இதுபோன்ற கேள்விகள்தான் பெரும்பாலானோர் மனதில் இருக்கி ன்றன. மேலோட்டமாகப் பார்த்தா ல், இந்த கேள்விகள் எல்லாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கேட்கப்படு கிற கேள்விகள் மட்டுமே. இப்படி அல்லாமல், நமக்கு என்ன தேவை? அதற்கு நாம் எந்த மாதிரியான முத லீடு செய்யலாம் என்று யோசித்து செயல்பட்டால் எப்படி இருக்கும்? நம்மை நாமே தயார்செய்து கொள்வது எப்படி?
நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுக ளாக இருப்பார்கள். அவர்கள் கொண்டு வருகிற முதலீட்டுத் திட்டங்கள் பெரும்பாலான நேரங் களில் நம்மைவிட அவர்களுக்கு ச் சாதக மாகவே அமையும். ஏனெ னில் அவர்கள் ஏஜென்டுகள். நிதி ஆலோசர்கள் அல்லர்.
மூன்று கேள்வி!
முதலீட்டை ஆரம்பிப்பதற்கு முன் கீழே உள்ள மூன்று கேள்விக ளில் ஏதாவது ஒரு கேள்விக்காவது உங்களிடம் பதில் இருக்கிறதா என்று பாருங்கள். இருக்கிறது எனில் தாராளமாக முதலீட்டை தொ டருங்கள். இல்லை எனில், உங்கள் முதலீட்டு முடிவை இப்போ தைக்கு தள்ளிப் போடுங்கள்.
1. எதற்காக முதலீடு செய்கிறீர்கள்? இந்த முடிவால் வாழ்க்கையில் நீங்கள் அடைய நினைக்கும் விஷயங்களில் எது சாத்தியமாகும்? உங்களின் எந்த அத்தியாவசியத் தேவை பூர்த்தி ஆகும்?
2. உங்களின் முதலீடு மூலமாக எவ்வ ளவு ரிட்டர்ன் எதிர்பார்க்கி றீர்கள்? 10% முதல் 15% சதவிகிதமா அல்லது அது க்கும் மேலேயா?
3. உங்களின் முதலீட்டுக் காலம் எவ்வ ளவு? அல்லது எப்போது உங்களுக்கு இந்தத் தொகை தேவைப்படும்?
இந்த கேள்விகளுக்கான பதில் உங்களிடம் இருந்தால் பிரச்னையே இல்லை. இல்லை எனில், பதில் கண்டுபிடிக்க ஒரு சின்ன ஹோம் வொர்க் பண்ணலாமா?
முதலில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை, உங்க ளின் குறிக்கோள் பட்டிய லை (கோல் லிஸ்ட்) தயா ர் செய்து கொள்ளுங்கள். இந்தப் பட்டியல் எப்படி இருக்க வேண்டும்?
உதாரணத்துக்கு, மூன்று வருஷம் கழித்து ஒரு கார் வாங்க வேண்டும். என் நாற்பத்தைந்தாவது வயதில் பணி ஓய்வு பெற வேண் டும். 2016-ல் ஒரு ஃபிளாட் வாங்க வேண்டும். இப்படி தெளிவாக ஒரு குறிக்கோள் பட்டியல் போடுவது அவசியம்.
அடுத்து, ஒவ்வொரு குறிக்கோளையும் ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் வாங்க வேண்டிய கார் என்ன மாடல்? அதன் விலை இப்போது என்ன? நீங்கள் வாங்க வேண்டிய வருஷத்தில் என்ன விலை இருக்கும்? இதுபோல மதிப் பீடு பட்டியல் தயார் செய்ய வேண்டும். இதைத்தான் ஆங்கிலத்தில் ‘கோல்ஸ் இன் ரைட்டிங் ஆர் டைம்ஸ் வித் டெட்லைன்’ஸ்னு சொல்வோம்.
சுய பரிசோதனை!
அடுத்து, நீங்களே உங்களை ஒரு சின்ன சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..!
இங்கே கொடுத்திருக்கிற மூன்று சாய்ஸ்களில் எது உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்யுங்கள்.
1) 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒரு வருடம் கழித்து 1,080 ரூபாய் கண்டிப்பாக கிடைக்கும்.
2) 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒரு வருடம் கழித்து 1,200 ரூபாய் அல்லது 900 ரூபாய் மட்டுமே கிடை க்க வாய்ப்பு இருக்கும்.
3) 1,000 ரூபாய் முதலீடு செய்தால், ஒரு வருடம் கழித்து 1,400 ரூபாய் அல்லது 700 ரூபாய் மட்டுமே கிடை க்க வாய்ப்பு இருக்கும்.
இந்த மூன்றில் உங்கள் தேர்வு 1 என் றால், நீங்கள் ரிஸ்க் எடுக்கக் கூடாது. பாதுகாப்பான ஃபிக்ஸட் டெபாசிட், பி.பி.எஃப்., என்.எஸ்.சி. போன்ற முதலீடுகளில் மட்டு மே கவனம் அதிகமாக இருக்க வேண்டும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகளைத் தவி ர்க்கவும்.
உங்கள் தேர்வு 2 என்றால், நீங் கள் ரிஸ்க் எடுக்கலாம். இதன் மூலம் உங்கள் கவனம் மேலே சொன்ன முதலீட்டுப் பத்திரங்க ளோடு, ஈக் விட்டி மியூச்சுவல் ஃபண்ட், பேலன்ஸ்டு மியூச்சுவ ல் ஃபண்ட் மற்றும் பங்குச்சந் தை தொடர்பான முதலீடுகளி ன் மீது இருக்க வேண்டும்.
உங்கள் தேர்வு 3 என்றால், நீங் கள் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர் என்று அர்த்தம். நேரடியாக பங் குச் சந்தையில் இறங்கலாம். ஈக் விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற் றும் செக்டார் மியூச்சுவல் ஃபண்டு களில் கவனம் செலுத்த லாம்.
காலவரையறை!
உங்களுக்கான காலவரையறையை கட்டாயம் நிர்ணயித்துக் கொள்ளுங்க ள். எவ்வளவு நாட்கள் முதலீட்டுக் காலமாக இருக்கும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒரு வருடமாக இருக்கலாம் அல்லது 10 வருடங்களாக இருக்கலாம்.
ஒரு முதலீடு தகுந்த வருமானம் கொ டுப்பதற்கு, தக்க அளவு அவகாசம் தே வை. அதற்கு முன் நாம் வெளியே வர நினைத்தால் நாம் எதிர்பார்க்கும் வரு மானம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம். விதை விதைத்து விட்டு அடுத்த நாளே பூவோ, கனியோ எதிர் பார்ப்பது போல் ஆகிவிடும்.
ஒவ்வொரு முதலீடும் தகுந்த காலவரையறை இல்லாமல் வெளி யிடப்படுவதில்லை. இதைத் தெரிந்து கொண்டு, நம் காலவரைய றையோடு ஒத்துப்போகிறதா என்று சரி பார்த்து, பின்னர் தேர்ந்து எடுப்பது நல்லது.
இப்பொழுது, உங்கள் குறிக் கோள் பட்டியல், முதலீட்டுக் காலம் மற்றும் ரிஸ்க் எடுக்கு ம் தன்மை தயாராக உள்ளது. இதை வைத்துக் கொண்டு மார்க்கெட்டில் உள்ள நிதி திட்டங்களை அலசி ஆராய்ந் து பார்க்க வேண்டும். இது போன்ற தெளிவு எதுவும் இல் லாமல் எந்த ஒரு நிதி ஆலோ சகரிடமோ அல்லது ஏஜென்டிடமோ பேசுவது உங்களுக்கு பயனளி க்காது.
எமர்ஜென்ஸி கிட்டி!
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் முதலில் தயார் செய்து கொள்ள வேண்டியது ‘எமர்ஜென்ஸி கிட்டி’. இது இல்லாமல் உங் கள் தேவைகளைப் பட்டியலிடு வது கூட வீண்தான். திடீரென் று வரும் சவால்களுக்கு, செல வுகளுக்கு அடுத்தவர் கையை எதிர் பாராமல் நம்மை மட்டும் நம்பியிருக்க இந்தக் கையிரு ப்பு உதவும்.
எமர்ஜென்ஸி கிட்டி என்பது எவ்வளவு இருக்க வேண்டும்?
உங்கள் மாத குடும்பச் செலவுத் தொகையைப் போல் மூன்று முத ல் ஆறு மடங்கு வரை வாய்ப்பு வசதியைப் பொறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்கள் மாத குடும்பச் செலவு 20,000 ரூபாய் எனில், அதிக பட்சம் 1,20,000 ரூபாய் எமர் ஜென்ஸி கிட்டியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.
இதை கணவன்- மனைவி இருவரும் கையாளும் வகை யில் ஜாயி ன்ட் அக்கவுன்டில் டெபாசிட் அல்லது லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் வைத்திருப்பது சாலச் சிறந்தது. இதன் நோக்கம் வருமானம் பெரிதாக எதிர்பார்ப்பது இல்லை. ஆகையா ல், இதில் எது நல்ல டெபாசிட் என்று அலசாமல், வீட்டுக்கு மிக அரு கில் உள்ள வங்கியில் வைத்திருப்பது மிகவும் நல்லது.
மேலே சொன்ன விஷயங்களைச் செய் து முடித்துவிட்டீர்கள் என்றால், இனி கன ஜோராக முதலீட்டை ஆரம்பித்துவி ட வேண்டியது தான்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்