Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடையில் கோழிகள் பராமரிப்பு (தண்ணீர்)

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறு த்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்று ப்புற வெப்பத்தை குறைப் பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.

வணிக அளவில் வளர்க்கப்படும் இறைச்சி க் கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத் தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பற வைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுத லாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர் வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம் தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது.

கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்க லாம். இத்துடன் தாது உப்புக் களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்கு வதுடன் கோழிகளுக்கு தண் ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின் றன.

தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக் சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செலவி ல் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுட ரைப் பயன்படுத்தலாம். அயோ டின் தயாரிப்புகளை 10 லிட்ட ருக்கு 1 மிலி வீதம் பயன்படு த்தலாம்.

தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்த க்கழிச்சல், சால்மோனல்லோ சிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற் றின் உற்பத்தி திறனையும் குறைய ச் செய்கின்றன.

முட்டையிடும் கோழிகள் முட் டையிட்டவுடன் அதிக அளவு தண் ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்கா கப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதி க தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளி த்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண் ணீர் கோழி களுக்கு வழங்க வேண்டும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: