Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இருளில் தத்தளிக்கும் தமிழகம் இனி சூரிய சக்தியால் ஒளிரப்போகிறது

மாநிலமே, இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிய சக்தியின் மூலம் மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற் கான திட்டத்தை தமிழ்நாடு எரி சக்தி மேம்பாட்டு முகமை உருவா க்கி தந்துள்ளது. அரசின் ஒப்புதலு க்காக காத்திருப்பதாகவும், முதற் கட்டமாக, 2 ஆயிரம் அரசு அலுவ லகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப் பதாகவும், அங்கு 1 கிலோ வோல் ட் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றும் பேனல்கள் அமைக்கப் பட உள்ளதாகவும், அதன்மூலம் 1000மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பொது மேலாளர் ஸ்ரீனிவாஸ் சங்கர் கூறியதாவது, சென்னையில் மட்டும் 1000 அரசு அலுவலகங் களை இதற்காக தேர்ந்தெடுத் துள்ளோம். இதோடு மட்டுமல் லாது, வீடுகள் மற்றும் தெரு விளக்குகளிலும் இது பயன்படு த்தப்பட உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், 1000மெகாவாட் ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

சூரிய ஒளியின் மூலம் தயாரி க்கப்பட உள்ள மின்சாரத்தை 3 லட் சம் வீடுகள் மற்றும் 1 லட்சம் தெருவிளக்குகளுக்கு பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தங்களது நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள், 60 ஆயிரம் வீடுகள் மற்றும் 20 ஆயிரம் தெரு விளக் குகளுககு சோலார் பேனலை நிறுவ தீர்மானித் துள்ளது. இந்த சோலார் பேனலை, பலமாடிக் கட்டிட ங்கள் மட்டு மல்லாது அனை த்து வீடுகளுக்கும் பயன்படு த்த அறிவுறுத்துமாறு அரசை கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

வீடுகள் மற்றும் பொது சுகாதார மையங்களில், சோலார் வாட்டர் ஹீட்டர்களை நிறுவ மக்களிடம் வலியுறுத்த உள்ளோம். எலெக்ட் ரானிக் சிட்டியான பெங்களூரு உள்ளிட்ட நாட்டின் முன்னணி நகர ங்களில், சோலார் வாட்டர் ஹீட்ட ர்களின் பயன்பாடு அதிகரித்து வரு வது குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.

சூரிய சக்தி கொள்கை, கடந்த சில வருடகாலமாக கிடப்பிலேயே கிடந் ததாகவும், 2010ம் ஆண்டு மே மாத த்தில் அரசால் தூசு தட்டப்பட்ட இக் கொள்கை, 2012 ஜனவரி மாதம் மீண்டும் புத்துயிர் பெற் றது. சூரிய சக்தி கொள்கையை வெகு நாட்களா க எதிர்பார்த்து வருவதாக எல் & டி மற்றும் ஜினர்ஜி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்து ள்ளன. மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மாநாட்டில், இது குறித்து விவாதிக்க இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள் ளன.

News in Dinamalar

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply