Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையில் . . .

பனப்பாக்கம் அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த துரை சாமி (98) தையல் தொழிலாளி. இவரது மனைவி வரதம்மாள் (92). துரைசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக் கப்பட்டிருந்தார்.

நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். நேற்று காலை முதல் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் வந்து துரைசாமியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.    இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடந்தது.   பகல் 1 மணிக்கு துரைசாமியின் உடலைப் பார்த்து அவரது மனைவி வரதம்மாள், கதறினார்.   70 ஆண்டுகளுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த என்னை விட்டு பிரிந்து சென்று விட்டீர்களே என்று தனது மார்பில் அடித்து கொண்டு கணவனின் காலடியில் சரிந்தார். அவ ரை உறவினர்கள் எழுப்ப முயன்ற போது வரதம்மாள் இறந்தது தெரிய வந்தது.  துரைசாமி பிணத்தின் அருகிலேயே வரதம்மாள் பிணத்தை வைத்து பெரிய மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தினர்.

மாலை 5 மணிக்கு கணவன்-மனைவி இருவரையும் ஒரேபாடையி ல் ஊர்வலமாக எடுத்து சென்று சுடுகாட்டில் ஒரே இடத்தில் வைத் து தகனம் செய்தனர். அவர்கள் சிதைக்கு மகன் ஜெயராமன் தீ மூட்டினார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: