Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அணா”வுக்கு விடைகொடுத்து, “பைசா”வுக்கு வரவேற்புகொடுத்த‍ கதை

இந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா’ என்ற நாணயம் புழக்கத்தில் இரு ந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா’, `அரையணா’, `அணா’, `2 அணா’ `4 அணா’, `8 அணா’ என்று சில்லரை நாணயங் கள் இருந்தன. இந்த அணா நாண யத்தை மாற்றி புதிய பைசா நாண ய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்தது.
 
1.4.1957 முதல் புதிய பைசா நாணயம் அமுலுக்கு வரும் என்று அறி வித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத் தியது. “இந்த நாணயம் எப்படி இருக் குமோ? பழைய நாணயத்தை எப்படி மாற்றுவது? இதன் விளைவாக விலைவாசி உயருமா?” என்பது போ ன்ற அச்சம் நிலவியது.
 
ஆனால் நாளடைவில் அது சரியாகி விட்டது.   16 அணா என்ற கணக்கை மாற்றி, ஒரு ரூபாய்க்கு 100 காசு என் ற புதிய கணக்கு கொண்டு வரப்பட்ட து. ஒரு அணா என்பது 6 காசு ஆனது. கணக்கு போடுவதை சுலபமாக்குவத ற்காகவே இந்த மாற்றம் (தசாம்ச நாணய முறை) கொண்டு வரப் படுவதாக அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.  
 
முதல் கட்டமாக ஒரு பைசா, 2 பைசா, 5 பைசா, 10 பைசா என்ற 4 புதிய காசுகள் அறிமுகப்படுத்தப் பட்டன. அவை வருமாறு:-
 
1. பழைய காலணாவை கொஞ்சம் சிறிய உருவத்தில் அச்சிடப் பட்டு இருந்தது ஒரு பைசா நாணயம்.
 
2. ஒரு அணாவைப் போல வளை வு வளைவாக சிறிய உருவத்தில் வெளி வந்தது 2 பைசா நாணயம்.
 
3. அரை அணா, 2 அணா நாணயங்களைப்போல சதுர வடிவில் 5 பைசா இருந்தது. 4. அணாவைப் போலவே பெரிய உருவத்தில் 10 பைசா இருந்தது. (இதற்கு பின்னர் 20 பைசா, 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.)
 
இந்த புதிய பைசா நாணய முறை, ஏப்ரல் 1ந் தேதி முதல் அமுலுக்கு வந்ததால், பாங் கி கணக்குகளை மாற்றவேண்டியது இருந்தது. இதற்காக பாங்கிக ளுக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்களுக் கும் 2 நாள் விடுமுறை கொடுக்கப் பட்டது. பாங்கிகளுக்கு விடுமு றை விடப்பட்டதால், ஏப்ரல் 4ந் தேதி யில் இருந்து தான் பைசா நாணயம் பொது மக்கள் கையில் கிடைத்தது.
 
புதிய நாணயத்தை வாங்கிப்பார்ப் பதில் அனைவரும் மிகுந்தஆர்வம் காட்டினார்கள். பைசா நாணயம் அமுலுக்கு வந்தாலும் பழைய அணா நாணயமும் 3 ஆண்டுகளு க்கு செல்லுபடியாகும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். புதிய நாணயம் பற்றி பிரதமர் நேரு வெளியிட்ட அறிக்கை வருமாறு:-  
 
“ஏப்ரல் 1ந்தேதி ஒரு புரட்சி ஆரம்பமாக இருக்கிறது. அதுதான் புதிய நாணய திட்டம். மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பழக்க வழக்கங்களையும் பாதிக்கிற இந்த மாறுதல் ஏன்? என்று கேட்க லாம். இப்போதுள்ள நாணய முறை சிக்கல் நிறைந்தது. கணக்கு போடு வதற்கு அதிக காலதாமதம் ஏற்படு கிறது. ஆகவே சிக்கல் இல்லாத புதி ய நாணய முறையை கொண்டு வரு கிறோம்.
 
இந்த மாறுதல்கள் ஆரம்பத்தில் சில சங்கடங்களை ஏற்படுத்த லாம். இந்த சங்கடங்களை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோ ம். இன்னும் 3 வருடங்களுக்கு பழை ய நாணயங்களும் சட்டப்படி செல்லுபடியாகும். புதிய மாறுதலால் யாருக்கும் எந்த வித கஷ்டமோ, நஷ்டமோ ஏற்படாது. நன்மையே ஏற்படும். எனவே இந்த புதிய நாணய முறையை நாட்டு மக்களுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்.”
 
இவ்வாறு பிரதமர் நேரு வாக்குறுதி அளித்தார்.
 
இந்த புதிய நாணய முறைக்கு ராஜாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.   ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, 10 பைசா, 20 பை சா போன்ற சில்லறை நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டன. 25 பைசா கிடைப்பது கூட அரிதாக இருக்கிறது. பஸ், ரெயில் கட்டணங்கள் மற்றும் பொருட்களின் விலைகள் 50 காசு அல்லது ரூபாய் கணக் கில் நிர்ணயம் செய்யப்படுவதால் சில்லறை நாணயங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: