Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி தயாரிக்க‍ப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி, அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிவிடு கிறது. எல்லா அமைச்சர்க ளுக்கும், நிதிநிலை அறிக் கை தொடர்பான சுற்றறி க்கை அனுப்பப்படும். அமை ச்சகத்தின் வரவு-செலவு மதிப்பீட்டு கணக்கு விவரத் தை சமர்ப்பிக்கும் படி இந்த 109 பக்க சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்படும்.

இதன்படி, எல்லா அமைச்சங்களுக்கும், தங்களுக்கு தேவையான வழக்கமான செலவுக் கணக்கு மதிப்பீடுகள், புதிய திட்டங்களின் நிதி மதிப்பீடுகளை குறிப்பிட்டு, நிதிநிலையில் அதற்கான நிதி ஒதுக்கும்படி விரிவா ன அறிக்கையுடன், பதி ல் அறிக்கை அனுப்பும்

நவம்பர் முதல், டில்லி யில் நிதியமைச்சகம் உள்ள ரெய்சானா ஹி ல்ஸ் பகுதி வடக்கு பிளாக் பரபரப்பாகி வி டும். வர்த்தக, தொழில், விவசாய தொழிற்சங்கம் உட்பட, பல்வேறு தரப்பினரின் பிரதி நிதிகளுடன் நிதியமைச்சக உயரதிகாரிகள் பேச் சுவார்த்தை நடத்துவார். தங்களுக்கு என்னென்ன திட்டங்களில் சலு கை அளிக்க வேண்டும்; வரியை குறைக்க வேண்டும் என்பது போன்ற விசயங்களில் கோரிக்கை வைப்பார்; இதன் அடிப்படை யில், மாத இறுதியில் நிதியமைச்சக அதிகாரிகள், ஒரு விரிவான மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பார்.

 புத்தாண்டு பிறந்த நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நிதியமைச்சர் நேரடியாகவே பேசுவா ர். அவர்களின் கோரிக்கைகளை அறி ந்து கொள்வார். நிதிநிலையில் ஏதா வது திட்டங்கள் சேர்க்க வேண்டுமா னால், அது பற்றி கூட்டணி கட்சித் தலைவர்கள், அறிக்கையாக சமர்ப்பி ப்பார்.

அதை பரிசீலித்து நிதி நிலைக்கு ஏற்ப நிதிநிலையில் அறிவிப்பது பற்றி நிதி யமைச்சர் இறுதி முடிவெடுப்பார். சில சமயம், சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவை பற்றி உறுதி மொழி மட்டும் அளிக்கவும் கூடும்.

நிதிநிலை உரை நகல்களை அச்சடிப்பது தொடர்பாக அச்சக தொழில் நுட்ப வல்லுநர்கள், உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கள், ஸ்டெனோகிராபர்கள் போன்ற முக்கிய பிரிவு அதிகாரிகளு டன் பேச்சு நடக்கும். நிதிநிலை விவ ரம் எதுவும் கசியக்கூடாது என்பதற்கா க, சில அதிரடி நடவடிக்கைகள் எடு க்கப்படும். அதற் கேற்ப, நிதிநிலை தாக் கலாகும் நாள் வரை, ஏழு நாளு க்கு இவர்கள், ‘வடக்கு பிளாக்’ கில் தங்க வைக்கப்படுவர்.
குடும்பத்தினருடன் கூட இவர்கள் இந் த ஏழு நாள் பேச முடியாது. நேரில் பார் க்க முடியாது. ஒரு ரகசிய போன் எண் மட்டுமே குடும்பத்தினருக்கு தரப்ப டும். முக்கிய தகவலாக இருந்தால் மட் டும், அதை இந்த எண்ணில் சொல்ல லாம். அந்த தகவல், குறிப்பிட்ட ஊழியருக்கு போய்ச் சேரும். உள வு அதிகாரிகள் சுற்றி வளைத்து, முழு அளவில் கண்காணிப்பை மேற் கொள்வர். செல்போன் வே லை செய்யாது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த செல்போன் ஜாமர் கருவி வைக்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் துறைகள், அமைச்சக ங்களின் வெப்சைட்களை பராமரிக்கும், நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டருடன் இணைக்கப் பட்டிருக்கும். ஆனால், நிதி நிலை தாக்கலாகும் முன் ஏழு நாள் மட்டும் வடக்கு பிளாக்கில் உள்ள கம்ப் யூட்டர்கள் தனி, சர்வர் மூலம் இயங்கும்.

வெளித்தொடர்பு இருக்காது. நிதிநிலை உரை புத்தகம் இறுதி செய்யப்பட்டு விட் டதும், தாக்கலாகும் இரண்டு நாளுக்கு முன் நள்ளிரவில்தான் ஏற்குறைய அச்ச டிப்பு துவங்கும். தொடக்கத்தில், ஜனாதி பதி மாளிகையில்தான் நிதிநிலை உரை அச்சடிக்கப்பட்டு வந்தது.

ஒரு முறை கசிந்ததால், மின்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத் தில், 1950 ல் இருந்து அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி, 1980ல் இருந்து, வடக் கு பிளாக் வளாகத்தில், தரை தளத்தில் அச்சடிக்கப்படுகிற து.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: