Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட
16 மெகா பிக்ஸல் கேமராவுடன் எச்டிசி ஸ்மார்ட்போன்!
by V2V Admin
குறைந்த காலத்தில் அதி க வாடிக்கையாளர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற நிறுவனம் எச்டிசி என்று பெருமையு டன் சொல்லலாம். டைட் டன்-II என்ற ஸ்மார்ட் போனை எச்டிசி நிறுவன ம் உருவாக்கி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிற ந்த பல வசதிகளுடன் வெளிவரும். இது விண்டோஸ்-7 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது.
இந்த ஓஎஸ் சிறப்பாக இயங்க இதில் பவர்ஃபுல் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. 4.7 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும். இந்த கம்பீரமான திரையினால் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தினை பெற முடியும். எதையும் தெளிவாக காணவே இந்த அகன்ற திரை வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பேசப்பட வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இதன் கேமரா. இதில் 16 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள் ளது. ஆட்டோ ஃபோக்கஸ், டிஜிட்டல் சூம், ஜியோ டேகிங், ஐஎஸ்ஓ கன்ட்ரோல் போன்ற தொழில் நுட்பங்களையும் இந்த ஸ்மார்ட்போ னில் பெற முடியும்.
இது மட்டும் அல்லாது 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் முகப்பு கேமராவும் இதில் உள்ளது. ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட்செய்யும். இத்தனை உயர்ந்த ரக வசதிகள் இருக்கையில் இதன் பேட்டரியும் நிச்சயம் சிறந்த வசதியினை தான் வழங்கும். இது 1730 எம்ஏஎச் பேட்டரியை பெற்றது. அதனால் டாக் டைம், ஸ்டான்-பை டைம் போன்ற வசதிகள் பற்றி கோட்கவே வேண்டாம். பேசுவதற்கு அதிக நேரத்தினை வழங்கும்.
டைட்டன்-2 ஸ்மார்ட்போன் உயர்ந்த தொழில் நுட்பங்களின் மூலம் சிறப்பாக செயல்படும் என்று தாராளமாக கூறலாம். தொழில் நுட்பங்கள் எப்படி முக்கியமானதோ அது போல விலையும் முக்கிய இடத்தை பெறுகி றது. இதன் விலையை அறிந்து கொள்ள இன்னும் சில நேரம் காத் திருக்க வேண்டி இருக்கிறது.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். -.- விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
nice.. waiting for this..