Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை திவ்யாவின் “பாச மழை”யில் நனைந்த இளம் நடிகர்

இளம் நடிகர் மீது திவ்யா பாச மழை பொழிந்து டுவிட்டரில் புகழ்ந் திருப்பதால்இருவர் பற்றியும் கிசுகிசு கிள ம்பி உள்ளது.

‘வாரணம் ஆயிரம்’, ‘குத்து’, ‘பொல்லாத வன்’உள்பட பல்வேறு தமிழ் மற்றும் கன்னடபடங்களில் நடித்திருப்பவர் திவ் யா. இவர் வெளி நாட்டு தொழில் அதிபர் ரபேல் என்பவரை காதலித்து வருகி றார். இருவரும்ஒரு சில நிகழ்ச்சிகளில் ஜோடி யாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ‘லக்கி’என்ற படத்தில் தன் னுடன் ஜோடியாக நடித்துள்ள கன்னட இளம் நடிகர் யாஷ்என்பவரை டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதில், “யாஷ் தொழில்ரீதியான நடிகர். சாந்தமானவர். எளிமையா னவர். எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரைப்போல் அர்ப் பணிப்பு நிறைந்த ஒரு நடிகரை இது வரை பார்க்கவில்லை. சில சமயம் உண வைக்கூட பொருட்படு த்தாமல் நடிப்பில் கவனமாக இருப்பார். கண்ணாடியில் பார்த்து தனக்கு தானே ஒத்திகை பார்த் துக் கொள்வார். நாங்கள் பேச வேண்டிய வசனங்களை மறக்கா மல் ஞாபகம் வைத்திருப்பார். மற்றவர்க ளின் தொடர்ச்சி வசனங்கள் பற்றியும் அவருக்குஞாபகம் இருக்கும். சுயநலமற் ற நடிகர். அவரைப் பற்றி வரும் வதந்தி கள் ஆதார மற்ற வை. யாஷ் நீங்கள் எப் போதும் சந்தோஷமாக இருக்க வேண் டும். உங்களுக்கு என்னுடைய பெரிய அரவணைப்பு” என்று குறிப்பிட்டு முடித் திருக்கிறார் திவ்யா. இதற்கு பதில் அளித் துள்ள யாஷ், ‘திவ்யா திரையுலகில்அனுபவம் உள்ளவர். 2 மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தாலும் காட்சியை சொன் ன நிமிடத்தில் சரியாக நடித்து முடிக்கு ம் திறமை உள்ளவர்” என்று தன் பங் குக்கு ஐஸ் வைத்திருக்கிறார். இருவரு ம் ஒருவருக் கொருவர் ஜலதோஷம் பிடிக்கும் அளவுக்கு புகழ்ந்திருப் பதால் அவர்களை இணைத்து கிசு கிசு கிளம்பி இருக்கிறது.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply