காமராஜரை கவர்ந்த கலைஞர் டி.கே. சண்முகம் – விழாவேந்தர் என்.கே.டி. முத்து
கலைஞர் டி.கே.சண்முகம் என்னை அவர் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து, அன்பு செலுத்தியவர் அவர் வசித்த லாயட்சு சாலை (அவ்வை சண்முகம் சாலை) இல்லம் மற்றும் அலுவலகத்தில் நுழைகிற போதெல் லாம் ஆலயப் பிரவேசம் செய்வது போன்று இருக்கும். 600 முறை அந்த சகோதரர்களை சந்தித்துப் பழகும் வாய்ப்பு பெற்றவன் நான்.
உள்ளே நுழையும்போதே நெற்றி நிறைய விபூதி அணிந்தபடி அமர்ந்தி ருக்கும் டி.கே. சண்முகம் அண்ணாச்சி அவர்களும் டி.கே. பகவதி அண்ணாச்சி அவர்களும் ஒரு சேர வாங்க முத்து சார் என்று அழை ப்பது இப்போதும் என்காதுகளில் ஒலிக்கிறது.
கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய “அந்தமான் காதலி” முதல், கொடி கட்டிப்பறந்த “ராஜ ராஜ சோழன்”, கமல் நடித்த “அப்பாவின் ஆசை” உட்பட அனைத்து நாடகங்களையும் பல முறை பார்த்து மகிழ்ந்து வியந்திருக்கிறேன்.
நாடகக் கலைஞரான சண்முகம். . தமிழினத் தலைவர் மா.பொ. சி. அவர்கள் தொடங்கிய தமிழரசு கழகத்தின் பொருளாளராக இருந் தபோது . . . சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இளங் கோ நூலகம் அமைத்து நிர்வகித்து தமிழரசு கழகத்தில் பங்கேற்றப் பெருமை எனக்கும் உண்டு.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக சென்னை தீவுத்திடலில் பெரிய விழா ஏற்பாடானபோது, வீர பாண்டிய கட்ட பொம்மனைப் பற்றிய நாடகமும் நடைபெற்றது. அது எப்படி தயாரா கியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அப் போதையை முதல்வர் காமராசருக்கு ஆவல். அவர் உடனே . . அதை சண்முகம் அண்ணாச்சி யைப் பார்க்க சொல்லுங்க• . . அவர் பார்த்து சொல்லட்டும் என்றாராம்.
கர்ம வீரரை கவர்ந்த கலைஞர் சண்முகம் அண் ணாச்சியைப் பற்றி நிறை சொல்லலாம். அவ ருடைய நூற்றாண்டு விழாவை உரத்த சிந்தனை சங்கம் என் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருப்பதை நான் செய்த பெரும்பேறாக நினைக்கிறேன்.
(((( உரத்த சிந்தனை நடத்திய, திரு டி.கே.எஸ் சண்முகம் அவர்களது நூற்றாண்டு விழாவை, சென்னை திருவல்லிக்கேணி விழாவேந்தர் என்.கே.டி முத்து அவர்களால், அந்த வரலாற்று நாயகரை பற்றிய சில நினைவலைகளை நாம் தெரிந்துகொண்டது பெருமைக்குரியதே!))))