Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெரியார் சொன்ன‍ அரிய வரிகள்

*மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

*பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
*மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகை வன்

*விதியை நம்பி மதியை இழக்காதே.

*மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

*மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

*பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

*பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

*பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை . ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
*தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
*கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையு மே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

*பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

*ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

*ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலை யும் பயன்பட்டு விடக்கூடாது.

*வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

*ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வ தே ஒழுக்கமாகும்.

*என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண் மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால்,  அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.

*மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதி லேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

Leave a Reply