பொதுவாக தங்கத்தையும், வைரத் தையும் அதன் அடர்த்தியை வைத்து தான் மதிப்பிடுகிறார்கள். தங்கம் பொ துவாக 24 கரட், 18 மற்றும் 9 கரட் அள வில் கிடைக்கிறது. தங்கம் எல்லா விதமான அளவிலும் நாம் வாங்கும் விலையில்தான் உள்ளது. வைரக் கற் கலில் நாம் வாங்கும் (சாதாரணர்கள்) விலையில் கிடப்பவை 0.05 கரட் மட்டுமே. 1 கரட் வைரக் கற்கள் மிகு ந்த விலையானவை. அதிலும் 2 கரட் என்றால் அதி உச்சவிலை மதிப்பான வை.
ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்று கேட்டால் பூமி யில் உள்ளவர்கள் தலைசுற்றி விழு வது நிச்சயம்.
அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் கரட் ஆகும். அக்கிரகத்தி ல் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில் லியன் பெறுமதியாக இருக்கும்.
இது உருவான வரலாற்றை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் அனைவரு ம் மண்டையை பிசைந்து கொண்டி ருக்கிறார்கள். முதல் தகவலில் அவர்கள் அறிந்து கொண்டதாவது, ஒரு காலத்தில் சூரிய க் குடும்பத்தில் உள்ள சூரியனைப் போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம்.
புவியிலிருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அக்கிரகம் உள்ளது. அதா வது 50 ஒளியாண்டுகள் என்பது “ஒளி 50 ஆண்டுகளில் பயணிக்கும் தூரம் ஆகும். ஒரு நொடியில் ஒளி சுமார் இலட்சத்து 86,000 கிலோ மீற்றர் தூரம் செல்லும் என்றால் 1,86,000 ஐ 60ல் பெருக்கி, அதை 24ல் பெருக்கி வரும் விடையை 365ல் பெருக்கி னால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால், 50 ஒளியாண்டுகள் என் றால் எவ்வளவு தூரம் வரும் என்று நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டா மல் போய்கிட்டது என்று சொல்லுவார்கள். டெலஸ்கோப்பில் பார்த்து நாம் மகிழலாம் போவது நடக்காத இயலாத காரியம்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்