கால்ஷீட் பிரச்சினை காரணமாக, ரஜினி யின் கோச்சடையான் படத்தில் நடிக்க நடிகை சினேகா மறுத்து விட்டார் அத னால் அவருக்குப் பதில் ருக்மணி ஒப்பந் தம் செய்யப் பட்டுள்ளார்.
‘கோச்சடையான்‘ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) தொட ங்குகிறது. இந்த படத்தில், ரஜினி காந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா ஆகியோ ரும் நடிக்கிறார்கள். ரஜினியின் தங்கை வேடத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.
அவர் மே மாதத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் அந் த மாதம் அவருக்கும் பிரசன்னாவுடன் திருமணம் நடக்கும் எனத் தெரிகிற து. ஏற்கெனவே சினேகாவும் பிரசன் னாவும் மாறி மாறி இதனை பத்திரி கைப் பேட்டிகளில் கூறி வருகின்ற னர்.
எனவே அந்த நேரத்தில் அவர் கோச் சடையானில் நடிக்க முடியாது என் பது தெரிந்து, அவருக்குப் பதில் ருக்ம ணியை ரஜினியின் தங்கை வேடத் தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ருக்மணி சிறந்த நடனக் கலைஞர். பாரதிராஜா இயக்கத்தில் `பொம்ம லாட்டம்‘ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். முக்கிய கலை நிகழ்ச்சிகளில் இவரது நடனம்தா ன் இப்போதெல்லாம் ஹை லைட். கோச்சடையானுக்காக நேற்று நட ந்த ‘போட்டோ சூட்’டிலும் (புகைப் பட ஷூட்டிங்) கலந்து கொண்டார்.
ரஜினியின் ஜோடியாக கத்ரீனா கை ஃப் நடிக்கவிருந்து, திடீரென கடை சி நேரத்தில் அவருக்குப்பதில் தீபிகா படுகோன் ஒப்பந்தமாகி விட் டது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவு