Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரை விமர்சனம்: காதலில் சொதப்புவது எப்படி? -வீடியோ

காதலில் சொதப்புவது எப்படி? – இளமை துள்ளும் குதூகலமான படம். ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற தனது குறும் படத்தை அப்படியே விரிவாக்கி திரைப் படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார்.

 அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறு ப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மை யால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.

சொதப்பும் முக பாவம் சித்தார்த்திற்கு இயல்பாகவே வருகிறது. படம் முழுவதும் அவர் முகம், ‘ஏன் இப்படி நடக்கிறது?’ என்று கேள்வியை சுமந்தவாறே உள்ளது. சித்தார்த்தைத் தவி ர்த்து வேறு எவரேனும் இப்பாத்திரத்திற்கு ப் பொருந்தி இருப்பார்களா என்பது ஐயம் தான். அதை சித்தார்த்தும் நன்றாக உணர்ந் ததால் தான் படத்தின் இணை தயாரிப்பாள ராகவும் உள்ளார் போலும். படத்தின் இன் னொரு இணை தயரிப்பாளர் ஆக ஒளிப் பதிவாளர் நீரவ் ஷாவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இளமை துள் ள இவரின் ஒளிப்பதிவும் ஒரு காரணம்.

நாயகியாக ‘மைனா’ அமலா பால். வேட் டை,  முப்பொழுதும் உன் கற்பனைகள் என அசத்தலாய் இந்த வருடம் இவருக்கு தொடங்கி உள்ளது. அவரது பெரிய கண்க ளில் இருந்து கண்ணீர் வருவதை அருவியோடு ஒப்பிட்டிருக்கும் இயக்குனரின் சமார்த் தியம் ரசனைக்குரி யது. தாய் தந்தையரின் பிரிவை எண்ணி முகம் வாடுவது, காதலன் மேல் அகல கண்களைத் திறந்து கோபப்பட்டு கத்து வது என அமலா பால் பார்வதி என்னும் பாத்திரமாகவே உள் ளார்.

 அருணின் நண்பர்களாக நடித்திருக்கும் சிவாவும், விக்னேஷும் படத்தின் கலகல ப்பிற்கு உதவுகின்றனர். குறிப்பாக சிவா வின் அறிமுகத்திற்குப் பிறகு மீண்டும் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் ஆரவாரம் எழுகிறது. இவ ர்கள் இருவரும் குறும்படத்தில் நடித்த அதே வேடத்தில் அப்படியே தொடர்கின் றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை என்னும் பெயரில் கழுத்தறுக்கும் நகைச்சுவை நடிகர்களிடம் இருந்து நம்மை தற்காத் துக் கொள்ள நல்லதொரு படம்.

 நாயகி, நாயகன் இடையே தோ ன்றும் தன்முனைப்பை மையப் படுத்தி ஏற்கனவே பல படங் கள் வந்திருந்தாலும் இப்படம் தனி த்து தெரிகிறது. படம் தொடங் கியது முதல் எத்தகைய மன உளைச்ச லையும் அளிக்காம ல்.. அப்படியே முடிந்தும் விடுகி றது. மற்ற படங்கள் போல் பெண்களை காதலில் இரக்கம் அற்றவர்களாகவும், பிடிவாத குணம் மிகுந்தவர்களாகவும் சித்தரிக்காதது ஆறுதலான சங்கதி. ஜான் ஆக நடிக்கும் ஷ்யாம் மற்றும் கேத்தி ஆக நடிக்கும் பூஜா இணையும் கலக்குகின்றனர். இயக்குனர் பாலாஜி மோகன் கதாபாத்திர தேர்வுகளை கனகச்சிதமாக செ ய்துள்ளார். உதாரணத்திற்கு சித் தார்த்தின் பெற்றோராக வரும் ரவி ராகவேந்திரா, ஸ்ரீ ரஞ்சினி இணை மற்றும் அமலா பாலின் பெற்றோராக வரும் சுரேஷ், சுரேகா இணை. தன் முன்னாள் காதலி திருமணம் செய்யவிருக்கும் நபரை வஞ்சகமாக குடிக்க வை த்து குழப்பி விடுபவராக வரும் பாலாஜி என படத்தில் வரும் அனை த்து பாத்திரங்களும் நிறைவாக நடித்துள்ள னர். பாடல்களில் சோபிக்க தவறிய தமன் பின்னணி இசையில் சமன் செய்துள்ளார். குறும்படத்தினைப் போலவே கடைசிக் காட் சிகளில் தோன்றி தனது முகத்தையும் பதி த்துக் கொண்டுள்ளார் இயக்குனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: