Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(19/2)எய்ட்சால் பாதிக்கப்பட்டு சாகப் போகிறீ ர்களடி…’ என, குண்டை போடுங்கள்.

 

என் அன்பு மகளுக்கு, அன்பு கலந்த ஆசியுடன் எழுதுவது —

நான் 71 வயது மூதாட்டி. மிக மிக, மன வருத்தத்துடனும், உன்னிட மிருந்து நல்ல தீர் ப்பு கிடைக்கும் என்ற நம்பிக் கையுடனும் எழுதுகி றேன். கணவர் வயது 73. அடுத்த சில மாதங்களில், ஐம்பதா வது திருமண நாள் வருகி றது. என் கணவர் ஒழுக்க மானவர் அல்ல என்ற விஷ யம், எனக்கு மணமான சில மாதங்களிலேயே தெரிய வந் தது. என் பிறந்த வீட்டின் வறு மை, என் அம்மாவை என்னு டன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம், ஆகிய காரணங்களால் அதட்டிக் கேட் க என்னால் முடியவில்லை.

இலைமறை காயாக பயத்துடன் சில விஷயங்களைக் கூறும் போது, மிகவும் கோபத்துடன் மறுத்து விடுவார். திருமணத்துக்கு முன், பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருக் கிறார். பரவா யில்லை… இனி, உண்மையாக இருப்பார் என்று எண்ணி, மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால், எங்கள் வேலையின் நிமித்தம், பல ஊர்களுக்குக் குடும்பத்துடன் குடி பெயர்ந்தோம். போகும் ஊர்களில் எல்லாம் பல பெண் களுடன், தகாத உறவை ஏற்படுத்திக் கொள்வார்.

ஆனால், எல்லாமே சந்தேகமாகவே இருந்தது. என்னுடைய இள வயது, குடும்பச் சூழ்நிலை, தாயின் அருகாமை ஆகிய மூன்று காரண ங்களால், என்னால் அதட்டிக் கேட்கவோ, அவரைப் பயமு றுத்தியோ மாற்ற இயலவில்லை. சில மாதங்களுக்கு முன், நான் சந்தேகப்பட்டது அனைத்தும் உண்மை என்பதை அவரே ஒத்துக் கொண்டார்; ஆனால், அதற்காக கொஞ்சமும் வருத்தப்படவில் லை. மாறாக, “ஊரில் பலரும் செய்வதைத்தான் நானும் செய்தேன். அவங்களே விரும்பி வரும் போது, நான் ஏன் மறுக்க வேண்டும். யாரையும் நான் பலாத்காரம் செய்யவில்லை…’ என்று கூறி விட் டார்.

ஒரு பெண்ணுக்கு, பெரும் துயரைக் கொடுக்கும் செய்தி, தன் கணவன் தனக்கு துரோகம் செய்வதுதான். என் புருஷன் எனக்கு மட்  டும் என்ற ஆசையோடு, அவரை கரம் பிடித்தவள். இந்த வயதிலும் என்னால் அதைத் தாங்க இயல வில்லை. என் பிள்ளைகள் அனைவரும் நல்லவர்களே! பேரன் – பேத்திகள் அனைவரும் என்னுடன் அன்பாக இருப்பர். ஆனாலும், கணவர் எனக்கு செய்த கொடுமையை நினைத்தால், வெறுப்பின் உச்சத்தி ற்கே சென்று விடுகிறேன். நான் என்ன செய்யலாம்? விவாகரத்து செய்து விடலாமா? அப்படி செய்தால், என் பிள்ளைகள் மானமும் சேர்ந்து கப்பலேறி விடும். நீ தான் எனக்கு வழி காட்ட வேண்டும், அப்பனுக்குப் பாடம் சொன்ன முருகனைப் போல, இந்த அம்மா வுக்கு ஒரு வழிகாட்டு. உன் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்பு கலந்த ஆசிகள்.

— இப்படிக்கு, நல்ல மரணத்தை விரும்பும் அபலை.

அன்புள்ள அம்மாவுக்கு —

அடுத்த சில மாதங்களில் நீங்களும், உங்களது கணவரும், ஐம்பதா வது திருமண நாளை கொண்டாட இருக்கிறீர்கள். ஐம்பதாண்டு காலமாகவே, உங்களது கணவர், உங்களுக்கு தொடர்ந்து நம்பிக் கைத் துரோகம் செய்து வந்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் பொறு த்திருந்த நீங்கள், உங்களது கணவரை விவாகரத்து செய்து விடலாமா என கேட்கிறீர்கள்.

கணவனின் ஒழுங்கீனத்தை கண்டிக்காததற்கு காரணம், உங்களின் குடும்ப வறுமையும், பெற்ற தாயை உடன் வைத்துக் கொள்ள வே ண்டிய நிர்பந்தமுமே என்கிறீர்கள். இது, நொண்டி சாக்கு. சகல விதத்திலும் அவரை சார்ந்து நின்று, உங்களது சுயத்தை தொலைத்திருக்கிறீர்கள். உங்களது

கோழைத்தனமும், அடிமை மனோபாவமும் தான், அவரின் துர்நடத்தைக்கான கிரியா ஊக்கிகள்.

உங்களின் மகன் – மகளின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றியும், பேரன் – பேத்தி வயது, கல்வித் தகுதி பற்றியும், கடிதத்தில் குறிப்பி டவில்லை. உங்களது மூத்த மகன் – மகளுக்கு, 45 வயது இருக்கக் கூடும். உங்களது மூத்த பேரன் – பேத்திக்கு, இருபது வயது இருக்கக் கூடும். மகன் அல்லது மகள் கூடவா, கிழவரை கண்டிக்கத் துணிய வில்லை?

உங்கள் அனைவரையும் பணத்தாலும், அதிகாரத்தாலும் கட்டிப் போட்டு வந்திருக்கிறார் கிழட்டு மன்மதன்.

அவரை தண்டிக்க என்ன செய்யலாம்…

ஐம்பது வருடம் குடும்பம் நடத்தி, இப்போது அவரை விவாகரத்து செய்வது அறிவீனம். ஊரார், உறவினர் மட்டுமல்ல, பெற்ற பிள் ளைகளே கைகொட்டி சிரிப்பர். மீறி, இருவருக்கும் விவாகரத்து ஆகி விட்டால், இருந்த ஒரு தடையும் போய், முழு வேகத்தில் ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார் தாத்தா. மறுமணம் செய்வார். சொத்துகளை எந்தெந்த குமரிகளுக்கோ தானமாய் எழுதி வைப் பார். இரண்டு, மூன்று வருட, காமக் களியாட்டத்துக்குப் பின், கிழவர் எய்ட்ஸ் வந்து செத்துப் போவார்.

காந்திஜி வழியில், உள்ளிருப்பு அறப் போராட்டம் நடத்துங்கள். நீங்களே தனியே சமைத்து சாப்பிடுங்கள். தனியறையில், தனிப் படுக்கையில் படுங்கள். கிழட்டு கல்லாப்பெட்டி சிங்காரத்தடன், மூன்று வருடங்களுக்கு பேசாதீர்கள். வெளி விசேஷங்களுக்கு, கண வனுடன் ஜோடி சேர்ந்து போகாதீர்கள். உங்களின் கணவரின் நடத்தையை, சூசகமாக கண்டிக்கும் விதத்தில், அவருக்கு இழி வான பட்டப்பெயர் சூட்டுங்கள். அவரை உங்கள் மகன் – மகளிடம் குறிப்பிடும் போது, பட்டப் பெயரால் குறிப்பிடுங்கள். பாகிஸ்தான் அதிபரையும், இந்திய பிரதமரையும், ஒரே வீட்டுச் சிறையில் வைத்தால், எப்படி இருப்பர் – அப்படி கணவனிடம் நடங்கள்.

சட்டப்பூர்வ விவாகரத்துதான் வேண்டாம் என்றேன். கணவன் கட் டிய தாலியை, அவர் முன்னே கழற்றி வைத்து விடுங்கள். “கணவர் திருந்திய நாளன்றுதான் மீண்டும் அணிவேன்…’ என, சபதம் எடு ங்கள்.

மொத்தத்தில் வீட்டிற்குள் ஒரு நரகத்தை, கணவருக்கு பிரத்யே கமாக சிருஷ்டியுங்கள். உங்களின் நடவடிக்கையை எதிர்த்து, வன்முறை புரிந்தார் என்றால், உண்ணாவிரதத்தில் இறங்குங்கள். உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணத்தை, உங்கள் பிள்ளைகள் தெரிந்து கொண்டால், உங்கள் கணவரை துவம்சம் செய்து விடு வர்.

ஐம்பதாவது திருமண நாளை, துக்க நாளாக அனுஷ்டியுங்கள். தனியாகவோ, மகன் – மகளுடனோ காசி, ராமேஸ்வரம், திருச் செந்தூர், திருநள்ளாறு சென்று வாருங்கள். கணவர் உயிரோடு இருக்கும் போதே, இறந்து விட்டது போல் விதவைக் கோலம் பூண்டு, கணவரை சென்டிமென்டாய் மிரட்டுங்கள். கிழவருடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்களுடன், தொலைபேசியில் தொட ர்பு கொண்டு, “கிழவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது; அவருடன் உறவு வைத்துள்ள நீங்களும், எய்ட்சால் பாதிக்கப்பட்டு சாகப் போகிறீ ர்களடி…’ என, குண்டை போடுங்கள்.

மகன், மகளிடம் கலந்தாலோசித்து, உங்கள் கணவருக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப் படுத்துங்கள்.

எதிரியின் கோட்டையை, ஒரு மன்னன் சகல திசைகளிலும் முற்று கையிட்டு, எதிரியை சரணடையச் செய்வது போல இருக்கட்டும் உங்களது செய்கைகள்.

குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும், அவரை வற்புறுத்தி செக்ஸ் அடிக்ஷன் தெரபி மேற்கொள்ள வழி பாருங்கள். தலைகேசத்திற்கு, மீசைக்கு, “டை’ அடிக்க அவரை அனுமதிக்காதீர்கள்.

நல்ல மரணத்தை விரும்பும் அபலை என்று உங்களை பற்றி நீங்களே எழுதியிருந்தீர்கள். நீங்கள் மட்டுமல்ல, நானும் கூடத் தான் நல்ல மரணத்தை விரும்புகிறேன். நீங்கள் கண்டிப்பான, பொறு ப்பான மனைவி, பொறுப்பான தாய், பொறுப்பான பாட்டி. இன்னும் பல நிகழ்ச்சிகளை, உங்களது குடும்பத்தில் பார்த்து விட்டு, நல்ல மரணத்தை தழுவுவீர்கள். இதற்கு பின்னரும், திருந்தா விட்டால், உங்களது கணவருக்கு இறைவன் துர்மரணமே பரிசளிப்பான்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: