Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்றைய‌ “டீன் ஏஜ்” பெண்களின் சொல்ல‍ முடியாத அவஸ்தைகள் – மருத்துவர் எஸ்.ராமேஷ்வரி நல்லுசாமி

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல் வேறு கட்டங்கள் இருந்தாலும், அவற் றில் முக்கி யமானது வளரிளம் பருவம். சென்ற தலை முறைகளில் வீட்டிலிருக் கும் இளம்பெண்களுக்கு அரவணைப்பாக வும் அக்கறை காட்டவும் பாட்டிமார்கள், அத்தைமார்கள் அவர்களைச் சுற்றி இருந் தார்கள். தாயிடமும் தோழியிடமும் பகிர முடியாத பல விஷயங்களைக்கூட, இவர் களிடம் பகிர் ந்து நிவர்த்தி பெறமுடிந் தது. பல இல்லற அம்சங்களைக்கூட ஜாடைமாடையாக வோ நேரடியாகவோ அதன் அவசியத்தைப்பொறுத்து, வளரிளம் வயதினருக்கு தந்து வந்தார் கள் மூத்த பெண்கள். ஆனால், இன்றைய ‘நியூக்ளியர்’ குடும்பச் சூழலில் டீன் ஏஜ் பெண்களின் சொல்ல‍ முடியாத அவஸ்தைகள் சொல்லிமாளாது.

இதைப் பற்றிப் பேசும் திருச்சியைச் சேர்ந்த சீனியர் மருத்துவர் எஸ்.ராமேஷ்வரி நல்லுசாமி, ”என்னி டம் வரும் பல டீன் ஏஜ் பெண் களின் தாய்மார்களே பெண்களின் அந்தரங்கக் கூறுகளில் போதிய தெளிவின்றி விழி த்துத் தடுமாறும் போது, அவர்களின் வளர்ப்பில் அந்த டீன் ஏஜ் பெண்களின் பாடு பரிதாப கரமானது இல்லையா?” என்று ஏகத்துக்கும் வருத்தம் காட்டிய தோடு, இந்தச்சிக்கல் பற்றி விரிவாக பாடமே நடத்தி விட்டார்.

வளரிளம் மகளிர் சிறப்பு மருத்துவராக 40 ஆண்டுகளுக்கும் மேல் சேவையாற் றிக் கொண்டிருக்கும் ராமேஸ்வரி, இங்கே நடத்தும் பாடங்கள்… டீன் ஏஜ் பெண்களுக்கானவை மட்டு மல்ல… அவர்களின் நல் வளர்ப்பினை தர விழையும் தாய்மார் களுக்கும் உரியது.

பூப்படைவு பூகம்பம் !

”முன்பெல்லாம் பூப்படைவுக்கா ன வயது 14 – 15 ஆக இருந்தது. மாறிப்போன உணவூட்டத்தால், தற்போது அந்த வயது 11-13 என் று குறைந்திருக்கிறது. பூப்படை வை ஒட்டி இரண்டு பிரச்னை கள் வரலாம். ஒன்று முன் கூட் டிய பூப்படைவு (precocious puberty) மற்றொன்று தாமதமா ன பூப்படைவு (Delayed puberty). 8 வயது மற்றும் அதற் கு முன்பாகவே நிகழ்ந்துவிடும் பூப்படைவு மிகவும் அரிதான எண்ணிக்கையில் அமைகிறது. மூளையின் ஹைப்போதாலமஸ் குளறுபடியினாலோ… ஹார்மோன் சுரப்பின் தடுமாற்றத்தினா லோ நிகழும் வினை இது. மூளை பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், நரம்பியல் மருத்துவரின் மேல் சிகிச்சை அவசியப்படும். ஹார்மோன் பாதிப்பு எனில், அதற்கான காரணத்தைக் கண்டறிந்து மாத விலக்கையே சில வருடங்களுக்குத் தள்ளி வைக்க மருத்துவ த்தில் வழி இருக்கிறது.

16 வயதைக் கடந்தும் பூப்படைவு அடையாத தை… தாமதம் என்று சொல்லலாம். ஊட்டச் சத்துக் குறைவு, ரத்தச்சோகை, பிட்யூட்டரி சுரப்பு குறைவது போன்றவை காரணங்களாக அமைந்திருக்கும். இப் பிரச்னைக்கும், துவக்கத்திலேயே மருத்துவரை அணுகினால், எளிமையான மருந்துகள் மூலம் நிவாரணம் பெற முடியும்.

Dr. S. Rameswari Nallusamy

மாதவிலக்குப் பிரச்னைகள் !

பூப்படைவை அடுத்த, இரண்டு மற்றும் மூன்றாவது மாதத்தில் சில ருக்கு அதிகப்படியான ரத்தப் போக்கு நிகழலாம். சில சமயம் மருத்துவ மனையில் சேர்த்து ரத்தம் கொடுத்தாக வேண்டிய அளவுக்குக் கூட சீரியஸாகலாம். இந்தச் சூழ லை முன்னரே அனுமானித்து தயாராக இருந் தால்… துவக்கத்திலேயே விரைந்து செயல்பட ஏதுவாக இருக்கும். பூப் படைவுக்குப் பிந்தைய ஒவ்வொரு சுழற்சியையும் கவனமாக கணக்கில் எடுத்து வர வேண் டும். பூப்படைவை அடுத்து முதல் இரண்டு வருடங்க ளுக்கு கருமுட்டை இல்லா மலேயே கூட மாத விலக்கு நிகழலாம். இம்மாதிரியான வர்களு க்கு 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு ஏற் படும். இது, தானாகவே சரியாகி விடும் என்பதால் பயப்படத் தேவை யில்லை.

அதேசமயம், ஒழுங்கற்ற மாதவிடாய் அடையாளத்துடன் தோன்றும் சினைப்பை நீர்க்கட்டிகள் (PCOD- Polycystic Ovarian Disease), உடனடி யாக கவனித்தாக வேண்டிய ஒன்று. ஹார்மோன் சுரப்பில் சீரின்மை மற் றும் தொற்றுகளால் நிகழும் இந்த நீர்க்கட்டிகள் ஒழு ங்கற்ற மாத விலக்குடன்… குண்டாக இருப்பது, அதிகப்படியான உடல் ரோம வளர்ச்சி, பின்னங்கழுத்தில் அதிகப்படியான கொழுப்பு சேர்மானம் போன்றவற்றையும் ஏற்படுத்தலா ம். சரியாக கவனிக்காது விட் டால், ஆண்களுக்கான டெஸ்டோஸ் டீரான் ஹார்மோன் சுரப்பு அதிகரித் து, நீடித்த விளைவுகளை ஏற்படுத் தலாம்.

வலியுடன் கூடிய மாதவிலக்கு !

மாதவிலக்குக்கு முன்போ அல்லது பின்போ தொடர்ந்து 3 நாட் களுக்கு வலியிருந்தால் அதற்கு சினைப்பையில் தோன்றும் கட்டி களும் ஒரு காரணமாகக் கூடும். இந்த ரக வலியின் துவக்க காலத்திலேயே மருத்துவப் பரிந்துரையின் கீழ் ஒரு ஸ்கேன் மூலம் சினைப் பை கட்டிகள் ஐயத் தை போக்கிக்கொள்ள வேண் டும். வெகு சிலருக்கு மாத விலக்கை ஒட்டிய வலியா னது அதிகமாகவும், வாந்தி மற் றும் மயக்கமும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைச் சந்தித் தாக வேண்டும்.

மனசும் பத்திரம் !

உடல் ரீதியான கவலைகளைப் போலவே, மனோரீதியான பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாத விலக்கு க்கு முந்தைய தினங்களில் கோபம், மனஅழுத்தம், எரிச் சலான மனநிலை, உடல் ஊதிப் போன தான உணர்வு போன்றவை படுத்தலாம். ஆரம்பத்தில் இதற்கான கவுன்சலிங் அவசியம். புரிந்து கொண்டதும் மன நிலை எழுச்சிகளை வளரிளம் பெண்கள் இயல்பாக எதிர்கொள் வார்கள். தேர்வு நேரம் போன்ற கூடுதல் பதற்ற நாட்களில் கூடுதல் தொந்தரவாக உணர்பவர்களுக்கு விட்ட மின் மாத்திரைகள் மூலமாக விடிவு உண்டு.

வெள்ளைப்படுதல் வார்னிங் !

கருமுட்டை வெளிப்படுதலின் வழக்கமான சுழற்சியில் 12 – 15 நாட் களின் இடைவெளியில் வெள்ளைப்படுதல் ஏற்படுவது இயல் பானது. வாடையற்றும் சளி போன் றும் இந்த வெளிப்படுதல் இரு ந்தால் கவலை தேவையில்லை. ஆனால், வாடையுடன் மஞ்சளாக வோ, ரத்தம் தோய்ந்தோ அரிப்புடன் வெள்ளைப் படுதல் நிகழ்ந்தால்… மருத்துவ சிகிச்சை அவசியம் மேற் கொண்டாக வேண்டும். அலட்சியம் காட் டினால் அதிகபட்சமாக ஃபெலோப்பியன் குழாய் அடைப்பு ஏற்படவும் நேரிடலாம்.

மார்பக சந்தேகங்கள் !

இந்த வயதினரின் மார்பகத்தைப் பொறுத்த கவலை என்பது, ஒன்று வளர்ச்சி போதாது என்பதாக இருக்கும். அல்லது அதீத வளர்ச்சி குறித்ததாக இருக்கு ம். இரண்டுமே இந்த வயதில் கவலைப்படுவதற்கல்ல.அவை நாள் போக்கில் சரியாகலாம். அல்லது உடல்வாகு மற்றும் மரபு ரீதியான காரணங் களால் மார்பகத்தின் இயல்பே அப்படி யாக இருக்கலாம். மார்பகம் உள்ளிட்ட உடல் வனப்புக்கு ஊட்ட மான உணவும், அளவான உடற் பயிற்சியுமே இயற்கை வழிகள்.

தவறக்கூடாத தடுப்பூசிகள் !

‘ஹெப்படிடைடிஸ் ஏ’ மற்றும் ‘ஹெப்படிடைடிஸ் பி’ போன்றவை வளரிளம் பருவத்தில் போட வேண்டிய முக்கிய தடுப்பூசிக ள் . குழந்தை மருத்துவரிடம் ஏற்கெனவே போடாது இருப் பின்… சின்னம்மை தடுப்பூசி யைக் கட்டாயம் இந்த வயதில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுதவிர ‘ருபெல்லா’ என ப்படும் ஜெர்மன் தட்டம்மை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளவேண்டும். ஏனெனில் இந்தத் தட்டம்மை பாதிப்பு, பிற்பாடு கர்ப்பஸ்திரிகளுக்கு வந்தா ல்… குறை பாடுள்ள குழந்தை பிறக்கும் அபாயம் இருக்கிறது.

இந்த வயதில் போட்டாக வேண்டிய மற்றொரு முக்கி யமான தடுப்பூசி, கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்புக்கானது. பாலியல் செயல்பாடுகளுக் கு முன்பாக இந்த ஊசி போ ட்டுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிலர் திருமண த்துக்கு ஆறு மாதங்கள் முன்பாக வருவார் கள். அந்த சமயத்தில் போட்டுக் கொள்வது, அடுத்து வயிற்றில் வளரப் போகும் சிசு வை பாதிக்கும் என்பதால் அது உசித மல்ல. இந்தத் தடுப்பூசி போடுவதற்கான துவக்க வயது 13” என்று பாடங்களை முடித்தார் டாக்டர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply