Sunday, March 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாகனங்களின் பதிவு விபரங்களை உங்கள் மொபைல் மூலமாக தெரிந்து கொள்ள‍ . . .

வாகன பதிவு விபரங்களை எஸ்எம்எஸ் மூலம் மொபைல் போனி லேயே தெரிந்து கொள்ளும் புதிய சேவையை மத்திய அரசு துவங் கியுள்ளது. இதன்மூலம், திருட்டு மற்றும் சட்ட விரோ தமாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக கண்டு பிடுக்க முடியும்.

வாகன பெருக்கத்திற்கு தக்க வாறு திருட்டு வாகனங்களின் புழக்கமும் மார்க்கெட்டில் சர் வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் யூஸ்டு கார் அல்லது இருசக்கர வாகனங்கள் வாங்குவோர் இந்த விஷயத் தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகி றது.


இந்த நிலையில், வாகன விபரங்களை உடனடியாக தெரிந்துகொ ள்ள ஏதுவாக புதிய எஸ்எம்எஸ் சேவையை மத்திய அரசு துவங்கி யுள்ளது. 09212357123 என்ற மொ பைல் எண்ணுக்கு vahan> space< சம்பந்தப்பட்ட வாகன பதிவு எண் ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும்.


அடுத்த ஒரு சில வினாடிகளில் பதி ல் எஸ்எம்எஸ் மூலம் வாகனத்தி ன் விபரம் நம் மொபைல் போனுக் கு வந்து விழுகிறது. அதில், உரி மையாளர் பெயர், வாகனம் எந்த ரகத்தை சேர்ந்தது, வரி காலாவதி ஆகும் விபரங்கள் உள்ளன.


இதன்மூலம், சேவையின் மூலம் திருட்டு வாகனத்தை வெகு எளி தாக கண்டுபிடித்துவிடலாம். கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களின் விபரங்களையு ம் எஸ்எம்எஸ் மூலம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. 


2003ம் ஆண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக இருந்தால், அந்த வாகனம் ஆர் டி ஓ அலுவலகத்திற்கு ஒரு முறையாவது சென்றிருந்தால் அந்த வாகனங்களின் விபரத்தையும் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய சேவையின் மூல ம் போலி டாக்குமென்ட் மூல ம் விற்பனைக்கு வரும் வாக னங்களையும், சட்ட விரோத மாக பயன்படுத்தப்படும் வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply