ஆனால் பிரபு தேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் திருமணத்துக்கு அவர் தாமதம் செய்ததாகவும் தகவல் வெளியானது. அத்துடன் முதல் மனைவி குழந்தைகளை அடிக்கடி தன்னுடன் தங்க வைத்தது நயன் தாரா வுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதனால் இருவருக் கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
இதனால் காதலை முறித்து விட்டு மீண்டும் நயன்தாரா நடிக்க
வந்துள்ளார். தெலுங்கு படத்தில் நாகார் ஜூனா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி யுள்ளார். இது போல் தமிழ்ப்படமொன் றில் அஜீத் ஜோடியாக நடிக்கவும் பேச்சு வார்த்தை நடக்கிறது.
முன்பை போல் முழு வீச்சில் சினிமாவி ல் ஈடுபட உள்ளார். இதற்கிடையில் நயன் தாராவையும் சிம்புவையும் மீண்டும் ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி இய க்குனர் ஒருவர் முடிவு செய்துள்ளா ராம். இதற்காக நயன்தாராவை அணுகி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருவரும் சேர்ந்து நடித்தால் படத்துக்கு பெரிய விளம்பரம் கிடை க்கும் என்றும் இதனால் படத்தை கோடிக் கணக்கில் வியாபாரம் செய்யலாம் என்றும் அவர் கணக்கு போடுகி றாராம்.
இந்த படத்தை தயாரிக்க பெரிய பட நிறுவனம் ஒன்று முன் வந்துள் ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா சம்மதித்தால் உடனடியாக படப்
பிடிப்பை துவங்கும் திட்டத் தில் உள்ளனர்.
நயன்தாராவும், சிம்புவும் ஏற்கனவே வல்லவன் படத் தில் ஜோடியாக நடித்து காத ல் வயப்பட்டனர். பிறகு தக ராறு ஏற்பட்டு பிரிந் தார்கள். காதலர் தினத்தை யொட்டி நயன்தாரா-பிரபுதேவாவை ஒன்று சேர்க்க மத்தியஸ்தர்கள் சிலர் சமரச முயற்சி மேற்கொண் டனர். ஆனால் பிரபுதேவாவுடன் பேச நயன்தாரா மறுத்து விட் டாராம்.
news in malaimalar