மனித நேயம் தழைத்தோங்கும் இடமெல்லாம்
பூமகளும் புன்னகை பூத்தே வாழ்ந்திடுவாள்.
தனித்திருந்து சாதிக்க நீ பிறந்தாய்,
பூமி நலம்பெறவே மாறிடு நீ நெருப்பாய்
தனி உடைமை உடைத்தெறிந்திடவே
கனிவுடன் வேண்டுகிறேன் வாரீர்!
பொது உடைமை பரப்பிடவே
இது தருணம் அன்றோ!
பணிந்தே செல்வோம்.
துணிந்தே வெல்வோம்
– விதை2விருட்சம், ராசகவி, ரா.சத்தியமூர்த்தி