Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சென்னையில் பயங்கரம் – வங்கிக்கொள்ளையர்களை என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்

சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப் பட்டனர். இதுபோ ன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழ கத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக் கது.

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோ டா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க் கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளைய டிக்கப் பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர் புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக் காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரா ல் சுற்றி வளைக்கப் பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள் ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீ சார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்தசம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர். அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இட‌த்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பார்வை யிட்டனர். காய மடைந்த இரு எஸ்.ஐ.க்களை ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு சென்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி , நேரில் சென்று ஆறுதல் கூறி னார்.

வடமாநிலத்தை சேர்ந்தவர் கள் : துப்பாக்கிச்சூட்டில் பலி யானவர்கள் குறித்த தகவல்க ளை போலீசார் சேகரி்த்து வருகின்றனர் , சம்பவம் குறி த்த தகவல் வெளியான உடன் பத்திரிகை யாளர்கள் குவிந்த னர். மேலும் பலியானவர்கள் யார் என்ற விபரம் விசாரணையில் தெரிய வரும்‌. எனினும் வட மாநிலத்தவர்கள் என கமிஷனர் திரிபாதி கூறினார். நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமான பொருட்க ளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொள்ளையர்களுக்கு யாருடனேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரைமணி நேரத்தில் முடிந்த என்கவுன்டர்:கொள்ளையர்கள் பதுங்கி யிருந்த சென்னை வேளச்சேரி வண்டிக்காரன் தெருவை முன்பே நோ ட்ட மிட்ட போலீசார் , நள்ளிரவு 2.30 மணியளவில் , வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள செக்போஸ்டில் குவிந்தனர். பின்னர் கொள் ளையர்களை உடனடியாக வெளியே வருமாறு எச்சரிக் கை விடுத்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் போலீசார் எதிர்தாக் குதல் நடத்தினர். நள்ளிரவு 2.35 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம் 3 மணியளவில் முடிந்தது. வீட் டிற்குள் 5 கொள்ளையர்களும் ரத்த வெள்ளத்தி்ல் பிணமாக கிடந் தனர்.

வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்: சென்னை பெருங் குடியில் உள்ள ‌பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழகட்டளையில் உள் ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வங்கிகளில் கடந்த மாதம் 23 மற்றும் இம்மாதம் 20 ஆகிய தேதிகளில்‌ கொள்ளையர்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். போலீசுக்கு பெரும் சவால்விடும் வகை யி்ல் இந்த சம்பவம் அமைந்ததால், கொள்ளை சம்பவங்கள் நடந்த 28 நாட்களி‌‌ லேயே போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கி கொள்ளையர்களை சுற்றி வளைத்து என்கவுன்டர் செய்து ள்ளனர்.. பக்கத்துவீட்டைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், நள்ளிர வில் துப்பாக்கி ச்சூடு சத்தம் கேட்ட வுடன் ‌ஏதோ சம்பவம் நடந்துள்ளதை அறிந்தேன். ஆனால் கொள்ளை யர்கள் என்பது தனக்கு தெரியாது எனவும், அவர்கள் வாடகைக்கு தங்கியிருந்தது தான் தெரியவந்தது என்றார்.சென்னையில் நடந்த என்கவுன்டரி்ல் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பீகார் மாநிலத்தவர் என விசாரணை யில் தெரியவந்தது. கொள்ளை கும்பல் தலைவன் சென் னை பல்கலை.யின் பொறியியல் மாணவர். இவர் வட மாநில மாணவர் களுக்கு சீட் வாங்கி கொடுக்கும் புரோக்கராக இருந்து வந்து் ள்ளார். மேலும் சம்பவ இடமான வேளச்சேரியின் வண்டிக்காரன் தெரு வில் உள்ள வீடு முன்னாள் ரெளடியின் வீடு என தகவல் வெளி யாகியுள்ளது. இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருவதாகவும், இவரது வீட்டில் தான் கொள்ளை கும்பல் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தான் மாதம் ரூ. 5000 வாடகைக்கு கீழ்தளத்தில் குடியிரு ந்து வந்துள்ளனர். தங்களை கல்லூரி மாணவர்கள் என அப் பகுதியி்ல் கூறி வந்துள்ளனர். மேலும் இந்த என்கவுன்டர் நடப் பதற்கு முன்பு முன்னாள் ரெளடியின் மகள் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் ‌எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனையி்ல் 5 பேர் உடல்கள் : என்கவுன்டரி்ல் சுட்டுக் கொல்லப்பட்ட 5 கொள்ளையர்களின் உடல்கள் தற்போது சென் னை செனட்ரல் அரசு பொதுமருத்துவமனையில் பிரேத பரிசோத னைக்காக வைக்கப் பட்டுள்ளது. அதே போன்று காயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளான ரவி (தேனாம்பேட்டை எஸ்.ஐ.), தலை யில் குண்டு காயமும், கிறிஸ்டி ஜெயசீலி (துரைபாக்கம் எஸ்.ஐ) இடுப்பு பகுதியில் குண்டு காயங்களும் இருந்ததால் அவர்கள் ராயப் பேட்டை மருததுவ மனையில் சிகிச்சை பெற்று வருகி்ன்றனர்.

தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் : சென்னையில் நள்ளிரவில் நடந்த என்கவுன்டர் தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என போலீசார் தெரிவித்தனர். நேற்று நள்ளிரவில் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் 5 வடமாநில கொள்ளையர் கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இதே போனறு கடந்த2002-ம் ஆண்டு பெங்களூருவி்ல் பயங்கரவாதி இமாம் அலி கூட்டத்தினர் 5 பேர் போலீஸ் தமிழக போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல ப்பட்டனர். கடந்த 2010-ம் ஆண்டு ரெளடி திண்டுக்கல் பாண்டி உள்பட 2 பேர் நீலாங்கரையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது தமிழகத்தில் முதன்முறை யாக 5 பேர் சுட்டுக்‌கொல்லப்பட்டுள்ளனர்.ஒரேதேதி: சென்னை பெருங்குடியில் கடந்த மாதம் 23-ம் தேதியன்று தான் கொள் ளையர்கள், பேங்க் ஆப்பரோவில் தங்களது கைவரிசைய காட்டி னர். அதற்கு அடுத்த மாதம் பிப்ரவரி 23-ம் தேதி நள்ளிரவில் சுட்டு் க்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் போலீசாரால் விசாரணைய தீவிரப்படுத்தி வெற்றிகரமாக கொள்ளையர்களை சுட்டுக்கொன் றுள்ளனர்.

இரவோடு இரவாக தப்பிக்க திட்டம் : சுட்டுக்கொல்லப்பட்ட வட மாநில கொள்ளையர்கள் நேற்று இரவு தாங்கள் குடியிருக்கும் வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் உள்ள வீட்டின் உரிமையா ளரிடம் வாடகை பாக்கியினை கொடுத்துவிட்டு வீட்டை காலி செய் யப்போவ தாக கூறியுள்ளனர். அப்போது இரவோடு இரவாக தப்பிக்க திட்டமிட்டி ருந்ததாக கூறப்படுகிறது.அப்போது வீட்டின் உரிமையாளருக்கு இவர்கள் தான் ‌‌கொள்ளையர்கள் என தெரியாது ‌என போலீசார் கூறுகின்றனர். எனினும் அன்று இரவில் டி.வி.யில் கும்பல் தலைவனின் வீடியோ படம் வெளியானது . இத‌னை பார் த்த போது தான் அவர்கள் போலீசாரால் தேடப்படும் கொள்ளைய ர்கள் என்ற தகவல் தெரிந் தது.அதன்பின்னர் தான் போலீசாருக்கு கொள்ளையர்கள் தங்கியிருந்த விவரம் தெரிய வந்தது. இதனால் தக்க நேரத்தில் போலீசார் செயல் பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் பெயர் தெரிந்தது : சென்னை வேளச்சேரியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வினோத் குமார், வினாய் குமார், ஹரீஷ்பிரசாத் , சகி‌கரே , அபேகுமார் உள் ளிட்ட 5 பேர் ஆவர். இதில் சகிகரே என்பவர் மேற்குவங்க மாநிலத் தை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் பீகார் மாநிலத்தவர் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் வங்கிகளில் கொள் ளை நடத்த திட்டம் தீட்டியதும் தெரிவந்துள்ளது. இவர்கள் பயன் படுத்திய துப்பாக்கி கள் பீகாரில் தயாரிக்கப்பட்டவை எனவும் தெரிய வந்துள்ளது. இதற்காக வேளச்சேரி வண்டிக்காரன் தெருவில் ரூ. 20 ஆயிரம் அட்வான்‌ஸ், மாதம் ரூ.5000 வாட‌கை பேசி தங்கியிருந்தனர்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: