Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாலத்தீவில் நெருக்கடியும், இந்தியாவின் நிலைப்பாடும் – வீடியோ

பதவி விலகிய மாலத்தீவு அதிபர் முகமது நஷீத்தை கைது செய்ய நீதிமன்றம் நேற்று வாரன்ட் பிறப்பித்தது. அவரை தேடி கண்டுபிடித்த ராணுவம், நடுரோட்டில் தர தரவென இழுத்து சென்றது.

இதனால், நஷீத் ஆதரவாளர் கள் வன்முறையில் ஈடுபட் டதால், கல வரம் வெடித்தது. மாலத் தீவில் 2008 வரை 30 ஆண்டுகளாக அதிபராக இரு ந்தவர் மக்மூம் அப்துல் கயூம் . அவரது சர்வாதிகார ஆட்சி முடிந்து ஜனநாயக முறைப் படி தேர்தல் நடந்து, முகமது நஷீத் அதிபரானார். துணை அதிபராக முகமது வாகீத் ஹசன் பொறுப்பேற்றார்.

 இந்நிலையில், கயூமுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, குற்ற வியல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை, பதவி நீக்கம் செய்ததுடன் கைது செய்து சிறையில் அடைத்தார் அதிபர் நஷீத். இதையடுத்து, எதிர்க்கட்சியினர் தலைநகர் மாலியில் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக போலீசாரும் கிளர் ச்சியில் ஈடுபட்டனர். ராணுவம் களத்தில் இறங்கியது. ராணுவம் & போலீஸ் இடையே மோதல் வெடித்தது. இதனால், கடும் குழப்பம் ஏற்பட்டது.  பிறகு, ராணுவமும் நஷீத்துக்கு எதிராக திரும்பியது.

இதனால், நஷீத் நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். சினிமா வை போல் பரபரப்பான காட்சிகளுக்கு இடையே நேற்று முன் தின மே துணை அதிபர் முகமது வாகீத் ஹசன், புதிய அதிபரானார். அவர் உடனடியாக நீதிபதி அப்துல்லா முகமதுவை விடுதலை செய்தார். எனினும், வாகீத் ஹசன் அரசு தற்காலிகமானது என்றும், ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் பிபிசி உட்பட சர்வதேச மீடியாக்களில் தகவல்கள் வெளியாகின.

 இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் நஷீத் தை கைது செய்ய மாலி நீதிமன்றம் நேற்று அதிரடியாக வாரன்ட் பிறப்பித்தது. இதற்கிடையே, அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு தப்பியோடினர். அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட னர். நஷீத்தை கைது செய்ய ராணுவம் தேடியது. வணிக வளாக த்தில் பதுங்கியிருந்த அவரை நேற்று மதியம் பிடித்த ராணுவத்தினர், அவரை நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்றனர்.

அவரை கைது செய்ய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. அப் போது தடுமாறி கீழே விழுந்த நஷீத்தை அப்படியே இழுத்து சென்ற னர். இந்த காட்சிகளை டி.வி.யில் பார்த்த அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால், மாலத்தீவில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது.

முன்னதாக, நஷீத் நேற்று காலை அளித்த பேட்டியில், ‘கயூமின் தூண்டுதலின் பேரில் ராணுவம் செயல்பட்டுள்ளது. என்னை துப்பா க்கி முனையில் மிரட்டியதால்தான் ராஜினாமா செய்தேன். உலக நாடுகள் உடனடியாக தலையிடா விட்டால், நிலைமை விபரீதமா கும்’ என்றார். மனித உரிமை அமைப்புகள் இதுபற்றி விளக்கம் அளிக் குமாறு புதிய அரசை வலியுறுத்தியுள்ளன.

மாலத்தீவு அதிபராக இருந்த முகமது நஷீது பதவி விலகிய பிறகு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

அரசியல் பதற்றம் தொடர்வதால், இந்தியா தனது பாதுகாப்பு நெருக் கடி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து வருகிறது.

மாலத்தீவு நிலைமை பற்றி நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத் தினார்.

மீட்பு நடவடிக்கை தேவைப்பட்டால், அதை சமாளிப்பதற்கு போர்க் கப்பல்களும், போர்விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளன.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

  • வணக்கம்
    உங்கள் இணையம் மிகவும் சிறப்பப இருக்குது
    வாழ்த்துக்கள்
    சுவிசிலிருந்து …………. ராஜா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: