Tuesday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மின்சார வார விடுமுறை எங்கே? எப்போது?

தமிழகமே இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற் சாலைகளுக்கு மாவட்ட வாரி யாக வார மின்விடுமுறை நாட் களை மின்வாரியம் அறிவித் துள்ளது. தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

ஈரோடு மாவட்டத்திற்கு திங்க ட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளு க்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிக ளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக் கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதி களுக்கு சனிக்கிழமையும் தொழிற் சாலை வார மின் விடுமுறை நாட் களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 27ம் தேதி முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின் வெட்டு 2 மணிநேரமாக அதிகரிக்க ப்படுவதாகவும், மாநிலத்தின் மற் ற பகுதிகளுக்கு 4 மணிநேரமாக மின் வெட்டு இருக்கும். மாநிலத்தி ல்,  நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிற து. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடை க்கிறது. தினந்தோறும் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு மின் பற்றா க்குறை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், மின்வெட்டு 10 சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு முடிந்த வரை தடையின்றி மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டு ள்ளது. காற்றாலை மின்உற்பத்தி ஜூன் மாதம் துவங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அது துவங்கினால் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தொழிற்சாலை மற்றும் வ ணிக மின் பயனீட்டாளர்களு க்கு, 40 சதவீத மின் வெட்டு.

* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு, 2 மணி நேர மின் தடை.

* நகர மற்றும் ஊரகப் பகுதிக ளுக்கு, 4 மணிநேர மின் தடை.

* வணிக பயனீட்டாளர்களுக்கு, மாலை 6 மணி முதல், 10 மணி வரை மின் பயனீட்டு கட்டுப்பா டு.

*தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் மின்சார விடு முறை.

இதில், தொழிற்சாலைகளுக்கா ன மின்சார வார விடுமுறை , வரும் 1ம் தேதி முதல் அமலுக் கு வரும்.

மின்சார வார விடுமுறை எங் கே, எப்போது?

கிழமை இடம்

திங்கள் ஈரோடு மண்டலம் (ஈரோடு, நாமக்கல், கோபி, சேலம், ஓமலூர், ராசிபுரம், வாழப்பாடி மற்றும் மேட்டூர்)

செவ்வாய் சென்னை தெற்கு மண்டலம் (அடையார், கே.கே., நகர், போரூர், கிண்டி, தாம்பரம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி), திருப்பத்தூர் பகிர்மான வட்டம் (திருப்பத்தூர், வாணியம்பாடி, பள்ளிகொண்டா, ஆம்பூர், குடியாத்தம், பேர்ணாம்பூர்)

புதன் சென்னை வடக்கு மண்டலம் (அண்ணா சாலை, மயிலாப்பூர், எழும்பூர், தி.நகர், தண்டையார்பேட் டை, பெரம்பூர், பொன்னேரி) மற்றும் மதுரை மண்டலம் (மதுரை, திண்டுக் கல், ராமநாதபுரம், சிவகங்கை, தே னி, பழநி, காரைக்குடி, சிவகங்கை)

வியாழன் கோவை மண்டலத்தில், திருப்பூர் மற்றும் நீலகிரி மின் பகிர் மான வட்டம் நீங்கலாக

வெள்ளி திருநெல்வேலி மண்டலம் (திருநெல்வேலி, வள்ளியூர், சேரன்மகாதேவி, திசையன்விளை, அம்பாசமுத்திரம், கடைய நல் லூர், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, ஆலங்குளம், சங்கரன்கோவில், கலிங்கப்பட்டி ) மற்றும் திருப்பூர், நீலகிரி பகிர் மா ன வட்டம்

சனி திருச்சி, விழுப்புரம் மற்று ம் வேலூர் மண்டலத்தில் திருப் பத்தூர் பகிர்மான வட்டம் நீங்க லாக

இந்த அடிப்படையில், மின்சார வார விடுமுறை அமலாகும் என,  மின் வாரியம் அறிவித்துள்ளது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

%d bloggers like this: