Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலர்களை பிரிக்கும் மரப்பலகை

அமெரிக்க நாடு கண்டு பிடிக்கப்பட்டு வெள்ளையர்கள் குடியேறிக் கொண்டி ருந்த காலம். அதாவது 17 ஆம்  நூற்றா ண்டின் தொடக்கம். அப்போது விவசா யம் மட்டுமே அங்கு பிரதான தொழிலா க இருந்து வந்தது. ஒரு ஆணும் பெண் ணும் காதலிக்க அப்போது தடையில் லை. திருமணத்துக்கு முன்பே காதல் என்பது சகஜமான விசயம். அப்படி காத லில் ஈடுபடும் ஜோடிகளில், காதலன் தனது காதலியைத் தேடி தொலை தூரத்தில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருவான்.

இப்படி வரும் இளைஞர்கள் குதிரைகளில் வருவதே வழக்கம். வந்து சேருவது மாலை நேரம் என்றால் அந்த இளைஞனை இரவில் வீடு திரும்ப பெண்ணின் பெற்றோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அப்போதெ ல்லாம் பயணம் என்பது அடர்ந்த காடு கள் நிறைந்த பாதையில் செல்வதா கத்தான் இருந்தது. வன விலங்குகள் தொந்தரவு அதிகமாக இருக்கும்.
 
இரவில் வெளிச்சம் தரும் ஒரே பொரு ளாக மெழுகுவர்த்தி மட்டுமே இருந்த து. அதுவும் செலவு அதிகமான ஒன்றா கவே இருந்தது. வீட் டில் இருக்கும் எல்லோரும் ஒரு அறையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொண்டு கும்பலாக தூங்குவார் கள். குளிர் அதிகமாக இருப்பதால் தரையில் படுத்து தூங்க முடி யாது. கூடுதலாக படுக்கையும் இரு க்காது.
அதனால் அந்த இளைஞனை தன் காதலியோடு சேர்ந்து ஒரே படுக்கை யில் படுத்து கொள்ள அனுமதிப்பா ர்கள். ஒரே வகையில் குடும்ப உறுப் பினர்கள் அனைவரும் ஒட்டு மொத் தமாக தூங்க அதற்கு நடுவே காதல் ஜோடி கிசுகிசுத்த குரலில் ரகசியம் பேசிக் கொண்டிருக்கும். பக்கத்தில் காதலர்கள் படுத்திருந்தாலும் எல் லை மீறும் விசயத்துக்கு தடை இருந்தது. இரண்டு பேருக்கும் நடுவே கழுத்தில் இருந்து கால் வரை நீளமான, உயரமான ஒரு பலகையை தடுப்பாக நிற்க வைத்து விடுவார்கள்.
இந்த பலகையை தாண்டி ஒருவர் முகத் தை ஒருவர் பார்த்துக் கொள்ளலாம். முத்த மிட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.! வேறு எதுவும் செய்ய முடியாது.! இது போன்ற பலகைகள் அந்த காலத்தில் எல் லா வீட்டிலும் இருந்தது. இந்த பலகைக்கு ‘பண்டிங் போர்டு’ என்று பெயர். சில வீடுக ளில் இந்த பலகையும் இல்லாமல் இருக்கு ம். அந்த வீடுகளில் இன்னொரு தடுப்பு முறையை கையாண்டார்கள்.
 
பெண்ணின் இடுப்பு வரை உயரமுள்ள சாக்குப்பையில் போட்டு பெண்ணை கட்டி வைத்து விடுவார்கள். அப்புறம் அந்த இளைஞ னோடு தூங்க அனுமதிப்பார்கள். இந்த சாக்குப்பையை மீறி எதுவும் செய்துவிட முடியாது என்பது பெற்றோர்களின் கணிப் பு. ஆனால் நிறைய காதலர்கள் இந்த எல் லைகளை தாண்டியிருக்கிறார்கள் என்ப துதான் மறுக்க முடியாத உண்மை. அந்த காலத்திலேயே முப்பது விழுக்காடு பெண் கள் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

2 Comments

  • நான் கருவூலம் மற்றும் கணக்குத்துறை பணி புரிந்து வருகிறேன் பணியில் சேர்ந்து 8 வருடங்கள் இன்னும் பணிவரன்முறை செய்யவில்லை இதுபற்றி பலமுறை கேட்டும் எந்த ஒரு சரியான தகவலும் இல்லை இதனால் பதவி உயர்வும் பெறவில்லை இதனால் நான் மிக மன வேதனையுடன் இருக்கிறேன் இதற்கு சரியான ஒரு வழி காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: