் முதுகு வலி யால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல் நலம் குறித்து யாரும் பயப்பட வேண் டாம்’ என்றார்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்