Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு கண்டுபிடிப்பு – வீடியோ

நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வட கிழக்கு ப் பகுதியில் விஞ்ஞானிக ள் கண்டுபிடித்துள்ளனர்.

பல ஆண்டுகளில் ஆராய்ச் சிக்கு பிறகு முதல் முறை யாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரி னத்தை கண்டு பிடித்துள் ளதாக, இந்த ஆய்வுக்குழு வுக்கு தலமையேற்றிருந் த டில்லி பல்கலை கழக த்தின் சுற்றுச்சூழல் கல்வி க்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.

வாலில்லாத இந்த உயிரி னங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில- நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப் பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறி யுள்ளனர்.

மரபணுச் சோதனைகளு ம் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற் பரப்புக ளில் வாழ்பவை.

செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப் பது பெரும் சவாலான ஒரு செயல் என டாக் டர் பிஜு தெரிவித்துள் ளார்.

முதுகெலும்புடன் கூடி ய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபி டிப்பது என்பது மிகவும் அரியது என்று கூறும் விஞ்ஞானிகள், உலகி ன் 61 நில நீர் வாழ் உயி ரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத் தியப் பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள் ளனர்.

இந்த உயிரினம் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாத ங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடி யாக சிறு குஞ்சுகளா கவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு என விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.

இந்தியாவின் வட கிழ க்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடை பெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பா ற்ற வேண்டியது பெரிய சவாலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: