Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) – ஒருவித மனநோய்

டெமென்ஷியா ப்ரேகாக்ஸ் (dementia Praecox) என்று ஒரு காலத்தில் அழைக் கப்பட்ட இந்நோய்க்கான அறிகுறிகள் மற்றும் இந்நோ யின் நடத்தை எப்படி உண்டாகிறது என்று இன்று வரை கண் டு பிடிக்க முடியவில்லை.
பொதுவாக, நம் உடலில் உள்ள வேதிப் பொருட்களின் மாற்றங் களால்தான் பலருக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சி னைகள் வரும். சிலருக்கு நரம்பு சம்பந்த ப்பட்ட கோளாறுகள் இருந்தால், மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினை கள் வரும். இன்னும் சிலருக்குப் பரம்பரைத் தன்மையில்கூட மன நோய் கள் வருவதுண்டு. ஆனால் இந்நோய் இந்தக் குறைபாடுகளால் வரு வதாகத் தெரியவில்லை. ஆனால், இந் தக் குறைபாடுகள் எல்லாம் ஒன்று சேர் ந்து தாக்கும் போது, இப்படி நடந்துகொ ள்ள வாய்ப்புகள் அதிகம் என்று மட்டுமே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அண் மையில் நடந்த ஆராய்ச்சிகளின்படி, அன்பு இல்லாத, பாசத்தைக் கொட்டி சீராட்டி வளர்க்கப்படாத பெற்றோர்களி டம் வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு அதிகம் என்று கண்டு பிடித்திரு க்கிறார்கள்.
இந்நோய்க்கான வேறு அறிகுறிகள் :
பொதுவாக, காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமில்லாதபடி இவர் கள் நடந்துகொள்வார்கள்.
தங்களுக்குள் எதோ ஒரு குரல் கேட்பதாகவும், அதற்குக் கட்டுப்பட் டு நடப்பதாகவும் காட்டிக் கொள்வா ர்கள்.
ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் போது தெளிவான ஆதாரம் இல்லா மல் பேசுவார்கள். மடக்கிக் கேட்டா ல், பேச்சைத் துண்டித்துக்கொள்வா ர்கள். அடிக்கடி நீண்ட நேரம் மௌனத்தைக் கடைப்பிடிப்பார்கள்.
ஒரு சிலர் சகஜமாகப் பேசுவார்கள். தாங்கள் படும் துன்பத்தை முன் பின் அறிமுகமில்லாதவர்களிடம்கூட ஒளிவுமறைவு இன்றி சொல்லிக் கொ ண்டு இருப்பார்கள். ‘எல்லாரும் தன் னை ஒதுக்குகிறார்கள். புருஷன் தன் னை கொடுமைப்படுத்துகிறான்’ இப்ப டிப் பேச்சு இருக் கும்.
ரம்யா மாதிரி மருத்துவப் பரிசோதனை க்கு வந்த நடுத்தரப் பெண் ஒருத்தி, யா ரோ தன் காதில் ‘நீ செத்துப் போய்விடு. இந்த உலகத்தில் நீ இருக்காதே. செத் துப்போ’ என்று அடித்துப் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.
இந்நோயால் இன்னும் பாதிக்கப்பட்ட சிலர், பெரிய சந்தேகப் பேர் வழியாக இருப்பார்கள். கணவன் எந்த செயலைச் செய்தாலும் அதை சந்தேகப்பட்டுப் பேசி, சண்டையை வரவழைத்துக் கொண்டே இருப் பார்கள். ஆண்களைவிட பெண் கள்தான் இந்தப் பாதிப்புக்கு அதி கம் ஆட்படுகிறார்கள்.
அதீத கற்பனைப் பேச்சும், நடத்தை யும்கூட இந்நோய்க்கு அறிகுறியா கச் சொல்லப்படுகிறது. ‘மீனம்பா க்கம் விமான நிலையம் இருக் கும் இடம் எங்களது. என் கொள்ளுத் தாத்தாதான் அதை தானமாகக் கொடுத்தார்’ என்பார்கள். எதாவது கல்யாண மண்டபத்தில் தரை யைச் சுத்தம் செய்யும் வேலையில் இருப்பார்கள். ‘ஜனாதிபதி என் நெருங்கிய உறவினர்தான். ஏதோ என் போறாத காலம் இப்படி இருக்கேன்’ என்று புலம்புவார்கள்.
இவர்களின் பேச்சில் ஒழுங்கு இருக்கும். கட்டுக்கோப்பு இரு க்கும். சில சமயம் நம்பும்படி யாகவும் இருக்கும். ஆனால், அது மிகைப்படுத்தப்பட்ட கற் பனையாகவே இருக்கும். இதற்குக் காரணம் எதிராளி யைவிட, அவ ரே கற்பனையை உண்மை என்று நம்புவதன் விளை வுதான்.
இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் ஒரு மருமகள், தன் மாமி யார் எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் சிரித்துக்கொண்டே இரு ப்பார் என்று சொல்லப்படுகிறது. அப்பேர்ப் பட்டவர்களின் உணர்வுகள் சூழ்நி லைக்குத் தக்கபடி இருக்காது. எது நடந்தாலும் பேசாமல் இருப்பார் கள். நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பார்கள். உச்சகட்ட நடவடிக்கையின்போது, திடீரென்று மூக்கை நுழைப்பார் கள். அதுதான் பலசமயம் அவருக்கோ எதிராளிக் கோ பெரிய ஆபத்தை உண்டாக்கி விடும். உதாரணத்திற்கு சில மரு மகள்கள் தீக்குளிப் பதைச் சொல் கிறார்கள்.
மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகள் அதிக அளவு ஒருவரிடத் தில் இருந்தால் அவரை டெமென்ஷியா ப்ரே காக்ஸ் என்கிற மன நோயால் பாதிக்கப் பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் என் கிறார்கள். இது ஒருவகையில் மனச் சிதைவு நோயை ஒட்டியதுதான். என் றாலும் அதற்குண்டான அறிகுறிகளை வைத்து இதுவும் இந் நோய்தான் என் ற முடிவுக்கு வரமுடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் குணப்படுத்தி விட முடியும் என் கிறார்கள். மனதளவில் ஆரோக்கிய மாற்றங்கள், உடல ளவில் நல்ல உடற் பயிற்சி, அன்பான சுற்றுச்சூழல் இருந்தாலே இதை எளிதில் நிவர்த்தி செய்யமுடியும் என்கிறார் கள்.
எளிதான வழிகள்:
1. வாக்கிங், ஜிம் : வாக்கிங் கட்டாயம் போக வே ண்டும். குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் தொடர் வாக்கிங் அவசியம். வேகமாக நடக்க வேண்டுமே தவிர, ஓடக்கூடாது. இது முக்கிய ம். நடைப் பயிற்சிதான் உடலையும், மனதையும் ஒருமுகப் படுத்துவதாக அமை யும். ஜிம்முக்குப் போவது ரொம்ப நல்லது.
2. நல்ல மூடுக்கு வர முயற்சித்தல் : சம்பந்தப் பட்டவரை நல்ல சந்தோஷமான மூடில் இருக்கு ம்படி செய்யவேண்டும். குடும்பத்தாரின் கனிவா ன பேச்சு, நண்பர்களின் வாழ்த்துக்கள், உறவி னர்களின் பாராட்டுக்கள் அவர் நல்ல மூடுக்கு வர உதவக்கூடிய உத் திகள்.
3. ஒமேகா_3 : இம்மனநிலையில் இருப்பவர்கள் ஒமேகா _ 3 கொழு ப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக்கொண்டால், அதில் உள்ள அமிலம் மூளையில் உள்ள வேதிப்பொருட்களுடன் கல ந்து நல்ல மூட் உருவாக உதவும் என்கிறார்கள். இதற்காக நீங்கள் உங் கள் மருத்துவரை ஒருமுறை கலந்தாலோசிக்க வேண்டும்.
4. மௌனமாக இருக்கவிடக் கூடாது : இத் தகைய மனநிலை பாதிப்பில் இருப்பவர் கள் அடிக்கடி நீண்ட நேரம் மௌனமாக இருப்பார் கள். உடன் இருப்பவர்கள்தான், அவர்களின் மௌனத்தைக் கலைக்க ஏதா வது செய்யவேண்டும். அவருக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், பிடித்த நடிகர், நடிகை, அரசியல் தலைவர்கள் பற்றி அவர்களுடன் விவாதிக்கலாம். அவர்களுக்குச் சாதக மாகப் பேசுவது அவசியம்.
5. தனியறையில் தூங்கவிடக் கூடாது : இப்படிப்பட்டவர்களை தனி யறையில் தூங்கவிடக் கூடாது. நம் அருகில் அம்மா வோ, தோழி யோ இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களை உறக்கத்தில் மற்ற சிந்தனைக்கு அழைத்துச் செல்லாது என்கிறார்கள். தூக்கத்தில் எழுந்து நடந்தால், அவர் எங் கே போகிறார் என்றுதான் பார்ப்போமே என்று அவரைப் பின் தொட ர்வது போன்ற விபரீத விளையாட்டுக்களில் ஒருபோதும் இறங்கி விடாதீர்கள்.
6. யோகா, தியானம்: மனதில்மாற்று எண் ணங்கள் உருவாகாமல் இருக்க முறை யான யோகாவும், தியானமும் இவர்களு க்கு உதவும்.
7. பொழுதுபோக்கு: புதிதாக ஏதாவது பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடலா ம். சுற்றுலா. வயலின், வீணை வாசிக்கக் கற்றுக் கொள் ளுதல், இப்படி பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தால் மூளைக் கும் வேலை கொடுத்ததாகும். மனதிற்கு ம் உற்சாகமாக இருக்கும். வேறு சிந்த னைகளை உருவாகவிடாமல் இவை தடுக்கும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: