Sunday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் தினத்தில் பெண்களைப் பற்றி பெண்கள் . . .

ஆண்டுதோறும் மார்ச்-8 அன்று ‘மகளிர் தினம்’ கொண்டாடப்படும் வேளையில், ‘பெண்களுக்குப் படிப்பு ச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது, வே லைக்குச் செல்கிறார்கள், கைநிறை ய சம்பாதிக்கிறார்கள், கார் ஒட்டுகி றார்கள், ஜீன்ஸ் போடுகிறார்கள். அவர்களின் நிலை  முன்னேற்றம டைந்துள்ளது!’ என்று ஒருபுறம் பாஸிட்டிவாக முழக்கமிடுகின்றன பல மேடைகள்.
மற்றொருபுறம், ‘பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து இருக்கி றது, எத்தனை பெரிய பதவியி ல் இருந்தாலும் அவள் ஆணா திக்கச்சூழல் வட்டத்தில் இருந் து விடுபட முடிவதில்லை, பெ ண்கள் வாழ்வதற்குப் பாதுகாப் பில்லை’ என்கிற நெகட்டிவ் குரல்களும் கேட்கின்றன.

‘உண்மையில் பெண்களின் நிலை இன்று எப்படி இருக்கிற து?’ என்பதை சமூக அக்கறையு டன் ஒன்று கூடிப் பேசினார்கள், விவாதித் தார்கள் பெண்ணியச் செயல்பாட்டாளர்களான… கவிஞர் ஓவியா, சமூக ஆர்வலர் ஷீலு, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வானதி ஸ்ரீநிவாஸன் மற்றும் கல்லூரி மாணவி சத்யப்பிரியா…

உரையாடலைத் தொடங்கினார் ஓவி யா: பெண்களின் கல்வியிலி ருந்து நா ம் ஆரம்பிக்கலாம். பத்து வருடங்களுக் கு முன், இன்றுள்ள அளவுக்கு பெண்கள் படிக்கவில்லை, அதற்கான விழிப்பு உணர்வுச் சூழலும் அப்போது இல்லை. நடுத்தர, பொருளாதாரத்தில் பின் தங்கி யிருக்கும் குடும்பங்களிலும் பெண் ணைப் படிக்க வைப்பதன் அவசியத் தை இன்று உணர்ந்திருக்கிறார் கள்.

சத்யா: கிராம பெண்களும் படித்து கார் ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வாய்ப்பு இந்த பத்தா ண்டுகளில் அதிகம் கிடைத்தி ருக்கிறது.

ஷீலு: அதனால்தான் 2001- ல் 53 சதவிகிதமாக இருந்த பெண் கல்வி, இன்று 65 சத விகிதமாக உயர்ந்திருக்கிற து. பாராட்டுக்குரிய வளர்ச் சி.

வானதி: பெண்கல்வி உயர்ந் ததால்தான், பெண்கள் இது வரை வேலை செய்ய மறுக் கப்பட்ட எல்லா துறைகளிலும்… குறிப்பாக, ராணுவம், காவல் துறை, தீயணைப்புத் துறை, வாகனம் ஓட்டுவது என கடினமான துறைகளிலும் இன்று நுழைந்து இரு க்கிறார்கள். ஆணுக்குச் சமமாக, உழைக்கிறார்கள். அதேசமயம்… ஆபீ ஸ், வீடு, சமூகம் சார்ந்த பொறுப்பு கள் என பல்முனைச் சுமைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்கள் என்பதை மறு க்கமுடியாது.

ஓவியா: வேலை செய்யும் இடங்களி ல் பாலியல் பிரச்னைகளையும் சந் திக்க வேண்டிஇருக்கிறது. ஆணுக்கு இருக்கும் அதிகாரத் தால் உருவாகும் பிரச்னை இது.

ஷீலு: இன்றும், திருமணச் சந்தையில் பெண் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது. சுருக்கமாக சொன்னால்… கல்வி, பெண் ணுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த அதிகாரத்தை

Girl Sitting (Oil Painting)

குடும்ப நிறுவனம் பறிக்கிறது.

வானதி: பெண்கள், தங்களின் ஆ ரோக்கியத்தில் அடைந்திருக்கும் விழிப்பு உணர்வு, நல்ல விஷயம். ‘பெண்கல்வியின் பலன்’ என்று சொல்லலாமா ஷீலு?

ஷீலு: ஒரு வகையில் உண்மைதா ன். பெண்கல்வி பெண் குழந்தை களின் இறப்பு சதவிகிதத்தையும், மகப்பேறின்போது பெண்கள் இறக்கும் சதவிகிதத்தையும் குறைத்திருக்கிறது. ஆனால், கரு வில் இருக்கும் பெண் குழந்தை யைக் கொல்வது சில ஆண்டுகளா க அதிகரிக்கிறது. தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் 0-6 வயதுள்ள ஆண் – பெண் குழந்தைகளின் விகி தம் 1000:892 என மிகமிகக் குறைவாக இருக்கிறது.

ஓவியா: பெண் நலம் என்பது மிகமுக்கியப் பிரச்னை. ஆனால், அர சு க்கு அதுபற்றிய அக்க றை அதிகம் இல்லை. மக்கள் தொகையில் பா தியாக இருக்கும் பெண் களுக்கென்றே வரும் நோய்களான கர்ப்பப் பை  புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மெனோபாஸ் பிரச் னைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நலம் காக்கும் சிந்த னை… அதிகாரத்தில் இருப்ப வர்களுக்கு இல்லை. ஏனென் றால்… அதிகாரத்தில் இருப்பது ஆண்கள்தானே!

வானதி: இதுமட்டும் இல்லை ஓவியா. இன்றைக்கு டீன் ஏஜ் பிள்ளைகளின் கர்ப்பம் அதிக ரித்து வருவது ஆபத்தான விஷயம். இன்டெர்நெட், டி.வி, செல்போன் போன்றவற்றின் மூலமாகவே பாலியல் சம்பந்தமான தகவல்கள் ஆயிரமாயிரம் கிடைக்கின்றன. அவை சரியா, தவறா என்று இளம் வயதினர் பகுத் து உணரக்கூடிய பக்குவத்தை இந்தக் கல்வி தர வில்லை. ‘குட் ட்ச்’, ‘பேட் டச்’ தெரியாத எட்டாம் வகுப்புச் சிறுமி, எப் படி தன்னை பாதுகாத்துக் கொள்வாள்… பாலியல் சீண் டல்களில் இருந்து?

சத்யா: கல்லூரியில் இருக்கு ம் எங்களுக்கே எது தவறு, எது சரி என்று தெரியவில்லை. பா வம் பள்ளிச் சிறுமிகள். என்ன நிகழ்ந்தது என்றே தெரியாமல் கர்ப் பிணியாக நிற்கும் பள்ளிச் சிறுமிகளும் இருக்கிறார்கள், இணைய தள தேடலின்போது எதிர் பாராதவித மாக போர்னோ படம் பார்க்க நேரிட்டதற்காக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முய ன்ற கல்லூரிப் பெண்களும் இருக்கிறார்க ள். பாலியல் கல்வி என்பதை உடல் சார்ந் த விஷயம் என்ற வட்டத்துக்குள் இருந்து விடுவித்து,  மருத்துவ அறிவியலாகப் பா டம் புகட்டும் பாலியல் கல்வி இன்று அவ சியம்.

ஷீலு: முன்பெல்லாம், ‘பிள்ளை பெத்தாச் சு… இனி எதற்கு உடம்பை கவனிக்க வே ண்டும்..?’ என்ற எண்ணம் பெண்களுக்கு இருந்தது. இன்று… தேக நலனில், வெளிப் புறத் தோற்றத்தில் அக்கறை காட்டுகிறார் கள். அதேநேரம் அதிகமான பெண்கள் வீடு , அலுவல கம் என்று சந்திக்கும் மன வன்முறைகளால் பலவித மன நோய்க் கும் ஆளாகிறார்கள்.

சத்யா: மேடம், பெண்களின் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு சொல்ல சட்டங்கள் இல்லையா ?

வானதி: நிறைய இருக்கின்றன. வரதட்சணை, பெண் சிசுக்கொ லை, பெண் சொத்துரிமை, ஈவ் டீசிங், குடும்ப வன்முறை என் று பல வற்றுக்கும் சட்டங்கள் வந்துவிட்டன. ஆனால், சட்டத் தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிப்பதுதான் அதிக மாக இருக்கிறது. சட்டங்களைச் செயல்படுத்துவதிலும் அரசு இய ந்திரம் மெத்தனமாக இருக்கிறது. அதேசமயம், பெண் கொடுமைக ள்  குறைந்திருக்கின்றன. குறிப்பாக வரதட்சணைச் சாவுகள்.

ஓவியா: இந்த சட்டங்கள் எல்லாம் முழுமையாக செயல்படுத்த அரசிய ல் அதிகாரம் பெண்கள் கையில் இருந்தால்தானே சாத்திய ம்!

ஷீலு: பெண்கள் முழுக்க அரசியலு க்குள் வருவதற்கு, நிலைமை இன் று சாதகமாக இல்லையே?

வானதி: ஆண்களின் ஆதிக்கமும் அராஜகமும் நிறைந்த இடமாக புரையோடிக் கிடக்கிறது அரசியல். அங்கு ஒரு பெண் ஜெயிக்க வே ண்டுமானால்… பொறுமை, அதீ த சகிப்புத் தன்மை, தளராத தைரியம் எல்லாமும் வேண்டு ம். அதைக் கற்றுக்கொடுக்கும் கல்வியும், ஊக்கப்படுத்தும் சமூக அமைப்பும் இங்கில்லை யே..!

சத்யா: பெண்கள் அரசியலுக்கு வந்தாலே அவர்களின் நடத் தையும் குணமும் விமர்சிக்கப் படுகிறது. ‘அவளா… மோசமானவ…’ என்ற விஷ வார்த்தைகளுக்கு ப் பயந்தே யாரும் வருவதில்லை. என் பேத்திகளாவது அரசியலில் ஆளுமைகளாகி சாதிப்பார் கள் என்று நம்புகிறேன்.

(அனைவரும் குலுங்கிக் குலு ங்கி சிரிக்கின்றனர்)

வானதி: அவ்வளவு வருடங் கள் காத்திருக்க வேண்டுமா சத்யா? 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைத்தால்… நிச் சயம் அரசியலின் முகம் மா றும். சமீப வருடங்களில் சடசடவென மேலெழும்பி வந்துள்ள பெண் களின் நிலை அதற்கான நம்பிக்கையைத் தருகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்… பெண்கள் கல்வியில், ஆரோக்கிய த்தில், வேலை வாய்ப்பில் முன் னே றி இருக்கிறார்கள். அதே சமய ம் அதை ஒட்டி நிறையச் சவால் களும் உருவாகியிருக்கின்றன என்பதையும் ஒப்புக் கொள்ள வே ண்டும். அந்தச் சவால்களை எதிர் கொண்டு ஜெயிப்பதே உண்மையான பெண் விடுதலை!

விவாதித்தவர்கள்

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம். 
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply