Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்டிப்புகள் எல்லாம் கசப் பு மருந்துதான்!!

குழந்தை வளர்ப்பு’ என்கிற பொறுப்பு பற்றி சமீபத்தில் அதிகம் பேச வைத்த செய்தி அது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவைத் சேர்ந்த அனுரூப்-சகாரிகா பட்டாச்சா ரியா தம்பதி, தங்களின் 3 வயது மகன் அவிக்யான், ஒரு வயது மகள் ஐஸ்வர்யா வுடன் வசிப்பது நார்வே நாட்டில். அவர்களின் குழந் தைகளை திடீரென ஒரு நாள் குழந்தைகள் நல காப்பகத்துக்கு எடு த்துச் சென்று விட்டது நார்வே அரசு! 
ஏன்..?!

‘குழந்தைக்கு கையால் உணவு ஊட்டுகிறீர்கள், மகனை உங்க ளுடன் படுக்க வைத்துக் கொள் கிறீர்கள், மிகவும் அந்யோன் யமாக (எமோ ஷனல் பாண்ட்) இருக்கிறீர்கள்… மொத்தத்தில் குழந்தை வளர்ப் பில் நீங்கள் சரியாக இல்லை என்பதைத் தொடர் கண்காணிப்பின் மூல ம் அறிந்தோம். எனவே, இக்குழ ந்தைகளை அரசு தன் பொறுப் பில் எடுத்துக்கொள்கிறது. 18 வயது வரை குழந்தைகள் நல காப்பக த்தில் அவர்கள் வளர்வார்கள். வருடத்தில் இருமுறை மட்டும் பெற்றோர் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்’

இப்படி நார்வே அரசு அந்தத் தம்பதி க்கு அதிர்ச்சி கொடுத்தது, எட்டு மாத ங்களுக்கு முன்பு.

இத்தனை மாதங்களாக நீதிமன்றங்க ளுக்கு அலைந்து கொண்டிருந்த அனுரூப்-சகாரிகா தம்பதிக்கு இந்திய அரசும் கைகொடுக்க… ‘குழந் தைகளை இந்தியாவில் இருக்கும் அனுரூப்பின் சகோதரரிடம் ஒப்படைக்கிறோம்’ என்று நார்வே அரசு இறங்கிவர, குழந்தைக ளை அழைத்துக் கொண்டு கொல்கத்தா திரும்பியிருக்கிறார் அனு ரூப்பின் சகோதரர்.

இச்செய்தியை, ‘அரசின் அராஜகம்’ என்று ஒற்றை வரியில் கடக்காமல் இறங்கி விசா ரித்தபோது, நார்வே அரசாங்கம் தங்களின் நாட்டின் குழந்தைகள் நலனில் வைத்திருக் கும் அக்கறையும், அவர்களுக்காக இயக் கும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளும் வியக்க வைத்தன. அதுபற்றி பகிர்ந்து கொள்கிறார் கள் இவர்கள்.

நார்வேயில் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு அடிக் கடி சென்று வரும் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் விவசாயி பாவெல்… ”குறைவான மக்கள்தொகை கொண்ட நாடு, நார் வே. அதனால் தன் ஒவ்வொரு குடி மகனின் நலனிலும் நேரடியாக அக் கறை செலுத்தும் அந்நாட்டு அரசு. அதாவது, நம் குடும்பங்களில் நல் லது, கெட்டதை எடுத்துச் சொல்லும் தாத்தா போல், நார்வே குடும்பங்க ளின் செயல்பாடுகளில் தலையிடும் அரசு. தன் பேரனை தேவையில்லா மல் மருமகள் கண்டித்தாலோ, அடி த்தாலோ அவரைக் கண்டித்து பேர னைத் தன் பக்கம் இழுத்துக் கொள்வாரே தாத்தா… அப்படி ஒரு செயல்தான் இந்தக் குழந்தைகளை அரசு, குழந்தைகள் நல காப்ப கத்துக்கு அழைத்துச் சென்றிருப் பதும். குழந்தைகளுக்கு கை

Norway

களால் உணவு ஊட்டினால் கிருமித் தொற்று ஏற்படும். வளர்ந்த குழந்தைகளை தனியாக படுக்க வைக்கப் பழக்காவிட்டால் எந்த விஷ யத்தையும் தானே சந்திக்கும் அவர்களின் தன்னம்பிக்கை குறையும். இப்படி அரசு அப் பெற்றோரின் மேல் சுமத்தி யுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பின் இருக்கும் காரணங்களை யும் கவனிக்க வேண்டும்.

அரசின் இந்த அதீத நடவடிக் கைக்கு காரணம், குழந்தைகளை தங் கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக அந்நாட்டு அரசு கொண்டாடுவதுதான். குழந்தை பிறந்தது முதல் பள்ளி, கல்லூரி என 18 வயது வரை உணவு, கல்வி , மருத்துவம், உச்சபட்சமாக வீடு உட் பட அந்தக் குழந்தைக்கான அத்தனை செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது தாயு ள்ளப் பொறுப்போடு. இத்தகைய பொறுப்பு தான், அரசாங் கத்தை பெற்றோருக்கு எதிரான கண்டி ப்பு காட்டச் செய்கிறது” என்கிறார் பாவெல்.

டென்மார்கில் 25 வருடங்களாக வாழ் ந்து வரும் பவானி இதைப் பற்றி பேசும் போது, ”நார்வே என்றில்லை… ஐரோப்பாவிலிருக்கும் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட வேறு பல நாடுகளி லும் இதே நடைமுறைதான். நான் இங்கு ஒரு பள்ளி யில் உதவியாளராக வேலை செய்கிறேன். அரசு வகுத்திருக்கும் ‘பேரன்டிங்’ வளர்ப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு, எப்படிக் குழந்தைக ளை வளர் ப்பது என்பதை கற்றுத்தர இங்கு இன்ஸ்டிடியூட்களே உள்ளன. இங்குள்ள பெற்றோர்கள் அனைவரையும் கண்காணித் துக் கொண்டே இருக்கும் அரசு. குழந்தை வளர்ப்பில் அவர்கள் தவறு செய்தால், கண்டிக்கும். அப்படியும் அவர்கள் திருத்திக் கொ ள்ளவில்லை என்றால், அதிரடியாக குழந்தைகளை காப்பகத்துக்கு எடுத்துச் செல்லும்.

காப்பகம் என்றதுமே, இந்தியாவில் இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி எனப்படும் மைனர் சிறைகளை நினைத்துக் கொண்டுவிடாதீர்கள். வீட்டிலிருக்கும் அத்தனை வசதிகளும் கொண்ட தாகத்தான் இருக்கும் இங்குள்ள காப்பகங்கள். குழந்தைகளை சரியாக வளர்க்க நேர்மையாக, அன்பாகப் பணிபுரியும் ‘கேர் டேக்கர்’கள் இருப் பார்கள். சீரான இடைவெளியில் உடம்பின் அத்த னை பாகங்களையும் பரிசோதிக்கும் கம்ப்ளீட் மெடி க்கல் டெஸ்ட், தடுப்பூசிகள் குழந்தைகளுக் குக் கொடுக்கப்படும். கல்வி, விளையாட்டு என்று அத்தனை விஷ யங்களிலும் அணு அணுவாக அவர்களைப் பராமரிக்கும். எனவே, வீட்டைவிட சிறப்பான ஓர் சூழலில்தான் குழந்தை காப்பகத்தில் வளரும் – கிட்டத்தட்ட ரெஷிடென்ஷியல் ஸ்கூல் போல” என்று தெளிவாக விளக்கம் தருகிறார்.

அரவிந்தன்- சுபத்தினி தம்பதி நார் வே சென்று 23 ஆண்டுகள் ஆகின் றன. ”நாங்கள் இங்கு வந்த புதிதில், இந்நாட்டின் விதிமுறைகளைக் கடைபிடிப்பதில் மிகவும் சிரமப்ப ட்டோம். ஆனால், இந்த நாட்டைப் போல் ஓர் சிறந்த அரசு நிர்வாகத் தை எங்கேயும் பார்த்ததில்லை என்பது, இந்த 23 ஆண்டுகளில் நாங் கள் உணர்ந் திருக்கும் உண்மை. ஏழை, பணக்காரன் பாகுபாடு இருக் கக் கூடாது. அதற்காகத்தான் எல்லாக் குழந்தைகளுமே சமத்து வமாக வளர, இத்தனை வசதிகளைச் செய்து கொடுக்கிறது அரசு. இதனால் தான்… நம் நாட்டைப்போல் டாக்டரின் பிள்ளை மெடிக்கல், மேற்படிப்பு என்று படிக்க, கூலித் தொ ழிலாளியின் பிள்ளை பள்ளிப் படிப் போடு முடித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவல நிலை இங்கு இல்லை.

குழந்தையில் இருந்தே ‘அனைவரும் சமம்’ என்கிற எண்ணம் அனைவருக்கும் வளர்ந்துவிடுகிறது. வீடு என்பது நமக்கெ ல்லாம் வாழ்வின் கனவு. அதையும் இங்கு அரசாங்கமே தருகிறது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்ன..? உணவு, உறைவிடம், மருத்து வம், கல்வி. இவை எல்லாம் இலவசமாக வழங்கும் அரசாங்கம், அதன் பலனை அறுவடை செய்ய சில சட்டங்களை வகுக்க வேண் டியதும் அவசியம்தானே! எனவே, இந்தக் கண்டிப்புகள் எல்லாம் கசப் பு மருந்துதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் சுபத்தினி.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

One Comment

  • Its a good start on this topic. Many Indian parents do not realize the long term impacts of their actions on their children’s future. They think they are doing it out of love, but they don’t realize that they are actually handicapping the child’s future. Please expand on this topic and analyze it psychologically.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: