Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னியர்களையும், காளையர்களையும் சங்கடப்படுத்துகிறதா? இந்த “காதலர் தினம்”

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 வந்தாலே பெரியவர்கள் கொஞ் சம் எச்சரிக்கையாகி விடுகி றார்கள். இன்றை  கன்னியர் களும், காளையர்களும் இந்த‌ காதலர் தினம் கொண்டாடுவ து தான். சிலர் இந்த கொண் டாட்டம் வந்தால் என்ன என் று இருந்து விட லாம்.

மேலும் சிலர் இந்த நாளை வைத்து என்ன நடக்குமோ? என்ற அச்சத்துடனும் காணப்படுகின்றனர். இந்த நாளைப் பற்றி பல விதமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

கட்டிளம் கன்னியர்களையும், காளையர்களையும் சங்கப்படுத்து கிறதா இந்த காதலர் தினம்

இந்த தேசத்தின் துடிப்பான வாலிபர்கள், நாணிக் கோணி மலர்க் கொத்து நீட்டும் அசடுக ளாகவும்,  இயந்திரத்தனமாக வாழ்த்து அட்டை விநியோகி க்கும் வாத்துகளாகவும், தங்கள் திராணியற்ற தன்மையை எண் ணி அசைபோடும்  முட்டாள் கா ளைகளாகவும்  ஆக்கி, வேடிக் கை பார்க்க மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் போட்ட திட்டம் வெற் றிகரமாக நிறைவேறியிருப்பதைக் கொண்டாடும் தினம் என்று சொல்லலாமா?

மதிப்பையும், வசீகரத்தையும், தங் கள் வாழ்க்கையின் சாராம்சத்தையு மே ஒரு சில மலர்க் கொத்துக்களும், வாழ்த்து அட்டைக ளும்,  பாசாங்குப் பேச்சுகளும்  தீர்மானிப்பதாக   கன்னி யர்களை மறுக வைக்கிறது. அதே நுகர்வு மந்திரவாதிகள் விரித்த மாய வலையில் கிளிகள் சிக்கிக் கொண்ட தைச் சொல்லும் தினம் என்று சொல் லலாமா? ஆதரவும், அவலமும் எது எப்படி இருந்தாலும், இந்த காதலர் தினத்திற்கு கன்னியர்கள், காளைய ர்கள் மட்டத்தில் எப்போதுமே ஒரு வித ஆதரவுத் தளம் இருந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு ஆதரிப்பவர்கள் இந்து மதம், வேதகாலம் தொட்டு காத லை அங்கீகரித்து வந்ததை ஆதாரமாக காட்டுகிறார்கள். ஆனால், இப்படி ஒரு தினம் வேதகாலத்தில் இருந்ததா? என்று கேட்டால் சிக்கல் தான். ஆனால், சில கல்லூ ரிகளில், சில சித்திரவதைகளும் காதலர் தினத்தை வைத்து நடப் பதாகத் தெரிகிறது. அது என்ன தெரியுமா?

இருபாலருக்கும் இடையில் இய ல்பான, ஆரோக்கியமான,  பாலிய ல் சாராத அதே சமயம் ஆர்வமூட் டுகிற  நட்புகளைப் புரிந்து கொள்ளவோ,  ஊக்குவிக்கவோ இன்னு ம் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில்,  காதலர் தினத்தின் வருகை வருடாந்திர வெள்ளத்திற்குத்தான் ஒப்பிடத்தோன்று கிறது.

அடங்கி இருந்த ஆறு, கரையை உடைக்கிறது.  அதன் பக்க விளை வுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவ ற்றை எப்போதுமே நாம்  தவறில்லாமல் கணித்து விடவும் முடியும்.

இது என்ன சுயம்வரமா?

நகரங்களில் வசிக்கும் உயர்பள்ளி மாணவர்களுக்கு இந்த திகில் ஜனவரி மாதக் கடைசியிலேயே ஆரம்பித்து விடுகிறது என்று தோ ன்றுகிறது. பருவம் துளிர்விடும் அந்த வயதில், இயல்பாக வரும் உணர்ச்சிகளை, அவற்றின் இயல் பான போக்கில் கையாள விடுவது நல்லது.

ஆனால் இந்தத் தினம் வந்துவிட் டால், அன்று தனது  காதலியை தெரிவுசெய்து அனைவர் முன்னி லையிலும் முரசறைய வேண்டி ய கட்டாயத்துக்கு ஒவ்வொரு பையனும் ஆளாகிறான். அப்படிச் செய்யவில்லையென்றால் அவனது  சுயமதிப்பே கேள்விக் குறியா கிவிடும் அபாயம்!  முயற்சியில் தோல்வி என்றால், என்ன ஆகும் என்று சொல்வதற்கில்லை.

மூன்று நான்கு  பேர் தன்னை  காதலி என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற தர்ம சங் கட குழப்பத்தில் வேறு சில பெண் களும், வரும் காதல் கோரிக்கை யை ஏற்றுக் கொள்வதா வேண்டா மா என்று சில பெண்களும் இருக் கிறார்கள். ஆக, பையன்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, எவ்வளவு பெரிய கொடுமை, சித்ரவதை இது.

மாறாத சிந்தனைகளும்.. மயக்கங்களும்

அதுவும் இந்தப் பையன்கள் எல்லாரும் மேற்கத்திய சூழ லில் வளர் பவர்களல்ல, தா ன் “காதலிக்கும்” பெண்ணை கைவிடாமல் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒருவிதமான சராசரி  தமிழ் இந்துக் குடும்ப மன நிலையுடன் வளர்க்கப்ப ட்டவர்கள்.

எதிர்ப்படும் பெண் சிந்தும் ஒரு நொடிப் புன்னகைக்கான ஒரே எதிர் கால சாத்தியம்  டூயட்-தாலி- மேளம் என்பது போன்ற ஒருவித மனச்சித்திரத்தை திரைப்படம், ஊடகங்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் பார்க்கும் நிகழ் வுகளின் மூலம் உருவாக்கிக் கொண்டவர்கள்.

மேலும் சொல்லப் போனால், வேலண்டைன்ஸ் டே என்பது ஒரு ”நட்புப் பரிமாற்றம்”  என் று பிரசாரம் செய்யும் ஊடகங் களே ஒரு குழம்பிய மனநிலை யில் தான் இருக்கின்றன. பல்வேறு ஊடகங் களிலும் கப்பி லவ் வேஸ் டே என்று போட்டு கல்யாணப் படம் போடுவதையும் நாம் பார்க்கலாம்.

தங்கள் எதிர்பாலாரின் நட்பை எப்படி? ஏந்த வகையில் பேணுவது என்ற குழப்பம் எல்லா யுவன்கள், யுவதிகள் மனங்களிலுமே இருக் கிறது. அது காலப் போக்கில் தன்னியல்பில்  தீரும், அது தான் நல்ல தும் கூட.

ஆனால் வேலண்டைன்ஸ் டே  இந்த விடயத்திற்கு ஒரு வருடாந் திர தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற தேவையில் லாத அழுத்தத்தை உருவாக்குகிறது..  இத்தகைய இயல்பான உறவுகளின் நெகிழ்வுத் தன்மையைக் குலைக்கிற து என்று  நினைக்கிறேன்.

ஒரு உறவை  girl friend  என்று சட்டெ ன்று முடிவெடுக்க வேண்டும். கஷ்ட காலம்,  Girl Friend  என்று சொல்லி விட்டால் அது சாதாரண விடயம் அல்ல, மேலே சொன்னமாதிரி பெரிய நீண்ட காலக் கொக்கி பற்றிய கற்பிதங்களுக்கே அது இட்டுச் செல்லும். அதனால் தான்  “வேலண் டைன்ஸ் டே”  அன்று  நிராக ரிப்பு விகிதங்களும்  மிக அதிகமாக இரு க்கின்றன.  எந்தப் பெண் இப்படி வே ண்டாத கற்பனைக் கொக்கிகளில் மாட்டிக் கொள்ள நினைப்பா ள்?

அதனால் பெப்ரவரி வந்துவிட்டா லே  நம் நாடுகளில் (இந்தியா, இல ங்கை) கல்லூரி இளைஞர்கள் ஒரு வித பரபரப்புடனே காணப் படுகிறா ர்கள். பார்த்தாலே பரிதாபமாக இரு க்கிறது. மந்தையில் ஒட்டாமல் இஷ் டப்பட்டதை செய்வேன் என்று இருப்பவர்களே இந்த “மைய நீரோட்டத்திலிருந்து” தப்பிக்கிறார் கள். அவர்களுக் கும் ஏகப்பட்ட அழுத்தங்கள், மன உளைச்சல்கள் ஒரு வித தனிமை உணர்வு எல் லாவற்றையும் அனுபவிக்க வே ண்டி வருமே.

கல்லூரிப் பருவத்தின் “காயங்க ள்” அப்படியே பல்கலைக் கழகத் திலும் தொடர்கின்றன. சில பைய ன்கள் பெண்களுடன் ஒரு உரை யாடலை நிகழ்த்துவதற்கே சங்க டப்படுகிறார்கள். அசடு வழிகிறா ர்கள்.

காயங்கள் ஏற்படுத்தும் காலம்.

நம் நாட்டிலுள்ள சில கல்லூரிகளில் பெப்ரவரி முதல் இரண்டு வார ம்  கறாரான கண்காணிப்புகள் இருக்கின்றனவாம். ஆண்-பெண் ”தொடர்பு”கள்  புன்னகைகள் சின் ன உரையாடல்கள், சேர்ந் து சிரிப்பது கண்டுபிடிக்கப்பட் டால் உடன் அழைத்துச் சென்று கடுமையாக எச்சரித்து அனுப்பு வார்களாம்!   ”காதலர் தினம்” எங்கிருந்து எங்கு நம்மைக் கொண்டுவந்து விட்டுவிட்டது பாருங்கள்!

இப்படி எல்லாம் இருந்தாலும், காதலர் தினத்தை முற்றுமாக எதிர் ப்பதும், காதலைச் சாடுவதும் மிகவும் தவறானது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

காதலர்களுக்கு ஆதரவாக இரு ந்த வாலன்டைன் என்ற பெயரு டைய கிறிஸ்தவ பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டதாகவு ம் அவரது நினைவாகவே காத லர் தினம் கொண்டாடப்படுகி றது என்று சொல்லப்படுகிறது. பிற்கால மேலைத்தேய ஆதிக் க வாதத்தின் விளைவே இது என்று சொல்வோரும் உள்ள னர்.

காமன் / ஹொலிப் பண்டிகை (தமிழ்- இந்து மரபில் காதலர் தினம்)

இந்து மரபில் காமன் பண் டிகை கொண்டாடும் வழக் கம் இருக்கிறது. அதனை இந்த காதலர் தினத்துடன் ஒப்பிட்டுப் பேசுவர். மாசி மாதத்துப் பூரணையை அடுத்து ஆரம்பமாகும் இப் பண்டிகை பங்குனிப் பூர ணையுடன் நிறைவடையு ம் என்று குறிப்பிடப்படுகி றது.

தமிழ் நாட்டுக் கிராமங்களில் இன்னும் வெகு விமரிசையாகக் கொ ண்டாடப்படும் காமன் பண்டி கையின் போது ‘காமன் கூத்து’ ஆடப் படுகிறது. இக்கூத்தில் சிவபெருமான் காதல் தெய்வ மான மன்மதன் என்ற காமனை எரித்த வரலாறு கூத்தாக நடத் திக் காட்டப்படுகிறது. இலங் கையின் மலையகத்திலும் இக் கூத்து இக்காலத்தில் ஆடப்படு கின்றமையைக் காணலாம்.

அகநானூற்றில் ”பங்குனி முழக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித் தொகையி ல் ”மல்கிய துருத்தி யுள் மகிழ் துணைப் புணர்ந் து… விளையாடும் வில் லவன் விழவு” (35:13 -14) என்றும் குறிப் பிடப் படுகின்ற காமன் பண்டி கையே சங்ககாலக் காத லர் தினம் எனத் தெரிய வரு கிறது.

இன்றைக்கும் வட இந்தியாவில் ‘ஹொலி’ப்பண்டிகை என்று இக் காலத்தில் காமன் பண்டிகையாகிய காதல் திருவிழாவைக் கொண் டாடுகிறார்கள்.

காமனுக்கு அனங்கன் என்றும் பெயரு ண்டு. சிவன் தவம் செய்து கொண்டிருந் தபோது, அத்தவத்தைக் கலைப்பதற்கா கச் சிவன்மீது காதல் உணர்வுகளை ஏற் படுத்தும் கணைகளை மன்மதன் தொ டுத்தமையால் தவம் கலைந்த சிவனு டைய நெற்றிக்கண்ணின் கதிர் வீச்சு க்குக் காமன் பலியானான்.

அதனால் அவனுக்கு அங்கம் (உடல்) இல்லாதவன் என்று பெயர் வந்ததாக விளக்கம் கூறப்படுகிறது. காளிதாசனி ன் குமாரசம்பவம் இந்த விளக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

தமிழ் இலக்கியங்களில் உருவிலி என்ற பெயரால் மன்மதன் குறி ப்பிடப்பட்டுள்ளான். காதல் உணர்வு என்பது எவ்வாறு இரு பாலார் மனதிலும் விதைக்கப்பட்டு வேர் பிடித்து வளர்கிறது என்பது எளிதில் கணி த்துச் சொல்லமுடியாத ஒன்றாக இருப்பதாலு ம் இத்தகைய உணர்வுக்குக் காரணமான தெய்வத் தத்துவத்தை உருவிலி என்றும் அனங்கன் என்றும் குறிப்பிட்டிருக்கக் கூடும்.

மேலைத்தேய திணிப்புகளிலிருந்து விடு படுவோம். காதலை நேசிப்போம்

இன்றைய வணிக மயமான சூழலில் ஃபா ஷன் ஷோக்கள் (Pashion shaw), அழகிப் போட்டிகள் போன்றவை எவ்வாறு முத லாளித்துவச் சுரண்டல்வாதிகள் கையி லும், நேர்மையும் நுண்ணுணர்வு மற்ற இடைத்தரகர்களிடத்திலும் சென்றடைந்துவிட்டனவோ அவ்வாறே தனிமனித சுதந்தி ரம், பெண்ணியம் போன்றவற் றையே மலினப்படுத்துகின்ற பாலுணர்வு அரசியல் போக்கிரி களின் விளையாட்டுக் கூடமா கக் காதலர் தினக்கொண்டாட்ட ங்கள் மாறி விடக்கூடிய அவல நிலையே நிலவு கிறது.

ஆகவே, மேற்கத்தேய திணிப்பா ன இக்காதலர் தினமானது இன்றைய சூழலில்.. நமது பண்பாட்டு க்கு எதிரான ஒன்று என்ற கருத்தை முற்றாக மறுதலிப்பதற்கு இல் லை. ஏனெனில் அது தன் உண்மையான கருத்தை உடைத்து சிதை ந்த நிலையில் வீணான பண்பாட் டுச் சிதைவுகளை உண்டாக்குவ தாக அமைந்து விட்டது.

எனினும், நமது பாரம்பரியமும் தமிழ்க் கலாச்சாரமும், இந்து தர் மமும் ஒரு போதும் காதலை எதி க்கவில்லை என்பதும், எப்போ தும் அது காதலுக்குச் சார்பாகவே செயற்பட்டது என்பதும் புரிந்து கொ ள்ளப்பட வேண்டியது. நமது அருளாளர்களின் வரலாறுகளும் இக்கருத்தையே உணர்த்துவன வாயுள்ளன.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை கண்ணில் நல்ல அகிதுறும் கழு மல வளநகர் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே (தேவாரம்).

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்.

One Comment

  • Anonymous

    febrary 14 kum 7.29 kum oru chinna vithiyasam in between gapla than 7.30 start aguthu…….ipadiku unmai kathalai atharikavum seiyum poi kathalai ethirkavum seiyum sangam——-thalapathi rocks

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: