Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(12/2)- இறந்த காலம் ஏற்படுத்திய காயங்களுக்கு அருமருந்து “மறப்பது”

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது 23. நான் பிளஸ் 2 முடித்தவள். இப்போது, இள ங்கலை தொழில் நிர்வாகம் இரண்டாம் ஆண்டு, தபாலில் படித்து வருகிறேன்.

என் பெற்றோர், என் சிறு வய திலேயே இறந்து விட்டனர். என் பெற்றோருக்கு மொத் தம் , 14 குழந்தைகள். நான்கு குழந்தைகள் இறந்து விட்ட ன. ஐந்து அக்கா, நான்கு அண்ணன்கள். கடைக்குட்டி நான்.

அப்பா பெரும் பணக்காரராய் இருந்தவர்; ஆகையால், வீட்டில் பணத் தட்டுப்பாடே இருந்ததில்லை. அம்மா இளகிய மனம் கொண்டவர்; அப்பாவோ கோபக்காரர். ஆனால், பாசக்காரர். அம்மா உயிரோடு இருந்தவரை ஆழமாக நேசித்தவர். ஆனால், அப்பாவுடனான சிறிய சண்டையில், அம்மாதான் உயிரை மாய்த்துக்கொண்டாராம். அம்மா இறக்கும் போது, எனக்கு வயது மூன்று. அந்த வயதிலிருந்தே, தாய் பாசத்திற்காக ஏங்கி தவித்திருக்கிறேன். அம்மாவின் தற்கொலைக் குப்பின், எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்ட அப்பா இறந்து போ னார்.

அப்பா, தன் ஆயுளில், மூவருக்கு மட்டும் திருமணம் செய்வித்து, பேரக் குழந்தைகளை பார்த்துவிட்டு போனார். பெற்றோருக்கு பின் அண்ணன், தந்தையாகவும், அக்கா, அம்மாவாகவும் மாறி, குடும்பத் தைக் காப்பாற்றினர். மூத்த அக்காவும், மூத்த அண்ணனும், இளைய இரு அக்காள்களுக்கு திருமண வயது வந்ததும், வரன் பார்த்து திரு மணம் செய்து வைத்தனர்.

நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபின், படிப்பை நிறுத்தி, சமையல் பொறுப்பையும், குடும்ப பொறுப்பையும் ஏற்றேன். பிளஸ் 2 தனித் தேர்வு எழுதி பாசானேன். பெரிய அண்ணன், காதல் திருமணம் செய்து, வீட்டை விட்டு வெளியேறினான். இரண்டாவது அண்ணனு ம், நானும் சேர்ந்து, குடும்பத்தை கவனிக்கிறோம். இரண்டாவது அண்ணன், சுயதொழில் செய்கிறார். இரு இளைய அண்ணன்களை படிக்க வைத்தோம். பட்டபடிப்பு முடிந்து, இருவரும் வேலையில் உள்ளனர். வேலை செய்யும் இடத்தில் தங்கியும் விட்டனர்.

சிறிய அண்ணன், 19 வயதிலேயே எங்கள் வீட்டிலிருந்து, நான்கு வீடு தள்ளி குடியிருக்கும் ஒரு பெண்ணை காதலித்தான். அதன்பின், வீட்டில் பெரிய கலாட்டாவே நடந்தது. கடைசியில் அப்பெண், என் னை குற்றம் சாட்டிவிட்டு சென்றாள். இது, என் இரு பெரிய அண் ணன்களுக்கு தெரிய வந்தது. அண்ணன்மார், பெண்ணின் பெற்றோ ரிடம், “இந்த காதல் தவறானது; நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். உங்கள் மகளை கண்டித்து வையுங்கள்…’ என கூறினர். பெண்ணின் தாயார், பெண்ணிடம், “படிப்பில் சந்தேகம் கேட்கத்தானே அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்த… இப்ப அவங்க தம்பிய நீ காதலிக்கிறதா வீண்பழி சுமத்துகின்றனரே… உண்மை யா?’ எனக் கேட்டுள்ளார். அதன்பின், வீட்டில் பெரிய கலாட்டாவே நடந்தது, கடைசியில் அப்பெண், என்னை குற்றம் சாட்டிவிட்டு சென்றாள்.

ஏழு வருடம் உண்மையாக இருந்த எனக்கு, இந்த அவதூறு தேவை யா? அரளி விதையை அரைத்து குடித்து விட்டேன். உயிருக்கு ஆபத் தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டேன். ஊரில் சிறுவன் முதல் பெரியோர் வரை வந்து பார்த்து, “இந்த மகராசிக்கு இந்த நிலைமையா?’ என வேதனித்தனர். மூன்று நாட்கள் உயிருக்கு போராடி பிழைத்தேன்.

இச்சம்பவம் நடந்து, மூன்று வருடங்களாகிறது. இப்போது, என் மீது அவதூறு கூறிய பெண், என் அண்ணனுக்கு போன் செய்து, “நான் இன்னும் உன்னை மறக்கவில்லை. அன்னைக்கி நம் காதலை நான் தெரிவித்திருந்தா, என் படிப்பை நிறுத்தியிருப்பாங்க. பல விபரீத விளைவுகளும் ஏற்பட்டிருக்கும். அதனால், உன் தங்கையின் பெய ரை இழுத்தேன். அவளிடம் கூறி, என்னை மன்னிக்க சொல்…’ என்றி ருக்கிறாள். எங்கள் அனைவரின் அபிப்பிராயங்களையும் புறக்கணி த்து, மீண்டும் அவள் மேல் காதலாய் திரிகிறான் சின்ன அண்ணன். அவளின் பெற்றோருக்கு தெரியாமல், அவர்களின் காதல் லீலை மீண் டும் ஆரம்பித்து விட்டது.

அம்மா… என் அண்ணனால் அவளை மறக்க முடியவில்லை; என் னால், அவளை மன்னிக்க முடியவில்லை. அவள் அழகானவளும் அல்ல, ஒழுக்கமானவளும் அல்ல. “இப்ப, நீ நிறைய சம்பாதிக்கிற. அதனால், நம் பெற்றோர், நம் காதலை ஒத்துப்பாங்க…’ என்கிறா ளாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே கூறுங்கள் அம்மா.

— இப்படிக்கு
அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —

உன் அண்ணனின் காதலி கூறிய பொய்கள் இரண்டு. ஒன்று…. உன் அண்ணனை காதலிக்கவில்லை என்றது. இரண்டு… உன் நடத்தை மீது களங்கம் சுமத்தியது.

எனக்கு இருக்கும், படித்த தோழிகளிடம் அபிப்பிராயம் கேட்டேன். அண்ணனின் காதலியை மன்னிக்கலாமா, வேண்டாமா?

அண்ணனின் காதலி எந்த சூழ்நிலையில், இரு பொய்களை கூறி னாள் என்று பார்ப்போமா?

“ஆம்… அவனை காதலிக்கிறேன்…’ என அவள் கூறியிருந்தால், அவளை பெற்றோர் அடித்து, உதைத்திருப்பார். அல்லது குறைந்த பட்சம் படிப்பை நிறுத்தி, ஏதாவது ஒரு கூன் குருடுக்கு இரண்டாம் கல்யாணம் கூட செய்து வைத்திருப்பர்.

அவளின் புகைப்படம், உன் அண்ணனிடம் எப்படி வந்தது என்ற கேள் விக்கு, உன்னை பாதிக்காத வேறு என்ன பொய்யைக் கூறி அவள் தப்பித்திருக்க முடியும்? அவளும், மற்ற தெருப் பெண்களும், உன் விளையாட்டுத் தோழிகள். ஆகையால், உன் பெயரை வைத்து பொய் சொல்லி விட்டாள். அண்ணன் அடித்தவுடன், இருவருக்கும் இடை யே இருந்த உறவைக் கூறியவுடன், அண்ணனை அடிக்க முடியாமல், வார்த்தைகளால் உன்னை அடித்து விட்டாள்.

அவளின் அவதூறுக்காக, நீ தற்கொலை வரை போயிருக்கக் கூடா து மகளே… ஆணோ, பெண்ணோ, தன் வாழ்நாளில் குறைந்த பட்சம், நூறு அவதூறுகளை, வதந்திகளை சந்திக்க வேண்டியிருக்கி றது. நாம் பயப்பட வேண்டியது, இறைவனுக்கும், மனசாட்சிக்கும் தான்.

நீ, உன் குடும்பத்தை, அண்ணன்மார்களை, அக்காமார்களை பிர பஞ்சம் அளவுக்கு நேசிக்கும் இளவரசி!

உன் அண்ணன், அவள் மேல் காதலாய் கசிகிறான். இருவருக்கும் திருமணமாகும் சூழ் நிலை உருவாகலாம்.

இறந்த காலம் ஏற்படுத்திய காயங்களுக்கு அருமருந்து மறப்பது. ஆகையால், அவளது அபவாதத்தை மற. மன்னிப்பு உலகின் கொடிய தண்டனை. அந்த கொடிய தண்டனையை அண்ணனின் வருங்கால மனைவிக்கு வழங்கு.

அவள், உன்னை அவதூறு செய்ததற்கு காரணம், போன பிறவியில், நீ அவளுக்கு ஏதாவது தீங்கு செய்திருப்பாயோ? அவதூறை சுமத்தி, அதிலிருந்து புடம் போட்ட தங்கமாய் எப்படி மீண்டு வருகிறாய் என பார்க்க, பரம்பொருள் போட்ட நாடகமோ?

உன்னின் மன்னிப்பு, உன் மீதி வாழ்நாளில் வண்டி, வண்டியாய் சந்தோஷங்களை கொண்டு வந்து கொட்டும். அண்ணனின் காதல் திருமணத் திற்கும், உன் திருமணத்திற்கும் அழைப்பு அனுப்பு மகளே!
உன் அண்ணனின் காதல் திருமணத்திற்கு முன், உன் திருமணம் நடப்பது ஷேமம். நீ திருமணமாகி போய் விட்டால், அண்ணனின் மனைவியை, அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இராது; அது, உங்களிரு வருக்கும் நல்லது.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: