Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’

உங்கள் மனைவி அவரது பிறந்த ஊருககு வழியனுப்பிவிட்டு இப்ப‍டி “எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று அக்னி நட்சத் திரம் ஜனகராஜ் பாணியில் குழிபடுபவரா?அப்ப‍டின்னா நீங்க தான் இத முதல்ல‍ படிக்க‍ணும். ஆமாங்க! அட படிங்கன்னா!

மனைவியின்  அன்பு உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்காததே! அவளை பிரியும் உங்களுக்கு இத்தகைய அற்ப சந்தோஷம் கிடை க்கிறது. முதல்ல இந்த கட்டுரைய படிங்க, பின் நடங்க,  மனைவி யின் அன்பை பெறுங்க, கட்டில்ல‍ ரொமான்ஸ் பண்ணுங்க•

உங்க மனைவியின் அன்பை பெற்றிட வழிகள் 10 உண்டு,

1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களா ல் நிறைய விஷயங்கள் முடி யும் என்று பெண்கள் நிரூபித் து நீண்டநாட்களாகிவிட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப் பதற்கு ஊக்குவியுங்கள் .

2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர் களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண் டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானப்படுத்துவதற் கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர் கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தைக் கைவிடா தீர்கள்.

4. உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்

‘ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிப்படுத் தும் உணர்வுப்பூர்வமான ஆண்களை யே பெண்கள் விரும்பு கிறார்கள் என்ப தே உண்மை. ஆனால் எதற்கெடுத்தா லும் கண்ணைக் கசக்காதீர்கள். அழு மூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடி க்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோச னையையும் கேளுங்கள். அது பணத்தைப் பற்றி யதாக இருக்கலாம், வேலை, தொழிலைப் பற்றி யதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக் காரராக இருக்கும் கணவரை மனைவிக்குப்பிடிக் கும். அப்படிப்பட்ட கணவர்தான் அவர்களைப் பொறுத்தவரை ‘முழுமையானவர்’.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்குப் பிடி க்கும் என்று தெரியும். மனை வியுடன் வழக்கமான விஷ யங்களை மட்டுமல் லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷ யங்களைப் பற்றியும் பேசுங் கள். உங்களின் எதிர் காலத் திட்டங்கள், கனவுகள், பயங் கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் ‘பங்கு கொள்ளுங்கள்’

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிப்போய் விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மரு மகனாக மனைவியின் வீட்டில் அக் கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பந்தப்ப ட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்குப் போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வே ண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்ப்பது நியாயம் தானே?

10. அவ்வப்போது ‘வழக்கம்போல்’ இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வே ண்டும் என்பதில்லை. அவ்வப்போது, ‘நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று ‘பழைய டயலாக்’ பேசுவதில் தவறி ல்லை.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வு

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: