Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புறநோயாளிகளுக்கும் மருத்துவக் காப்பீடு (இன்ஷுரன்ஸ்) உண்டா?

உடலில் எந்த நேரத்தில் எந்த பாகம் பழுதாகி, இயல்பு வாழ்க்கை முடங்கும் என்று உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அத்த கைய இக்கட்டான சூழலில் ஏற்ப டும் பொருளாதார பாதிப்பில் இரு ந்து தற்காத்துக் கொள்ள மருத்து வ காப்பீட்டு திட்டங்கள் உதவு கின்றன.

பொது மருத்துவ காப்பீட்டை வி ட, முக்கிய நோய்களுக்கான காப் பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பதி ல் பல்வேறு பயன்கள் உள்ளன. குறிப்பாக இதயம், மூளை உள்ளி ட்ட 12 வகையான முக்கிய நோய்களுக்கு, பிரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் உள்ளன.

இந்த எண்ணிக்கை, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இது போன்ற காப்பீட்டு திட்ட த்தை தேர்ந்தெடுத்தால், சிகிச்சையின் போதே காப் பீடு செய்யப்பட்ட தொகை முழுவதுமாக மருத்துவ மனைக்கு வழங்கப்படும். முன்னதாக பணம் செலுத்தி விட்டு, காப் பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற காத்தி ருக்க தேவையில்லை.

மேலும், காப்பீட்டு தொகை, இந்த வகையான செலவிற்குதான் பொருந்தும் என்ற கட்டுப்பாடு எதையும் நிறுவனங்கள் விதிப்பதில் லை. ஒரு சில நிறுவனங்கள், புற நோயாளியாக சிகிச்சை பெறும் செலவுடன், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கா ன செலவுகளையும் வழங்கக் கூடி ய மருத்துவ காப்பீட்டு திட்டங்க ளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பஜாஜ் அலையன்ஸ், அப்பல்லோ மூனிச் ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும், இத்த கைய சிறப்பம்சங்கள் கொண்ட காப்பீட்டு திட்டத்தை வழங்குகின் றன.

ஐ.சி.ஐ.சி.ஐ. லம்பார்டு நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டு திட்ட த்தில், 3 லட்ச ரூபாய் வரையிலான காப்பீடு செய்து கொள்ளும் வசதி உள்ளது. ஓராண்டில் புறநோயாளியாக மேற்கொள்ளும் சிகிச்சை செலவுக்கான வரம்பு, 8,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

இத்திட்டத்தில், ஏற்கனவே உள்ள நோய்களுக்கு, காப்பீட்டு வசதி வழங்குவதற்கான காத்திருப்பு கா லம், 2 ஆண்டுகள் மட்டுமே. இத் திட்டத்திற்கான ஓராண்டு பிரீ மியத் தொகை,15 ஆயிரம் ரூபாய்.

ஒட்டுமொத்த நோய்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், ஆண்டுதோறும் அதிக அளவில் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். நல்ல நிதிவளமும், ஆரோ க்கியமான பரம்பரையில் வந்தவர்களும், புறநோய் சிகிச்சையை உள்ளடக்கிய கூடிய சாதாரண மருத்துவ காப்பீட்டை தேர்வு செய்ய லாம். அதே சமயம், குறைந்த பிரீமியம் தொகை என்பதற்காக, காப்பீட்டு வரம்பை குறைத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண் டும்.

“பேமிலி புளோட்டர்’ திட்டம்

இதில், அதிக தொகையை பிரீமியமாக செலுத்த வேண்டியதில் லை. அதே சமயம், இத்திட்டத்தி ல், நிர்ணயிக்கப்பட்ட காப்பீட்டு த் தொகையை, குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் வசதி உள் ளது. ஒரே கல்லில் பல மாங்காய் என்பது போல், ஒரே திட்டத்தில் குடும்பத்தினர் அனைவரும் பய ன் பெறலாம்.

உதாரணமாக, மேக்ஸ் பூபா நிறு வனத்தின் “பேமிலி புளோட் டர்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், அதிகபட்சமாக ஒரு குடு ம்பத்தை சேர்ந்த 13 பேர் காப்பீட்டு வசதியை பெறலாம்.

காப்பீடு கோராமல், தொடர்ந்து பல ஆண்டுகள் பிரீமியம் மட்டும் செலுத்தி வந்தால், மறு ஆண்டு பிரிமியத்தில் தள்ளுபடி வழங்கப் படும். அல்லது போனசாக, காப்பீட்டு தொகை யின் வரம்பு உயர்த்த ப்படும்.

“இன்டெம்னிட்டி’ திட்டம்

மருத்துவ காப்பீட்டில், “இன்டெம்னிட்டி பாலிசி’ எனப்படும் உறுதி யளிக்கப்பட்ட காப் பீட்டு திட்டம் உள்ளது. ஒரு சில நிறுவன ங்கள் மட்டுமே முக்கிய நோய்களுக்கான பிரிவில் இத்திட்டத்தை செயல் படுத்தி வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ், எந்த தொகைக் கு காப்பீடு செய்திருந்தாலும், மருத்துவமனையில் செலவான தொகையை மட்டும் காப்பீட்டுதா ரர் செலுத்தினால் போதும். இதில், பிரிமியம் தொகை, வழக்க மான காப்பீட்டு திட்டத்தைவிட குறைவா கும்.

அதாவது, ஒரு காப்பீட்டு நிறுவனத் தில் “இன்டெம்னிட்டி பாலிசி’ திட் டத்திற்கான பிரிமியம் 550 ரூபாய் என்றால், அதே திட்டத்தில் வழக்க மான பயன்கள் பிரிவின் பிரிமியம் தொகை 622 ரூபாய் என்ற அளவில் இருக்கும்.

மேற்கண்ட திட்டங்களில் விருப்பமானவற்றை தேர்வு செய்வது டன், மருத்துவ காப்பீட்டு விண்ணப்ப படிவத்தை கூர்ந்து படித்து, உரிய விளக்கங்களை முகவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள் ள வேண்டும். இதனால், பின்னாளில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கலாம்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply