Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க! (இந்த 25ஐ கடைபிடிச்சா, வயது 75 ஆனாலும் பயமில்ல‍)

திடீர் மரணங்களுக்கு மிக முக்கி யக் காரணமாக இருப்பது மாரடை ப்பு தான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்ப டும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம் மை நாமே மீட்டெடுக்கவும் பிரான் டியர் லைஃப்லைன் மருத்துவம னையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழி கள் இதோ…  

மாரடைப்புக்கான காரணம்

உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய் வது நம் இதயம். ‘லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்கு வதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப் படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடு த்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது தான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதா லோ அல்லது ரத்தம் உறைந்து போவதாலோ அடைப்பு ஏற்பட லாம். இதனால், இதயத் துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதை த்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!

1. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப் பு ஏற்பட்டிருத்தல்…. என கொரனரி (இ தய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங் கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணு கி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த த்தில் சர்க்கரை – கொழுப்பு அளவினை த் தொடர்ந்து பரிசோதனை செய்து, தே வைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற் றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமு றையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோ தனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன் கூட்டியே அறிந்து தடு க்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சரா சரி ரத்த அழுத்தம் என்ப து (ஐடியல் பிளட் பிரஷ ர்) 130/80 எம்.எம். எச். ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

3.கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடை வெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வே ண்டும்.

4. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும் பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இரு க்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

5. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மார டைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந் தாலும் கொழு ப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப் போது மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம்

6.மாரடைப்புக்கான அபாயத்தை க் குறைக்க, இதயத்துக்கு ஆரோ க்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகிய வற்றின் அளவு குறைவாக இரு க்கும் உணவுப் பொருட்களே இத யத்துக்கு நல்லது. அதிக அளவி ல் பழங்கள், பச்சைக்காய்கறிகள் , தானியங்கள், கொழுப்பு குறை வான பால் பொருட்கள் போன்ற வை மாரடைப்பு வராமல் தடுக் கும்.

7. குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறை ந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், ‘ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு – மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

8. தோல் நீக்கிய கோழி இறை ச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக் கியமானவை. ஆனா லும், அதிக அளவில் எண்ணெ ய்விட்டுப் பொரித்துச் சாப்பிடு வது தவறு. முட்டையின் வெள் ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப் பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறை க்கும்.

9.பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.

10.அதிக அளவில் சர்க்கரை உ ள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உண வுகள்ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனா ல், அதிகப்படியாக உடல் எடையு ம் கூடும்.

11.‘ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண் ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந் த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளி லும் இந்த ஒமேகா – 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.

12.சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழு ப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொ ழுப்பு அளவை அதிக ரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.  

13. இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண் ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ள து. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக் கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழு ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14.அதிக அளவில் மது அருந்து வது உடல்பருமனுக்கு வழிவகுக் கிறது. மேலும், சர்க்கரை நோய் க்கான வாய்ப்பையும் அதிகரிக் கிறது. எனவே, மது அருந்துவ தைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

15. ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டு ம். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாய த்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோ க்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழு த்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுக ளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

16. தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இற ங்குவது, நடப்பதும்கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண் டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல் லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத் தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபா யமும் குறையும். ஆரோக்கியமா ன உடல் எடையைப் பராமரித்தல்

17. உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.

18இடுப்பு அளவைக் கணக்கிடுவ தால், வயிற்றுப்பகுதியில் எவ்வ ளவு கொழுப்பு உள்ளது என்ப தைத் தெரிந்துகொள்ள முடிகி றது. ஆண்களுக்கு சராசரி இடு ப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.  

19பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும் பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பா கத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அள வை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப் பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பை யும் அதிகரிக்கும்.

20குறைந்த அளவிலான உடல் எடை க் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறு ம் 10 சதவீதம் குறையுங்கள், அது உங் கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பது டன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய் க்கான வாய்ப்பை யும் குறைக்கிறது.

புகை பிடிக்காதீர்கள்

21. புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவ தை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்ப து புகையிலைப் பழக்கம். சிக ரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணி க்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட் டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற் றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவை யான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலு த்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரி யப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந் துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகை த்துவிட்ட காற்றை சுவாசிப்பவ ருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப் பதால், புகைப் பழக்கமே இல்லாத உங்கள் நண் பர்கள், குடும்பத்தினரும் கூட பா திப்புக்கு ஆளாகின் றனர்.  

மருந்து-மாத்திரைகள்

22உங்களுக்கு உயர் ரத்த அழுத் தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந் தால், டாக்டர்கள் பரிந்துரைத் திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளு ங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டு பைபாஸ் அறு வைச் சிகிச்சை அல்லது ஆஞ்சி யோபிளாஸ்டி செய்ய வேண் டும் என்று டாக்டர் பரிந்து ரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங் கள். பயம் காரணமாகத் தள் ளிப் போடாதீர்கள்.

23. மாரடைப்புக்கான அறி குறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங் கள். மருத்துவமனைக்குச் செல்லும்முன் ஆஸ்பிரின் மாத்திரையை ப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.

24தொடர் மருத்துவப் பரிசோத னை, ஆரோக்கியமான வாழ்க் கைச் சூழ்நிலை, மாரடைப்புக் கான காரணிகளைக் கட்டுப்படுத் துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகு க்கும்.

பரிசோதனைகள்

25எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்ப தைக் காட்டும். இதயம் எந்த ளவு பாதிக்கப்பட்டு உள்ளது என் பதை முன்கூட்டியே தெரி ந்து கொண்டு உரிய சிகிச்சை அளி த்தால், மாரடைப்பு வருவதை த் தடுக்க முடியும்.

உடலில் எங்கு கொழுப்பு அதி கமாக உள்ளது என்பதைக் க ண்டறிவது இப்போது எளிமை . சாதாரண சி.டி. ஸ்கேன் எடு த்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்ப தைத் துல்லியமாகக் கண்டறிந்து விட முடியும். இதயத் தசைகளுக்குச் செல் லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழு ப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும் . எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொ ழுப் பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல் லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவு க்குக் கொழு ப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோ தனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: